Author: Sanjai Gandhi
•11:31:00 AM

.அறுவடை முடிந்து புல் வளர்ந்திருக்கு.

.கரும்புப் பூ.

. குட்டி ஆடும்.. குட்டிப் போட்ட ஆடும். மேய்ச்சல் முடிந்து எஜமானருடன் வீடு திரும்புகிறார்கள்.

.குட்டிப் போட்ட ஆடு எஜமானரை கடந்து போவதற்கு சற்று முன்.

.உப்பும் மிளகாய்ப் பொடியும் கலந்து வைத்துக் கொண்டு புளியங்காய் சாப்பிட்டால். ஆஹா.. ஓஹோ.

.கிராமத்து எல்லை வேலிகள். எல்லாரும் தங்கள் நில வரம்பை சுற்றி கல்கட்டு கட்டி வைத்திருபபர்கள்.

.ஒழுக்கம் பிள்ளையார். இவருக்கு ஆடு மாடு போன்ற சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இப்படி வைத்து வேண்டிக் கொண்டால் ஆடு , மாடுகளின் கரு கலையாது என்பது நம்பிக்கை. பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் இவருக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபடுவது தவறாமல் நடக்கும்.

.பந்தலில் பாவக்கா தொங்கும் போது கொய்யா மரத்தில் பூசணிக்கா தொங்கக் கூடாதா?.

.வயலுக்கு செல்ல ஒத்தையடிப் பாதை.

.சூரியன் காயுது. நேரம் கெட்ட நேரம். மர நிழலில் கயித்துக் கட்டில் தூக்கம்.. சொர்க்கம். முன்பெல்லாம் இரவிலும் இங்கு தான் தூங்குவேன்.கொட்டகையின் வாசல்(களம்).

.தண்ணீர்த் தொட்டி. இது நிரம்பி அருகில் இருக்கும் வயலுக்கு தண்னீர் செல்லும். இதைவிட உயரத்தில் இருக்கும் வயலுக்கு குழாய் வழியாக தண்ணீர் போகும் போது அழுத்தத்தை சமாளிக்க இந்த குழாயின் மூடியில் சிறிய துளை போட்டிருக்கிறோம். அதில் தண்ணீர் வெளியேறி சில மீட்டர் உயரத்தில், சில மீட்டர் நீளத்தில் வீணாக விழும். அதன் மேல் ஒரு டப்பாவை கவிழ்த்து விட்டால் தொட்டியிலேயே தண்ணீர் விழும்..

.நம்ம சொந்தக்காரங்க தான்.

.நெல் அறுவடை முடிந்த பின். இப்போல்லாம் நெல் அறுப்பதும் இயந்திரத்தில் தான்.

.பருத்தி செடி.

