•9:30:00 AM
[படங்களின் மீது கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்]
ஆட்டுக்கு இலை சேகரிக்கும் பெரியவர்
இந்த துளைக்குள் புரைத் தேன் கூடு இருக்கு. புதருக்கு உள்ளே இருப்பதாலும் தேனீக்கள் அதை சுற்றி பறந்துக் கொண்டிருந்ததாலும் இதற்கு மேல் கையை நீட்டி படம் பிடிக்க முடியவில்லை. மேலிருந்து ஜூம் செய்தால் சிறு சிறு செடிகள் மறைத்துக் கொண்டு இம்சை செய்தன. :(
ஊமத்தம் கொடி. நெல் வயலுக்கு மிகச் சிறந்த இயற்கை உரம். நெல் பயிர் நடுவதற்கு முன் சேற்றில் இதை போட்டு ஏர் ஓட்டுவார்கள்.
இந்த செடி பேர் மறந்து போச்சி. இதன் விதைகளை எடுத்து கடுகில் கலந்து விற்பதாக சொல்வார்கள். கடுகின் ஜெராக்ஸ் போலத் தான் இதன் விதைகளும் இருக்கும். இன்னொரு படத்தில் வெடித்த நிலையில் இதன் காய்கள் பார்க்கலாம்.
பிடுங்கி எறியப் பட்ட பருத்தி செடிகளின் குவியல். கேஸ் பயன்படுத்துவதற்கு முன் இது தான் விறகு.
மர நாய்கள் தென்னை மரத்தில் ஏறி, வாயால் கடித்து ஓட்டைப் போட்டு இளநீரைக் குடித்துவிடும். பிறகு சில நாட்களில் இந்த தேங்காய்கள் கீழே விழுந்துவிடும். ஒவ்வொரு மரத்திலும் இரவில் ஏராளமான தேங்காய்களை மரநாய்கள் இப்படி காலி செய்துவிடும். மிச்சம் மீதி தான் நமக்கு. :)
சென்ற கிராமத்து சுவடுகளில் பின் ஹூக் மூலம் முட்டை விடுவது பற்றிய குழப்பத்திற்காக இதைத் தேடிப் பிடித்தேன். நாங்கள் இதில் இருந்து கிடைக்கும் திரவத்தின் மூலம் தான் ஹூக்கின் பின் பகுதி வளையத்தில் முட்டை விடுவோம். :) . அதே போல் குசும்பன் சொன்னதும் சரி தான். அந்த செடியிலும் இது போல் திரவம் சுரக்குமாம். பூ பூத்திருக்கும் அந்த செடியில் படம் அடுத்த பகுதியில்.
அடுத்த பகுதியில் “ 5 நிமிடத்தில் தவற விட்ட கீரி - நாகம் சண்டையின் ஒரு சோக முடிவு” ... Stay Logged in..
பழய சுவடுகள்
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
28 Comments:
பாதி விஷயம் கேள்விப்பட்டிருக்கேன். மீதி பாதி புதுசு:)
உடனே நேரில் பார்க்கணும் போல இருக்கே...
//நோ டா செல்லம்..நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்...:)//
ஓகே கேட்டதுக்காக சொல்லலை :P
சிவப்பு எறும்புகளைத் தெளிவாகப் பார்க்கலாம்///
intha erumbu paathaale yenakku romba bayam:-(
// [எருக்கங்காய் - இன்னும் சில நாட்களில் வெடித்து பாராசூட் மாதிரி விதைகளுடன் பஞ்சுகள் பறந்து சென்று பல இடங்களிலும் செடிகள் முளைக்கும்.. //
ஓஒ........!!!! அப்புடியா ராசா......???!!!! மார்வலஸ் ......!!!! ஆஆவ்வ்வ்வ்வ்....!!!!
// கூட்டம் கூட்டமாக காற்றின் திசைகளில் பறந்து செல்வதைப் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்] //
ஓஒ.....!! நெம்ப அழகா இருக்குமா.........???
