இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•6:16:00 PM

















அஸ்கிபுஸ்கி : இப்படி ஒரு ப்ளாக் இருக்கிறதை யாரும் மறந்துடக் கூடாது இல்ல.. அதான் இந்த போட்டோ பதிவு.. சோம்பேறித் தனத்தின் காரணமாகவும் தெரியாததாலும் பிபி எதும் செய்யவில்லை.. பார்டர் தவிர.. அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

Author: Sanjai Gandhi
•9:20:00 AM
படங்களின் மேல் க்ளிக் பண்ணுங்க. பெரிய திரையில் தெரியும்.
கிணற்றில் விளையாடிக் கொண்டிருந்த மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் 5 அல்லது 10 நிமிட தாமதத்தால் கீரி - பாம்பு சண்டையை தவற விட்டுவிட்டேன். ரொம்ப பெரிய நாகப் பாம்பு. 2 கைகளாலும் தூக்கி தான் புதரில் விச முடிந்தது. அவ்வளவு கனம். போர்க் களம் : பருத்தி வயல்.
ரூம் போட முடியலைனாலும் மரத்தடியில உக்கார்ந்து யோசிப்போம்ல.. இங்கிருந்து வலது புறம் 10 அடி தூரத்துல தான் அந்த கீரி - பாம்பு சண்டை நடந்திருக்கு.
இதுக்குப் பேர் மானம். அரிசி பருப்பு ஆகியவற்றை அளக்க பயன்படுத்துவார்கள். இப்போதும் வீட்டில் பயன்படுத்துகிறோம். இதைவிட 2 மடங்கு அதிக கொள்ளளவு இருந்தால் அதற்கு “படி” என்றும் படியைவிட 4 மடங்கு பெரிதாக இருந்தால் “ வல்லம்” என்றும் பெயர். தானியங்களை வல்லத்தில் அளந்து தான் மூட்டை கட்டுவார்கள். அதில் அளந்து தான் விற்பனையும் செய்வார்கள்.
தேக்கு பூ மற்றும் காய்கள்.
தொட்டியில் நிறைந்து வயலுக்குப் போகும் தண்ணீர்.. அழகா இருக்குல? :)
வெங்காயப் பூக்கள்
சிக்கடிக்காய்.. பொரியல் ரொம்ப சுவையா இருக்கும்.
அந்த காலத்து ”நிஜக் கதைகளை” சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு தாத்தா . அவருக்கு வலதுபுறம் தென்னை மர நிழலில் அமர்ந்து ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். விரைவில் அதை சொல்கிறேன். நம்ப முடியுதா பாருங்க. எல்லாம் நிஜம் என்கிறார். :)
இதுக்கு பேர் தெரியலை. மறந்து போச்சி. இதோட விதைகள் கடுகு மாதிரி இருக்கும். இதை கடுகில் கலப்பதாகவும் சொல்வார்கள். வித்தியாசம் தெரியாது.
சென்ற மாதம் சிறு செடியாக பார்த்த முலாம்பழம் செடியில் இப்போது காய்கள்.
ஆவாரம் பூ.. இப்போ எல்லாம் இருக்கும். பொங்கல் சமயத்தில் படையலுக்கு வைக்க தேடினால் கிடைக்காமல் அலையவிடும். :)
சென்ற மாத சுவடுகளில் பார்த்த அதே காட்டாமணக்கு தான், இப்போ பூ விட்டு பார்க்க அழகா இருக்கு. குசும்பன் சொன்னது போல் இதில் வரும் திரவம் மூலமும் ஹூக்கின் நுனியில் முட்டை விடலாமாம். யூ ஆர் ரைட் மிஸ்டர் குசும்பன். ;)
மரவள்ளிக் கிழங்கு செடிகள்.
படம் புடிச்ச மாமனுக்கு அக்கா மகள் அடிக்கும் விசில். சத்தம் கேட்குதா? :)) நான் விசில் அடிச்சதை பார்த்து பழகும் தீக்‌ஷிதா. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

Author: Sanjai Gandhi
•9:30:00 AM
[படங்களின் மீது கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்]


[எருக்கங்காய் - இன்னும் சில நாட்களில் வெடித்து பாராசூட் மாதிரி விதைகளுடன் பஞ்சுகள் பறந்து சென்று பல இடங்களிலும் செடிகள் முளைக்கும்.. கூட்டம் கூட்டமாக காற்றின் திசைகளில் பறந்து செல்வதைப் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்]

ஜொள்ளம்(பழம்) மரம் - இதன் பழத்தில் விதையை சுற்றி பிசின் மாதிரி கெட்டியான திரவம் இருக்கும். கிழிந்த நோட்டுப் புத்தகங்களை ஒட்டுவதற்கு இதைத் தான் பயன்படுத்துவோம். நல்ல கோந்து.

