இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•9:45:00 AM
ஐஸ் சாப்பிடும் கிராமத்து வாண்டுகள்
ஐஸ் வண்டி
பால் கேன்கள் - நம்மளோடது தானுங்க..
எஜமானருடன் மேய்ச்சலுக்கு போகும் மாடுகள்
வயலில் வேலை செய்யும் கிராமத்து பெண்கள்
ஆட்டுப் பட்டி(ஆடுகள் அடைக்க பயன்படுவது) செய்ய பயன்படும் படல்கள் - மூங்கிலில் செய்யப் படுபவை.
வைக்கோல் போர்
பட்டிக் குடிசை - ஆடு, மாடுகள் அடைத்து வைக்கும் பட்டியில் இரவில் தங்குவதற்கான கட்டிலுடன் கூடிய குடிசைகள்
தூக்கணாங்குருவி கூடு - கூடு மட்டுமே மிஞ்சி இருக்கு.. குருவிகள் அழிந்துவிட்டது போலும்.. பார்க்கவே முடியவில்லை.. ஒருகாலத்தில் நூற்றுக் கணக்கில் கூடு கட்டி வாழ்ந்திருந்தன.
முலாம் பழம் செடி - வருமானமுள்ள விவசாயத்திற்கு மாறுகிறார்கள்.
கொஞ்சமா கிளி அல்லது வவ்வால் குடைந்த கொய்யாப் பழம்
கிணற்றிலிருந்து பிவிசி பைப் வழி நீர்ப் பாசனம்.
தென்னை மரமுங்கோ..
மரவள்ளிக் கிழங்கு செடி
எருக்கம் செடி ( நந்து டாடி ஆப் நிலாவை நிக்கான் டி80 வாங்க வைத்த செடி :)) )
பேர்த் தெரியலை
பன்னாடை - மெய்யாலுமே இதானுங்க பன்னாடை.. இதை சொல்லி ஏன் திட்றாங்க? :(
( தென்னை மரத்தில் தென்னைமட்டையை சுற்றி வளரும் )
அறுவடை முடிந்த பருத்திக் காய்
பருத்திப் பூ
பருத்திக் காய்
பருத்தித் தோட்டத்தில் துவரை செடி
பெரிய மண்வெட்டி


...இதிலிருக்கும் சமாச்சாரங்களை பற்றி எல்லாம் எழுதலாம் என்று தோன்றுகிறது. முதலில் எதைப் பற்றி என பின்னூட்டவும்.. ஆட்டுப்பட்டி பற்றி எழுதுவதாக சொல்லு கிடப்பில் போட்டுவிட்டேன்.. அதை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கு..
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

This entry was posted on 9:45:00 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

44 Comments:

On March 12, 2009 at 10:06 AM , said...

சஞ்சய் தம்பி, அந்த பேர் தெரியாத செடிக்குப் பேரு - வேலிக் காட்டாமணக்கு!

எதப் பத்தி வேணா எழுது, படிக்க நாங்க இருக்கோம் :)

 
On March 12, 2009 at 10:10 AM , said...

//பால் கேன்கள் - நம்மளோடது தானுங்க..//

மாமா ஒரு நாளைக்கு எம்புட்டு லிட்டர் மாமா பால் கொடுப்பீங்க:)
செம கறவை மாடா இருப்பீங்க போல:))

 
On March 12, 2009 at 10:15 AM , said...

//வேலிக் காட்டாமணக்கு!//

அதை நுனிய உடைச்சா அதில் இருந்து தண்ணி வரும், அதை கிண்ணத்தில் பிடிச்சு, அதில் ஊக்குக்கு பின் புறம் இருக்கும் வட்ட ஓட்டைய அதில் முக்கி, ஊதினா முட்டை முட்டையா வரும், சோப்பு நுரையில் வருவது போல்,

ஊக்குக்கு பதில் வைக்கோல் குச்சிய குட்டியா கட் செஞ்சு லேசா ஒரு உறிஞ்சு உறிஞ்சு பூன்னு ஊதினா நிறைய முட்டை வரும்,

அல்லது தீர்ந்து போன லெட்டு பேனாவை வைத்தும் செய்யலாம்:) சிலசமயம் வாய்க்குள் போய்விடும், கசப்பது போல் இருக்கும்!

