இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•9:55:00 AM
இதுவும் குழுவிளையாட்டு. அணி விளையாட்டு அல்ல. விளையாடும் எல்லோரிடமும் ஒரு நீளமான குச்சி இருக்கும். இஸ்கோல்ல வாத்தியாருங்களாண்ட ஒதை வாங்குவமே.. அதே மாதிரி குச்சி. :) . இப்போது குழுவில் ஒரு பலி ஆடு தேர்ந்தெடுக்கனும்.

பிறகு ஒரு வட்டம் போட்டு அதன் மத்தியில் அந்த பலியாட்டின் குச்சியை வைத்துவிட வேண்டும். பெரும்பாலும் எதாவது ஒரு மரத்துக்கு கீழ் தான் ஆட்டம் ஆரம்பிக்கும். பாதி வானரங்கள் மரத்துக்கு மேலையும் மீதி எல்லாம் கீழ இருக்கும்.

பலியாடு அந்த குச்சியை பாதுகாத்து பக்கத்தில் நிற்பான். மற்றவர்கள் அவனை ஏமாற்றி அந்தக் குச்சியை தங்கள் கையில் உள்ள குச்சியின் மூலம் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது வட்டத்தில் உள்ள குச்சிக்கு சொந்தக் காரன் யாரை தொடுகிறானோ அவன் அவுட். அடுத்து அவன் பலியாடாக வேண்டும்..

ஒருவேளை அவன் தொடுவதற்குள் குச்சியை தள்ளுபவன் பக்கத்தில் எதாவது ஒரு கல்லின் மீது அவன் குச்சியை தொட்டுக் கொண்டு இருந்தால், அவனை அவுட் ஆக்க முடியாது. அப்போது வேறு ஒருவன் கீழே இருக்கும் குச்சியை தள்ளிக் கொண்டு போவான். அவனை தொட முயற்சிக்கும் போது குச்சியை தள்ளிக் கொண்டு போனவன் எதாவது ஒரு கல்லின் மீது தன் கையில் இருக்கும் குச்சியை வைத்துக் கொள்வான். அந்த சமயத்தில் மற்றொருவன் வருவான். சில இடங்களின் அருகாமையில் கல் எதுவும் இருக்காது. அப்போது எவனாவது மாட்டிக் கொள்வான்.

பிறகு அவனை வைத்து காமெடி கீமெடி எல்லாம் பண்ண வேண்டும். எப்படியும் ஒவ்வொரு முறையும் 2 அல்லது 3 கிலோ மீட்டர் வரையிலும் குச்சியை தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள். சில சமயங்களில் 10 கிலோ மீட்டர் தூரம் எல்லாம் போய் இருக்கிறோம். :)

இது சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டுமே விளையாட முடியும். காரணம், இதற்கு அதிக நேரம் தேவைப்படும். சனி ஞாயிறில் ஊர் சாலைகளில் போக்குவரத்து இருக்கோ இல்லையோ எங்கள் சாணாங்கோல் போக்குவரத்து நிச்சயம் இருக்கும். :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

This entry was posted on 9:55:00 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

53 Comments:

On November 16, 2008 at 4:55 PM , said...

இந்த விளையாட்டை நான் கேள்விப்பட்டதுக்கூட இல்லை. இப்போதும் வழக்கில் இருக்கிறதா என்ன??

 
On November 16, 2008 at 6:23 PM , said...

வாங்க மம்மி :)

இங்க நான் எழுதறது பெரும்பாலும் வழக்கொழிந்தவைகள் மட்டுமே :(

இந்த விளையாட்டு இப்போது இல்லை.

 
On November 16, 2008 at 7:40 PM , said...

// சனி ஞாயிறில் ஊர் சாலைகளில் போக்குவரத்து இருக்கோ இல்லையோ எங்கள் சாணாங்கோல் போக்குவரத்து நிச்சயம் இருக்கும். :)//

இதோ பார்டா இவரு ஊருல ரோடு இருக்குதாம்மா!!! எல்லோரும் சிரிக்காம நம்புங்கப்பா!!!

மாம்ஸ் சொல்லிட்டேன் எல்லோரும் நம்பிடுவாங்க!!!

 
On November 16, 2008 at 8:16 PM , said...

இண்ட்ரெஸ்டிங். இந்த விளையாட்டு எப்படி எங்களுக்கு தெரியாதே போயிட்டு? கில்லி எல்லாம் விளையாடியிருக்கேன் அண்ணன்மாருடன்.

 
On November 17, 2008 at 8:15 AM , said...

