இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•11:31:00 AM
.அறுவடை முடிந்து புல் வளர்ந்திருக்கு.
.கரும்புப் பூ.
. குட்டி ஆடும்.. குட்டிப் போட்ட ஆடும். மேய்ச்சல் முடிந்து எஜமானருடன் வீடு திரும்புகிறார்கள்.
.குட்டிப் போட்ட ஆடு எஜமானரை கடந்து போவதற்கு சற்று முன்.
.உப்பும் மிளகாய்ப் பொடியும் கலந்து வைத்துக் கொண்டு புளியங்காய் சாப்பிட்டால். ஆஹா.. ஓஹோ.
.கிராமத்து எல்லை வேலிகள். எல்லாரும் தங்கள் நில வரம்பை சுற்றி கல்கட்டு கட்டி வைத்திருபபர்கள்.
.ஒழுக்கம் பிள்ளையார். இவருக்கு ஆடு மாடு போன்ற சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இப்படி வைத்து வேண்டிக் கொண்டால் ஆடு , மாடுகளின் கரு கலையாது என்பது நம்பிக்கை. பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் இவருக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபடுவது தவறாமல் நடக்கும்..பந்தலில் பாவக்கா தொங்கும் போது கொய்யா மரத்தில் பூசணிக்கா தொங்கக் கூடாதா?.
.வயலுக்கு செல்ல ஒத்தையடிப் பாதை..சூரியன் காயுது. நேரம் கெட்ட நேரம். மர நிழலில் கயித்துக் கட்டில் தூக்கம்.. சொர்க்கம். முன்பெல்லாம் இரவிலும் இங்கு தான் தூங்குவேன்.கொட்டகையின் வாசல்(களம்).
.தண்ணீர்த் தொட்டி. இது நிரம்பி அருகில் இருக்கும் வயலுக்கு தண்னீர் செல்லும். இதைவிட உயரத்தில் இருக்கும் வயலுக்கு குழாய் வழியாக தண்ணீர் போகும் போது அழுத்தத்தை சமாளிக்க இந்த குழாயின் மூடியில் சிறிய துளை போட்டிருக்கிறோம். அதில் தண்ணீர் வெளியேறி சில மீட்டர் உயரத்தில், சில மீட்டர் நீளத்தில் வீணாக விழும். அதன் மேல் ஒரு டப்பாவை கவிழ்த்து விட்டால் தொட்டியிலேயே தண்ணீர் விழும்..
.நம்ம சொந்தக்காரங்க தான்.
.நெல் அறுவடை முடிந்த பின். இப்போல்லாம் நெல் அறுப்பதும் இயந்திரத்தில் தான்.
.பருத்தி செடி.
.வானுயர்ந்த சோலையிலே. நான் நடந்த பாதை எல்லாம். கரும்புப் பூ.

மேலும் சில படங்களுக்கு
My Village On Jan 2009
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..