மணி(க்கி)த்தாம் பழம். நிறைய சாப்பிடலாம். நல்ல சுவையாக இருக்கும். காய் பச்சையாகவும் பழம் அடர் நீல நிறத்தில் இருக்கும்.

சிவப்பு எறும்பு. அபாயகரமானவர்கள். ஒட்டும் தன்மையுள்ள பஞ்சு போன்ற திரவத்தை வெளியிட்டு அதன் மூலம் அருகருகே உள்ள இலைகளை ஒன்றிணைத்து கூடு கட்டுகின்றன. ஆயிரக்கணக்கில் ஓரிடத்தில் வாழும். கீழே இருக்கும் படத்தில் எறும்புகள் தெளிவாகத் தெரியும்.

படத்தை அமுக்குங்க. சிவப்பு எறும்புகளைத் தெளிவாகப் பார்க்கலாம்.

கரும்பு வெட்டி முடிந்த பின் கரும்பு வயல்
ஆட்டுக்கு இலை சேகரிக்கும் பெரியவர்
இந்த துளைக்குள் புரைத் தேன் கூடு இருக்கு. புதருக்கு உள்ளே இருப்பதாலும் தேனீக்கள் அதை சுற்றி பறந்துக் கொண்டிருந்ததாலும் இதற்கு மேல் கையை நீட்டி படம் பிடிக்க முடியவில்லை. மேலிருந்து ஜூம் செய்தால் சிறு சிறு செடிகள் மறைத்துக் கொண்டு இம்சை செய்தன. :(

ஊமத்தம் கொடி. நெல் வயலுக்கு மிகச் சிறந்த இயற்கை உரம். நெல் பயிர் நடுவதற்கு முன் சேற்றில் இதை போட்டு ஏர் ஓட்டுவார்கள்.
இந்த செடி பேர் மறந்து போச்சி. இதன் விதைகளை எடுத்து கடுகில் கலந்து விற்பதாக சொல்வார்கள். கடுகின் ஜெராக்ஸ் போலத் தான் இதன் விதைகளும் இருக்கும். இன்னொரு படத்தில் வெடித்த நிலையில் இதன் காய்கள் பார்க்கலாம்.

பிடுங்கி எறியப் பட்ட பருத்தி செடிகளின் குவியல். கேஸ் பயன்படுத்துவதற்கு முன் இது தான் விறகு.

மர நாய்கள் தென்னை மரத்தில் ஏறி, வாயால் கடித்து ஓட்டைப் போட்டு இளநீரைக் குடித்துவிடும். பிறகு சில நாட்களில் இந்த தேங்காய்கள் கீழே விழுந்துவிடும். ஒவ்வொரு மரத்திலும் இரவில் ஏராளமான தேங்காய்களை மரநாய்கள் இப்படி காலி செய்துவிடும். மிச்சம் மீதி தான் நமக்கு. :)

சென்ற கிராமத்து சுவடுகளில் பின் ஹூக் மூலம் முட்டை விடுவது பற்றிய குழப்பத்திற்காக இதைத் தேடிப் பிடித்தேன். நாங்கள் இதில் இருந்து கிடைக்கும் திரவத்தின் மூலம் தான் ஹூக்கின் பின் பகுதி வளையத்தில் முட்டை விடுவோம். :) . அதே போல் குசும்பன் சொன்னதும் சரி தான். அந்த செடியிலும் இது போல் திரவம் சுரக்குமாம். பூ பூத்திருக்கும் அந்த செடியில் படம் அடுத்த பகுதியில்.
சென்ற மாத சுவடுகளில் பதியம் போட்டு வைத்திருந்த தர்பூசணி செடிகள் தான் இப்போது வயலில்.
அடுத்த பகுதியில் “ 5 நிமிடத்தில் தவற விட்ட கீரி - நாகம் சண்டையின் ஒரு சோக முடிவு” ... Stay Logged in..
பழய சுவடுகள்

பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..