யோவ் குசும்பா.. எங்க ஊர் என்ன 30 வீடு ஊரா? பஸ் வராம இருக்க? :)))

 
On November 17, 2008 at 8:16 AM , said...

லக்‌ஷ்மியக்கா.. அதுதான் இப்போ தெரிஞ்சிடுச்சே.. இனி குட்டீஸ்க்கு சொல்லிக் குடுங்க.. அவங்க விளையாடட்டும். :)

 
On November 17, 2008 at 11:29 PM , said...

அடடடடா... மிக நன்றாக நினைவில் உள்ள மிக அனுபவித்து விளையாடிய விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

நாங்கள் விளையாடும் போது பலியாட்டை தேர்ந்தெடுக்கும் முறை இதோ - ஆட்டத்தில் பங்கு பெறும் எல்லோரும் வட்டத்தில் குமிந்து நின்று கொண்டு குச்சியை கால்களின் இடையே வீசி விட வேண்டும். யாருடைய குச்சி பக்கத்தில் இருக்கிறதோ அவர்கள் தான் பலியாடு. பெரும்பாலும் வயதில் சின்னவர்கள் தான் மாட்டிக்கொள்வார்கள் (தூரமாக வீச முடியாததால்). மண் தரையில் ஆரம்பித்து பலியாட்டின் குச்சியை கஷ்டப்பட்டு தார் சாலைக்கு எடுத்து சென்று விடுவோம். அப்புறம் அவ்வளவு தான். பலியாடு பாடு ரொம்பவுமே சிரமம். தார் சாலையில் எல்லாமே கல்லாக இருப்பதால் தட்டிக்கொண்டே ஓட வேண்டியது தான். ஒரு சில சமயங்களில் ஆட்ட விதிமுறையின் படி பலியாடு நாம் குச்சியை வைத்திருக்கும் கல்லை கடித்து கொஞ்சம் பொடித்து காட்டிவிட்டால் நாம் அவுட் ஆகிவிட்டோம். அதனால் நாம் குச்சியை வைக்கும் கல்லையும் பார்த்து தான் வைக்க வேண்டும் (காக்கா பொன் இருக்கும் கல்லை (கிணறு தோண்டும் போது எடுக்கும் கல்) எளிதில் கடித்து விட முடியுமாதலால் மிக ஜாக்கிரதையாக தான் நாம் குச்சியை வைக்கும் கல்லை பார்த்து வைக்க வேண்டும்)... இது எல்லாம் விட பலியாடு மற்றொருவரை அவுட் ஆக்கிய இடத்தில் இருந்து ஆட்டம் ஆரம்பித்த இடம் வரையிலும் நொண்டிக்கொண்டே வரவேண்டும். இது தான் மிக சிரமம் (பல கிலோ மீட்டர் நொண்டி வந்து நொந்து போனவர்கள் பலர்.) - இப்படி எல்லாம் விளையாட்டுகளின் வாயிலாக சிறுவர்களில் உடல் ஆரோக்கியமாக இருந்தது அப்போது. ஆனால் தற்போதோ எல்லா சிறார்களும் டிவி, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து விடுகின்றனர். உடல் அசருமாறு விளையாட்டுகளே குறைந்து போய் விட்டன.

பழைய நியாபகங்களை அசை போட வைத்தமைக்கு நன்றி பொடியன் அவர்களே.

இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றாக உங்கள் பதிவில் பார்த்து மகிழலாம் என்று காத்திருக்கிறேன்.

 
On November 18, 2008 at 8:25 AM , said...

ஆஹா ராசுக்குட்டி.. சூப்பரப்பு.. நங்களும் இப்படித் தான் விளையாடுவோம்.. நான் விட்டதை எல்லாம் பொறுப்பா ரொம்ப அருமையா சொல்லி இருக்கிங்க.. ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே.. :)

 
On November 18, 2008 at 8:25 AM , said...

ராசுக்குட்டி .. நீங்க எந்த ஊர்?

 
On November 18, 2008 at 8:04 PM , said...

கோயமுத்தூர் தாங்க சொந்த ஊரு. ஆனா இப்போ இருக்கறது நியூ யார்க்ல...

 
On November 18, 2008 at 9:34 PM , said...
This comment has been removed by the author.
 
On November 18, 2008 at 9:35 PM , said...

என்னங்ணா விளையாட்டு இது? எனக்கு தெரியலை..

 
On November 18, 2008 at 9:38 PM , said...

நீங்களும் நம்ம ஊரு தானா?
Mr. ராசுக்குட்டி.

 
On November 19, 2008 at 1:00 AM , said...