 
On March 12, 2009 at 10:41 AM , said...

On March 12, 2009 10:06 AM , தஞ்சாவூரான் said...

சஞ்சய் தம்பி, அந்த பேர் தெரியாத செடிக்குப் பேரு - வேலிக் காட்டாமணக்கு!

எதப் பத்தி வேணா எழுது, படிக்க நாங்க இருக்கோம் :)
//

ஆமாம் சொல்லிப்புட்டேன்

 
On March 12, 2009 at 5:48 PM , said...

அது தாங்க கொட்டமுத்து... ஆமணுக்கு அப்படின்னும் சொல்லுவோம். குசும்பன் அவர்கள் சொல்லியிருப்பது போலே, அதில் முட்டை விட்டும் விளையாடுவோம்.

சீக்கிரம் நல்லா விரிவா ஒவ்வொன்னை பத்தியும் பதிவு போடுங்க சஞ்சய்.

 
On March 13, 2009 at 12:48 PM , said...

VAALTHUKKAL:-) VIKATANUKKU

 
On March 13, 2009 at 4:52 PM , Anonymous said...

உங்களின் இந்த பதிவு யூத் விகடன் இணையத்தில் வந்திருக்கிறது...வாழ்த்துக்கள்...

 
On March 13, 2009 at 6:54 PM , said...

இப்படி அழகழகான படங்களைப் போட்டுக்கிட்டே இருக்கீங்க. ஒருநாள் பதிவர்கள் எல்லோரும் உங்க கிராமத்தைச் சுற்றிப் பார்க்க வந்து இறங்கப் போறோம், பாருங்க:)!

 
On March 13, 2009 at 9:58 PM , said...

before people used "pannadai" as a filter. it leave all the good things and bad items will remain such as insects. so the people called "pannadai' whoever leave the good things and keep bad in their mind

 
On March 13, 2009 at 11:42 PM , said...

Hehehe...no bad words? :P OK OK!

nice pics.. na edutha pics thaney ithu? ;)

 
On March 14, 2009 at 4:01 PM , said...

நெம்ப சந்தோசமுங்க தம்பி....!!! முலாம்பழ செடியும் ..... தென்ன மரமும் நெம்ப சூப்பெரா இருக்குது..........!!

 
On March 14, 2009 at 4:27 PM , said...

தஞ்சாவூரான் அண்ணா.. வேலிக் காட்டாமணக்கு பேர் சொன்னதுக்கு நன்றிங்க்ணா.. :)

----------------
குசும்பன் மாமா,
நானும் அதெல்லாம் செஞ்சிருக்கேன். ஆனா இந்த செடியில இல்ல. சின்னதா வேற ஒரு செடி இருக்கும். அதோட கிளையை உடைச்சா அதுல பிசின் மாதிரி ஒரு திரவம் வரும். அதை ஹூக்குல வச்சி முட்டை விடுவோம். அடுத்தவாட்டி ஊருக்கு போகும் போது இந்த செடியில முட்டை வருதான்னு பார்க்கிறேன். :)

------------------
நன்றிங்க வரும்ங்கால மொதலுவாரே.. எழுதிட்டா போச்சி:)

-----------------

நன்றி ராசுக்குட்டி.
ஆமணக்கு அல்லது கொட்டமுத்து அல்லது முத்துக்கொட்டை செடி என்று எங்கள் பகுதியில் இதை சொல்ல மாட்டோம். இதுக்கும் ஆமணக்கு வகைக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன். இதன் காய் பெரிய சைஸ் குடைமிளகாய் போல் இருக்கும். படத்தை பெரிதாக்கி பாருங்க. ஆமணக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.