// ஜொள்ளம்(பழம்) மரம் - இதன் பழத்தில் விதையை சுற்றி பிசின் மாதிரி கெட்டியான திரவம் இருக்கும். //
என்னது ....... அசின் மாதிரி இருக்குமா........??? அட......!!!!!
//கிழிந்த நோட்டுப் புத்தகங்களை ஒட்டுவதற்கு இதைத் தான் பயன்படுத்துவோம். நல்ல கோந்து. //
ரூவா நோட்டையும் ஓட்டலாமுங்களா தம்பி.......?? ஆஅவ்வ்வ்வ்.....!!!!
// மணி(க்கி)த்தாம் பழம். நிறைய சாப்பிடலாம். //
கிலோ எவ்வளவுங்கோ தம்பி.........???
// நல்ல சுவையாக இருக்கும்.//
ஓஒவ்.........!!! அவ்வையார் குடுத்தி நெல்லி கனி போலவா.........???
// காய் பச்சையாகவும்...//
அப்புடீனா கிரீன் கலருங்களா தம்பி.......????
// பழம் அடர் நீல நிறத்தில் இருக்கும். //
டார்க் ப்ளூ ......?? ? ஓஓஓஒவ்வ்வ்வ்வ்.........!!! அன்பிலீவபுள்.....!!!!
ஓஒ....!! சாரி ...... ஆச்சுவளி ஐ ஆம் ப்ரம் யு . எஸ் .......!!!!
// சிவப்பு எறும்பு. அபாயகரமானவர்கள். //
ஓஒ....!!! ஆண்டி டெர்ரர் .....!! ஓப்... சாரி டெரர் ஆன்ட்ஸ்...!!!
/// ஒட்டும் தன்மையுள்ள பஞ்சு போன்ற திரவத்தை வெளியிட்டு அதன் மூலம் அருகருகே உள்ள இலைகளை ஒன்றிணைத்து கூடு கட்டுகின்றன. ////
பெரிய ஆராச்சிதானுங்கோ தம்பி.....!!!!
// ஆயிரக்கணக்கில் ஓரிடத்தில் வாழும். //
அப்புடீனா இவிங்ககோடா கட்சி ஒன்னு ஆரம்புச்சு ..... எம் . பி ... எலக்சன்ல சீட் கேக்கலாமுங்கோ தம்பி......!!!!!
// கீழே இருக்கும் படத்தில் எறும்புகள் தெளிவாகத் தெரியும். ///
ஓஒ....!!! நேம்போ தெளிவா இருக்குதுங்கோ தம்பி.....!!! ஆவ்வ்வ்வ்......!!!!
//// படத்தை அமுக்குங்க. சிவப்பு எறும்புகளைத் தெளிவாகப் பார்க்கலாம். ///
ஐயோ .... ஏனுங்கோ தம்பி ..... படம் மாநிட்டருகுள்ள இருக்குது ....!!!!! மானிட்டர அமுக்குனா ஒடஞ்சு போயிராது......!!!!
//// கரும்பு வெட்டி முடிந்த பின் கரும்பு வயல் ///
ஓஒ..... !!! சான்ஸே இல்லீங்கோ தம்பி.....!! இதெல்லாம் எங்கபோயி பாக்குறது.....!!!!௧
அஆவ்வ்வ்.......!!!!
// ஆட்டுக்கு இலை சேகரிக்கும் பெரியவர் //
ஓஓ ..... அது பெரியவரா.......?? நானே அது நடிகர் ... இளைய தளபதி விஜயின்னு நெனச்சேன்........
// /// இந்த துளைக்குள் புரைத் தேன் கூடு இருக்கு. புதருக்கு உள்ளே இருப்பதாலும் தேனீக்கள் அதை சுற்றி பறந்துக் கொண்டிருந்ததாலும் இதற்கு மேல் கையை நீட்டி படம் பிடிக்க முடியவில்லை. மேலிருந்து ஜூம் செய்தால் சிறு சிறு செடிகள் மறைத்துக் கொண்டு இம்சை செய்தன. :( ///
ஆஹா.... நெம்ப சூப்பர் .....!!! அருமையான படபிடிப்பு ......!!!!