ஆமாங்க. கோயம்புத்தூர்ல நீங்க எந்த இடம்?

 
On November 19, 2008 at 12:47 PM , said...

// ராசுக்குட்டி said...
ஆமாங்க. கோயம்புத்தூர்ல நீங்க எந்த இடம்?//

ஆமாங்க அதே தாங்க..

 
On November 19, 2008 at 7:23 PM , said...

//என் பதிவுகள்/En Pathivugal said...
ஆமாங்க அதே தாங்க..//

ஆ... நீங்க கோயம்புத்தூர்ல எங்கே இருக்கீங்கன்னு கேட்டேன்...

அடுத்த விளையாட்டு பற்றிய விளக்கம் எப்போது பொடியன் நண்பரே?

 
On November 19, 2008 at 7:30 PM , said...

அட.. பூர்ணி உங்களுக்கும் இது தெரியாதா? இதை படிச்சிட்டு பசங்களுக்கு சொல்லிக் குடுங்க.. :)

 
On November 19, 2008 at 7:31 PM , said...

ராசுக்குட்டி நான் கணபதில இருக்கேன்.. :)

நம்மூர்ல நீங்க எந்த ஏரியா? :)

பூர்ணி எந்த ஏரியா?

 
On November 19, 2008 at 11:17 PM , said...

வாவ்... நீங்களும் பக்கத்திலயே தான் இருக்கீங்க... (1m நம்பர் பேருந்து ஏறினால் வந்து விடலாம் நீங்கள் இருக்கும் இடத்துக்கு). அடுத்த தடவை நம்ம ஊருக்கு வரும் போது சந்திக்க முடிகிறதா என்று பார்க்கலாம்.

வடவள்ளி தாங்க பிறந்து வளர்ந்த இடம். உங்களுடைய முந்தைய பதிவில் கூறியிருக்கும் பெரும்பாலான விளையாட்டுகள் விளையாடியதும், அனுபவித்து மகிழ்ந்ததும் இங்கே தாங்க.

 
On November 20, 2008 at 9:12 AM , said...

coimbatore is my native but now living in chennai..
எல்லாம் வேலை நிமித்தமாய் தான்..

 
On November 20, 2008 at 10:01 AM , said...

..ஓ... ராசுக்குட்டி வடவள்ளியா.. என் பள்ளிக்கூட நண்பர்கள் பலர் அங்கு தான் இருக்கிறார்கள். :)

 
On November 20, 2008 at 10:02 AM , said...

பூர்ணி.. வேலையா தான் சென்னைல இருக்கிங்களா? அடுத்த முறை ஊருக்கு வரும் போது கால் பண்ணுங்க. :)

 
On November 20, 2008 at 2:49 PM , said...

கண்டிப்பாங்க..

 
On November 20, 2008 at 7:57 PM , said...

//:) No bad words please//...hehehe....
This is too good!

Ketathey illaye intha velayattu pathi.. :) Unmaya ipdi onnu irukuthaney? :P

 
On November 20, 2008 at 11:32 PM , said...
This comment has been removed by the author.
 
On November 23, 2008 at 9:34 PM , said...

//மற்றவர்கள் அவனை ஏமாற்றி //

adutha vaanga yemathrathai antha vayasulaye solli kudutharranga...

 
On November 25, 2008 at 3:56 PM , said...

இந்த விளையாட்டை நான் கேள்விப்பட்டதுக்கூட இல்லை.

ஆமாங்க நானும்தான்

 
On December 13, 2008 at 11:36 PM , said...

சஞ்சய்.. மெயாலுமே நீங்க என் மாணவ பருவத்திற்கு இட்டு சென்றுவிட்டீங்க.. நா படிச்சதெல்லாம் கிருஷ்ணகிரியில்தான். நீங்க சொன்னா மாதிரி இந்த விளையாட்ட அரம்பிச்சா இரவு 8 மணி வரை கூட நீளும்..
அன்புடன், கி.பாலு

 
On December 14, 2008 at 5:20 PM , said...

நன்றி நன்பரே
பழைய நினைவை கிளரிவிட்டீர்கள்
நானும் விளையாடியிருக்கேன்

////
நாங்கள் விளையாடும் போது பலியாட்டை தேர்ந்தெடுக்கும் முறை இதோ - ஆட்டத்தில் பங்கு பெறும் எல்லோரும் வட்டத்தில் குமிந்து நின்று கொண்டு குச்சியை கால்களின் இடையே வீசி விட வேண்டும். யாருடைய குச்சி பக்கத்தில் இருக்கிறதோ அவர்கள் தான் பலியாடு
////////

இதே தான் எங்கள் ஊரிலும்
குறிப்பாக இந்த விளையாட்டை தேங்காய் சுடும்நாள் என்று ஒரு தினம் வரும் அப்போதுதான் விளையாடுவோம்

 
On December 24, 2008 at 9:16 AM , said...