 
On March 14, 2009 at 4:31 PM , said...

வாழ்த்துக்கு நன்றி இயற்கை.. :)
(நிஜமா நல்லவர் மெயில் அனுப்பி சொல்லி இருந்தார்.. அவாளுக்கும் நன்றி )

----------------
வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம். :)
நேரம் கிடைக்கும் போது எல்லாம் நம்ம கிராமத்துக்கு வாங்க..

--------------
ராமலக்‌ஷ்மி அக்கா... எப்போ வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. ஜமாய்ச்சிடலாம். :)

 
On March 14, 2009 at 4:35 PM , said...

குட்டி..
மிக அருமையான விளக்கம்.. அப்போ இனி யாரையாச்சும் திட்டனும்னா ”போடா ஃபில்டர்”னு டீஜண்டா திட்டலாம்னு சொல்றிங்க.. :))
விளக்கம் எனக்கு புதுசு.. நன்றிங்க..

-----------------
வாம்மா பொன்னம்மா..
ஆமாங் அம்மணி.. எல்லாம் நீங்க எடுத்த படங்கள்தானுங்க.. :))

--------------
லவ்டேல் மேடி..
ரொம்ப நன்றிங்க ஈரோட்டு(மூளப்பாளையத்துக்)க்காரரே.. :)

 
On March 14, 2009 at 5:41 PM , said...

ஹையாஆஆஆஆஅ....குச்சி ஐஸ்...நம்ம ஃபேவரைட்டுங்கோ....
அன்புடன் அருணா

 
On March 14, 2009 at 5:57 PM , said...

பால் ஐஸ் நினைவு வந்தது ஐஸ் ஃபோட்டோஸ் பார்த்து...


அழகான படங்கள்

 
On March 15, 2009 at 12:07 PM , said...

குச்சி ஐஸ் வண்டிக்காரர் சைக்கிளுக்கு ரெண்டு பக்கமும் கட்டி இருக்கும் பையை பற்றி விரிவா எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக் 'கொல்'கிறேன்.
:)

 
On March 15, 2009 at 12:08 PM , said...

/
குசும்பன் said...

//வேலிக் காட்டாமணக்கு!//

அதை நுனிய உடைச்சா அதில் இருந்து தண்ணி வரும், அதை கிண்ணத்தில் பிடிச்சு, அதில் ஊக்குக்கு பின் புறம் இருக்கும் வட்ட ஓட்டைய அதில் முக்கி, ஊதினா முட்டை முட்டையா வரும், சோப்பு நுரையில் வருவது போல்,

ஊக்குக்கு பதில் வைக்கோல் குச்சிய குட்டியா கட் செஞ்சு லேசா ஒரு உறிஞ்சு உறிஞ்சு பூன்னு ஊதினா நிறைய முட்டை வரும்,

அல்லது தீர்ந்து போன லெட்டு பேனாவை வைத்தும் செய்யலாம்:) சிலசமயம் வாய்க்குள் போய்விடும், கசப்பது போல் இருக்கும்!
/

நல்ல கொசுவத்தி மாம்ஸ் ஆனா அது காட்டாமணக்கு செடில இல்லை இன்னொரு செடிலதான் அப்படி செஞ்சு வெளையாடினதா ஞாபகம்.

 
On March 15, 2009 at 10:49 PM , said...

ஆமாங்க சஞ்சய்... நீங்க சொல்லறது சரி தான். முட்டை விட்டு விளையாடினது இந்த செடியில் இல்லை. நல்லா நியாபக படுத்தி பார்த்ததுக்கு அப்புறம் தான், அந்த செடி மச கொட்டை செடி (வேலியில் இருக்கும்) என்று நியாபகம் வருகிறது.