//// ஊமத்தம் கொடி. நெல் வயலுக்கு மிகச் சிறந்த இயற்கை உரம். நெல் பயிர் நடுவதற்கு முன் சேற்றில் இதை போட்டு ஏர் ஓட்டுவார்கள். //
இதை சாப்பிட்டா ... வாய்வு தொல்லை இருக்காதாமே ....... அப்புடீங்களா தம்பி......???
// மர நாய்கள் தென்னை மரத்தில் ஏறி, வாயால் கடித்து ஓட்டைப் போட்டு இளநீரைக் குடித்துவிடும். பிறகு சில நாட்களில் இந்த தேங்காய்கள் கீழே விழுந்துவிடும். ஒவ்வொரு மரத்திலும் இரவில் ஏராளமான தேங்காய்களை மரநாய்கள் இப்படி காலி செய்துவிடும். மிச்சம் மீதி தான் நமக்கு. :)///
ஏனுங்கோ தம்பி...... நெசமாவா .....?? நல்லா பாருங்கோ தம்பி..... ஏதாவது பேய்.. பிசாசா... இருக்க போவுது.......!!!!!!!
போயிட்டு வாரனுங்கோவ் தம்பி......!!!!!!! அஆவ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!
நல்ல பதிவு சஞ்சய். படங்களுக்கும் நன்றி.
சிறுவயதில் எங்கள் தோட்டத்தில் அந்த சிவப்பு எறும்புகளால் கடி வாங்கிய அனுபவம் உண்டு:)!
மர நாய்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். தென்னையில் அது ஏறுவதைப் பார்த்திருக்கிறார்களா? [நிச்சயமாய் லவ்டேல் மேடி போல சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை:)! ஆர்வத்தில்தான் கேட்கிறேன்.] உருவத்தில் அவை பிற நாய்கள் போலத்தான் இருக்குமா?
//Stay Logged in..//
உத்தரவு ஆண்ட...
அருமையான பதிவு சஞ்சய். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் பழைய நினைவுகளை மனதில் ஒரு படம் போல ஓட செய்கின்றன.
கலக்கல் அண்ணாச்சி
மணி தாம்பழம் எங்க ஊர் பக்கம் மணித்தக்காளின்னு நிறைய பிடுங்கி தின்னுக்கிட்டே ஜொள்ளுவோம்!
:)
அந்த பழம் மணத்தக்காளி இல்லாட்டி சுக்கிடிபழமுன்னுதான் எங்க ஊருல சொல்லுவோம்
எங்கள் ஊரின் நினைவுகளில் ஊற வைத்துள்ள படங்கள். எருக்கலையும் இதர வகைகளும்.
சாந்தி
மாம்ஸ் சூப்பர்!
இப்பொழுதுதான் வந்தேன் , படங்கள் மிக அருமை..
நீங்கள் பயப்படுவது போல் கிராமங்களும், செடி கொடிகளும் , அழிந்து விடும் என்று நான் நம்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உன்மை, இந்த தொலை காட்ச்சியும், சினிமாவும் வெளியில் விளையாடும் பழக்கத்தை வெகுவாக குறைதிருக்கறது
உங்களளோட படங்கள் வார்த்தையை விட நிறைய பேசுகிறது.
நன்றி
சுந்தர்
ரொம்ப நல்லாருக்கு!!!
நல்ல படங்களும் விபரங்களும்.
அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்.
அட இதுலையும் வித்யா தான் ஃபர்ஸ்டா.. நன்றி வித்யா. அப்பாடா கொஞ்சமாச்சும் புதுசா இருந்திருக்கே..:)
-------------
எப்போ வேணாலும் எங்க ஊருக்கு வா தூயா. :)
//ஓகே கேட்டதுக்காக சொல்லலை :P//
அடடே.. நீ எவ்ளோ நல்லவ பாரு.. எதோ.. இங்கயாவது திட்டாம இருக்கியே..:))
----------
//intha erumbu paathaale yenakku romba bayam:-(//
அட அப்டியா? ஐஸ் கிட்ட சொல்லி இதை உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்ப சொல்றேன். :))
----------
//இதை சாப்பிட்டா ... வாய்வு தொல்லை இருக்காதாமே ....... அப்புடீங்களா தம்பி......???//
அது தெரியாது மேடி.. ஆனா, நீங்க சாப்ட்டா எங்களுக்கு தொல்லை இருக்காதுன்னு மட்டும் ரொம்ப நல்லா தெரியும்.