அருமை...

 
On December 26, 2008 at 6:43 PM , Anonymous said...

தலைவா நீ தான் அந்த லூஸ் கிட்ட எல்லாமே சமமான்னு கேட்டதா ! இந்நேரம் வீட்டில ஆட்டி வச்சிருக்கிற மாவை தலையில் தூக்கி ஊத்திக்கிட்டு ( கோபம் வந்தா அப்ப்டி தான் செய்வாரு) அழுதுகிட்டு இருக்கும் பாவம். அது லூசுங்க சீரியஸா ஏதாவது கேட்டா அதுக்கு தங்காது. ஏதோ ஞாபகத்தில உங்க பின்னூட்டத்தை விட்டு விட்டது. இல்லன்னா ஆங்கேயெ பிரான்டி உட்ருக்கும். அடுத்த வார் பதிவர் மீட்டிங்-ல் என்னைத் தனியாக் கூட்டிக்கிட்டு போய் உங்களை நானா தூன்டி விட்டேன் என்று கேட்கப் போவுது.அதாவ்து பரவாயில்ல அந்க் கருத்து லெக்சர் இருக்கே , கொடுமைடா சாமி. சிங்கை வந்தும் எனக்கு கருமம் தொலயலை.
சமயந்த ராஜீவன்

 
On December 26, 2008 at 7:24 PM , said...

தோத்துபோனவங்க நொண்டிகிட்டே வரணும்...மத்தவங்க எல்லோரும் கிண்டல் பண்ணி பாடுவாங்க....

எங்கூரு பன்னி...ஊர்மேய வந்து...கல்லாலடிச்சு..கால் நொண்டிப்போச்சு..

நீங்க தருமபுரியா...நான் கிருஷ்ணகிரி-ல படிச்சேன்...காரிமங்கலம்,காவேரிப்பட்டணம் வழியா போன நினைவுகள்:-)

 
On December 26, 2008 at 8:45 PM , Anonymous said...

எங்க ஊரில இதுக்குப் பேரு கடலா கரையா, கடல் பாதுகாபில்லாதது கரை பாதுகாப்பு (அதாங்க பக்கத்தில் இருக்கிற கல்) எனக்கே இந்த விளையாட்டெல்லாம் மறக்க இருந்தது. உங்கள் பதிவை காப்பி பன்னி வைத்திருகிறேன்.சிங்கையில் வாழ் குழந்தைகளுக்கு பீச்சில் வைத்து இதை அறிமுகப் படுத்த இருக்கிறேன். சிறு வயது விளயாட்டுகளை இது போல சேமிக்க வேன்டும். ஏங்க இந்தப் பதிவை போய் மொக்கைன்னு சொல்லிட்டீங்க ! பதிவு சூடாகலை நான் பிரபலம் தான் -என்று அழுகிற பதிவுகளை விடவா இது மொக்கை? என்னமோ போங்க.
சமயந்த ராஜீவன்

 
On December 26, 2008 at 10:19 PM , said...

இந்த விளையாட்டை நான் கேள்விப்பட்டதுக்கூட இல்லை.

ஆமாங்க நானும்தான்
//

ஆமாம் , நானும்தான்.

கோயமுத்தூர்லயே பொறந்து வளந்த எனக்கு இப்பிடி ஒரு வெளையாட்டு இருக்கறதே தெரியாம போச்சே??

என்ன கொடும சார் இது?

 
On December 30, 2008 at 11:09 AM , said...

இப்போது குழுவில் ஒரு பலி ஆடு தேர்ந்தெடுக்கனும்.

ஓகே தேர்ந்தெடுத்தாச்சி.அது யாருன்னு நான் சொல்லனுமா

 
On December 30, 2008 at 11:18 AM , said...

பிறகு ஒரு வட்டம் போட்டு அதன் மத்தியில் அந்த பலியாட்டின் குச்சியை வைத்துவிட வேண்டும்

நல்ல புல்லையா அந்த குச்சியை அந்த வட்டதுல வச்சிடுங்க

 
On December 30, 2008 at 11:22 AM , said...

பாதி வானரங்கள் மரத்துக்கு மேலையும் மீதி எல்லாம் கீழ இருக்கும்
நீங்க எப்படி மரத்துக்கு மேலயா இல்ல கீழயா.