.வானுயர்ந்த சோலையிலே. நான் நடந்த பாதை எல்லாம். கரும்புப் பூ.
மேலும் சில படங்களுக்கு
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
20 Comments:
me the first
nijamave urukku poittu vanthingala
ஹூம்..எங்கள காட்டுக்கு தொரத்தீட்டு
வீட்டுக்கு...
அழகாயிருக்கின்றது படங்கள் புகையேதும் இல்லாமல்
கொடுத்துவெச்ச ஆசாமிய்யா! மிகச் சிறந்த இயற்கைச் சூழலா இருக்கு!!!
ippidi oru blog irukkarathu ippovavathu niyabagam vanthuthe...good..:-)
படங்கள் கமென்ட்ஸ் சூழல் எல்லாம் அருமை. இயற்கையை பிக்காஸாவிலும் ரசித்து விட்டு வந்தேன். வானின் நீலநிறம் அட்டகாசமாய் வந்திருக்கிறது. [பிற்தயாரிப்பு செய்யாதவை என்றே நினைக்கிறேன், சரிதானா?]
பகிர்தலுக்கு நன்றி.
அப்படியே எங்க ஊருக்கு போய்ட்ட்டு வந்த மாதிரி இருக்கு.
புளியங்காய் ....ம்ம்ம் அப்புறம் அந்தக் கரும்பூ ரொம்ப அழகு...படங்கள் பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பாடலை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
அன்புடன் அருணா
ரொம்ப நன்றி ப்ரியாக்கா.. :)
கும்கி,
காட்ல போய் ஜாலி பண்ணிட்டு தான வந்திங்க.. எதோ பிடிக்காத இடத்துக்கு போன மாதிரி.. :)
ரொம்ப நன்றி ஜமால் :)
பரிசலாரே நன்றிங்க..
3 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்த இயற்கை சூழலுக்கு மத்தியில தான் வீடே இருந்தது. அப்போ எல்லாம் இதை ரசிக்க தோன்றியதே இல்ல.. இப்போ தான் ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு.. :(
இயற்கை விஞ்ஞானி,
உங்களைப் போன்ற சிலரின் மிரட்டலுக்காகத் தான் இந்த பதிவும்.. விரைவில் வேறு விஷயங்களையும் எழுதறேன்.. :)
--------
ரொம்ப நன்றி லக்ஷ்மியக்கா.. உங்களைப் போல நான் புகைப்பட வல்லுநர் எல்லாம் இல்லை.பிற்சேர்க்கைக்கு மெனக் கெடவில்லை. பிக்காசாவில் திறந்து I am feeling Luckyயை மட்டும் பயன்படுத்தினேன். வானின் நீல நிறம் உள்ளபடியே தான் இருக்கு. அப்போது வானம் அப்படித் தான் இருந்தது. மதியம் 3 மணிவாக்கில் என்று நினைக்கிறேன்.
---------
நன்றி வித்யா..
உங்க ஊர் எது? சஞ்சய் நலமா?
நன்றி அருணாக்கா. :)
படங்கள் அருமை....பழய ஞாபகங்கள் வருகின்றன....மிக்க நன்றீ...
எங்க ஊரிலும் இதெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது..
அடடடா... அப்படியே ஊருக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு. வெறும் புகைபடங்களை மட்டும் வைத்தே அருமையா பதிவை போட்டிருக்கீங்க. அனேகமாக இப்போ இது எல்லாம் ஒரு சில இடங்களில் மட்டுமே பார்த்து அனுபவிக்க முடியும்.
கொய்யா மரத்தில் கொடியில் தொங்குவது "அரசாணி/பறங்கி" காய் தானே? பூசணி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்?
படங்கள் அருமையாக உள்ளன..
தேவா.
உங்க கிராமம் ரொம்ப அழகா இருக்கு...
அதிலும் அந்த தண்ணீர்தொட்டி இருக்கிற படம் பார்த்ததும் உங்க கிராமத்திற்கு வரனும்னு ஆசையா இருக்கு.
நன்றி ஷர்மா.. :)
...................
தூயா, உங்க ஊரில் மீண்டும் நிரந்தரமாய் இப்படி எல்லாம் மாறும்..
...................
ராசுக்குட்டி, இது பூசணிக்காய் தான்.. சர்க்கரைப் பூசணி. பெரிய சைஸ் இருக்காது.. பெரிய சைஸ் பூசணியும் மரத்தில் தொங்கிக் கொண்டே வளரும். நாம் பறிக்கும் வரை. :)
...................
மிக்க நன்றி தேவா.. :)
...................
கலாட்டா அம்மணி, எப்போ வரீங்க சொல்லுங்க.. உங்களுக்காக எங்க ஊர் காத்துட்டு இருக்கு. :)
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் அங்கு தான் குடி இருந்தோம். எங்கள் சொந்த உபயோகத்திற்காக கட்டியது தான் அந்த தண்ணீர்த் தொட்டி. இப்போது அது வயல்களுக்கும் மாடுகளுக்கும் மட்டும் பயன்படுத்தப் படுகிறது.
\\ SanJaiGan:-Dhi said...
கலாட்டா அம்மணி, எப்போ வரீங்க சொல்லுங்க.. உங்களுக்காக எங்க ஊர் காத்துட்டு இருக்கு. :)\\
இப்படியெல்லாம் கூப்பிடாதீங்க அப்புறம் உடனே வந்துடுவேன்,
உங்க ஊர் பாவம், நம்ம கையில கஷ்டப்பட வேண்டாம்....
அட வாங்க அம்மனி.. எங்களையே தாங்கிகிட்ட ஊர்.. உங்கள கஷ்டத்துக்கு எல்லாம் பயப்படுமா?..வாங்க.. வாங்க.. :)
சஞ்சய்,
அரசாணி என்பதும் சர்க்கரைப்பூசணி என்பதும் ஒன்றுதான்... எங்கள் ஊரில், இது அரசாணிதான்!! :-0)