------------------
ரொம்ப நன்றி ராமலக்ஷ்மியக்கா.. :)
//சிறுவயதில் எங்கள் தோட்டத்தில் அந்த சிவப்பு எறும்புகளால் கடி வாங்கிய அனுபவம் உண்டு:)!//
ஹிஹி.. உங்களுக்குமா? :)
//மர நாய்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். தென்னையில் அது ஏறுவதைப் பார்த்திருக்கிறார்களா? [நிச்சயமாய் லவ்டேல் மேடி போல சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை:)! ஆர்வத்தில்தான் கேட்கிறேன்.] உருவத்தில் அவை பிற நாய்கள் போலத்தான் இருக்குமா?//
நான் இதுவரை பார்த்ததில்லை. அல்லது நினைவில்லை. அவைகள் இரவில் மட்டுமே வெளியில் வருமாம். ஆகவே எளிதில் பார்க்க வாய்ப்பில்லை. இரவில் நெல் வயல் அல்லது வாழைக்கு தண்ணீர் பாய்ச்ச பல முறை சென்றிருக்கிறேன். அப்போது ஏராளமான நரிகளை பார்ப்பேன். ஒருவேளை அப்போது மர நாய்களையும் பார்த்து நரிகளாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். அதன் தோற்றம் பற்றி அடுத்த முறை விசாரித்து எழுதுகிறேன் அக்கா.
நன்றி புலி( நாகை சிவா) :))
------------
ரொம்ப நன்றி ராசுக் குட்டி. இப்போதெல்லாம் பதிவு போட்டதும் உங்கள் நினைவு வரும். ராசுக் குட்டி பார்த்துவிடுவாரா என்று.. :))
-------------
நன்றி ஆயில்ஸ்.. :)
//ஜொள்ளுவோம்!//
ஹிஹி.. அதே. :)
-------------
நன்றி தாரணி அக்கா.. ;)
//அந்த பழம் மணத்தக்காளி இல்லாட்டி சுக்கிடிபழமுன்னுதான் எங்க ஊருல சொல்லுவோம்//
லாஸ் வேகாஸ்லயா? :))
------------
நன்றி சாந்தி. நீங்களும் உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.:)
------------
நன்றி சிவா மாம்ஸ்.. :)
----------
கருத்துக்கு நன்றி சுந்தர் சார். தொலைக் காட்சிகள் மட்டுமே அச்சுறுத்தல் இல்லை. விளைநிலங்கள் எல்லாம் இன்று வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் இதெல்லாம் மறைந்துவிடுமோ என்ற அச்சம். நீங்கள் சொல்வது போல் எதுவும் அழியாமல் இருந்தால் நம் அனைவருக்குமே ஆனந்தம் தானே. :)
-----------
நன்றி கபீஷ். தமிழிஷில் சேர்த்ததற்கும் இன்னொரு நன்றி நண்பா. :)
-----------
மிக்க நன்றி குமார் சார். அடுத்த பதிவும் போட்டாச்சி. :)
padi, marakkaal, pazhaiya ninaippaik kilarathu. thamilini valarum. vazhthukkal.
romba natgalukku pin en kiramathukku poy partha thrupthi
அருமையான பதிவு
gramathin azhagai, miga arpudhamaga varnithu irukeergal. nandri.
அருமையான பதிவு சஞ்சய். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் பழைய நினைவுகளை மனதில் ஒரு படம் போல ஓட செய்கின்றன
i am also village
http://bit.ly/9NGf6i
நல்ல பதிவு
ஒரு செடிக்குப் பேர் தெரியலைன்னு சொன்னீங்களே ... அந்தச் செடிக்கு பேர் பிரமத்தண்டு.
Antha thatha sonna kathai lam sollunga ji, pls.
அருமை பகிர்வுக்கு நன்றி...