நீங்க என்ன answer பண்ணாலும்
:))))))))))))
:))))))))))
:))))))))
:)))))
;))))
;)))
:)

 
On December 30, 2008 at 11:27 AM , said...

பிறகு அவனை வைத்து காமெடி கீமெடி எல்லாம் பண்ண வேண்டும்.

அடடா எனக்கு காமெடி கீமெடி பண்ண தெரியாது so நான் இந்த விளயாட்டுக்கு வரலா ஓகே.data bay

 
On December 30, 2008 at 9:02 PM , Anonymous said...

கருத்து கந்தசாமிக்கு சரியா டின் கட்றீங்க போல இருக்கு ! கழுத்தில இருக்கிற மொபௌல் அடிக்கிறசப்தம் கூட கேட்கமால் பித்து பிடித்த மாதிரி இருக்கிறார் , விட்டுத் தள்ளுங்க. அவுட்டிங்க் போன அன்னைக்கு புதிதா வந்தவருக்கிட்ட பேசின பேச்சை நினைத்து நினைத்து இன்னைக்கு வரைக்கும் நாங்க சிரிச்சோம். ஆனா அவரு ரொம்ப நல்லவருங்க நாங்க கின்டல் பண்றதுகூட தெரியாமா மகிழ்ந்து போவரு !
நீங்க போடுத் தாக்குங்க ! படிக்க நல்லா இருக்கு.கோமளியாரே என்று நீங்க விளிக்கலாம்

சமயந்த ராஜீவன்

 
On December 30, 2008 at 9:05 PM , said...

ஏய் காயத்ரி.. அடுத்த பதிவு போடுவீங்க இல்ல.. இருக்குமா உனக்கு.. :))

 
On December 30, 2008 at 9:06 PM , said...

அண்ணே ராஜீவன்.. யார்னே நீங்க.. சும்மா சரக்குனு வறீங்க.. சரக்குன்னு போறிங்க.. ஒரே மர்மமா இருக்கே சாமி.. :(

 
On December 31, 2008 at 10:39 AM , said...

SanJaiGan:-Dhi said...
ஏய் காயத்ரி.. அடுத்த பதிவு போடுவீங்க இல்ல.. இருக்குமா உனக்கு.. :))

iyyiyo onnum thereyathu chinna ponna eppdi meratranga parunga.itha kekka yrum illaya

 
On December 31, 2008 at 10:53 AM , said...

தோடா.. கொய்ந்த அழுவுது.. ;)
சரி சரி புத்தாண்டு சபதம் எதும் இல்லையா? :)

 
On December 31, 2008 at 12:11 PM , said...

SanJaiGan:-Dhi said...
தோடா.. கொய்ந்த அழுவுது.. ;)
சரி சரி புத்தாண்டு சபதம் எதும் இல்லையா? :)

illa illa naan rompa nalla ponnu naan entha palakathaum vettra mathiri illa pa.

 
On December 31, 2008 at 12:11 PM , said...

me they 45 th

 
On December 31, 2008 at 12:12 PM , said...

neenga enna than enna meratnalum naanga pathivu pottutomla

 
On December 31, 2008 at 12:13 PM , said...

உங்களுக்கு சபதம் எடுக்கிற பழக்கம் இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு இருக்கே..

சபதம் மற்றும் வாழ்த்துக்கள் - http://podian.blogspot.com/2008/12/blog-post_31.html

இதை பாருங்க :))

 
On January 2, 2009 at 5:19 PM , Anonymous said...

Happy new Year !! tampudu

by
Sigaapore Vasi.

 
On January 15, 2009 at 11:20 AM , said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com

 
On January 25, 2009 at 10:56 PM , said...

இந்த டிஜிடல் கிராமம் நல்லா இருக்கே...

 
On May 29, 2009 at 1:28 PM , said...

good

 
On July 14, 2009 at 6:55 PM , said...

சாணாங்கோல் எங்க ஊரில் எர்த் குச்சி என்ற பெயரில் விளையாடுவோம்.சாணாங்கோல்தான் சரியான பெயராக இருக்க முடியும் ஏனெனில் நீங்க கல்லில் தொடுவதைப் போல் நாங்கள் சாணியில் அல்லது புல் போன்ற தாவரங்களில் தொட்டுக் கொள்வோம். சில சமயம் கல் வைத்தும் விளையாடியிருக்கிறோம்.

இதை பற்றிய எனது பதிவு :click here

 
On September 6, 2009 at 8:56 AM , Anonymous said...

அருமையான பதிவு