இந்த செடியின் காயை படம் பிடித்து போடா முயற்சி செய்யுங்களேன்? இது ஆமணக்கு (கொட்ட முத்து) செடியா இல்லாவிடின் இன்னொரு செடியின் நியாபகம் வருகிறது. ஆனல் பெயர் சரியா தெரியலைங்க. நாங்க மொட்ட பாப்பாத்தின்னு சொல்லி ஒரு காயை வைத்து விளையாடுவோம் அதுவா இருக்கலாமோ. ஆனாலும் நான் சொல்லும் செடியின் காய் ரொம்ப சிறியதாக தான் இருக்கும்... இந்த செடியின் காயை பார்த்தல் ஒரு வேளை நியாபகம் வரும்ங்க.

 
On March 16, 2009 at 6:00 AM , said...

படங்கள் பட்டாசு.... நன்றி!

 
On March 16, 2009 at 6:48 AM , said...

அந்த ஐஸைத்தான் சாப்பிட முடியவில்லை.
நீங்க சாப்பிட்ட ருசியையாவது எழுதி இருக்கலாமில்ல:)

எல்லோரும் சொல்லிட்டாங்க காட்டாமணுக்குனு. பால் சென்னைக்கு அனுப்புவீங்களா??

 
On March 16, 2009 at 10:08 AM , said...

photos ellam azaka iruku pa

 
On March 18, 2009 at 9:53 AM , Anonymous said...

விகடனில் உங்கள் பதிவு வந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் .
தூக்கணாங்குருவியைப் பற்றிய செய்தி மிகுந்த வேதனை அளிக்கின்றது.

 
On March 18, 2009 at 4:39 PM , said...

வாவ்! சஞ்சய் மிக அழகான பதிவு இது!!

 
On March 20, 2009 at 5:41 PM , said...

அருணா அக்கா,
இன்னும் நீங்களும் குழந்தை தானா? :))
எனக்கும் ஐஸ் ரொம்ப புடிக்கும். அந்த பசங்களுக்கும் வாங்கி குடுத்து நானும் வாங்கி சாப்ட்டேன். :)

-----------------------

நன்றி அமுதா..
நீங்களும் வாங்கி சாப்டுங்க.. இந்த கமெண்ட் போடும் போது கூட எங்க தெருல ஒருத்தர் பஞ்சு மிட்டாய் வித்துட்டு இருந்தார். அதை சாப்ட்டுட்டே உங்களுக்கு பதில் போடறேன்.. ;))

------------------

மங்களூர் மாமா.. சொல்லிட்டிங்க இல்ல.. அந்த பையை பற்றி ”ஃபுல்லாவே” எழுதுடறேன்.. :))

//நல்ல கொசுவத்தி மாம்ஸ் ஆனா அது காட்டாமணக்கு செடில இல்லை இன்னொரு செடிலதான் அப்படி செஞ்சு வெளையாடினதா ஞாபகம்.//

கரெக்ட் தன் மாம்ஸ்.. குசும்பன் மப்புல எதோ உளறிட்டார்.. விட்ருங்க.. :))

 
On March 20, 2009 at 5:53 PM , said...

அந்த செடியில காய் வைக்கும் போது நிச்சயம் படம் புடிச்சி போடறேன் ராசுக்குட்டி.

//இது ஆமணக்கு (கொட்ட முத்து)//

நாங்க முத்துக்கொட்ட செடினு சொல்வோம். விளக்கெண்ணெய் இதுல இருந்தா தான் எடுப்பாங்க.

 
On March 20, 2009 at 5:56 PM , said...

நன்றி பழமைப் பேசி.. ;)

--------

நன்றி வல்லியம்மா.. ஐஸ் டேஸ்ட் பத்தி சொல்லி உங்க வயித்தெரிச்சலை கிளப்ப வேண்டாம்னு தான் எழுதலை.. :)

பால் அனுப்பனுமா? என்ன பால்? புரியலையே..

---------------

போட்டோக்களை ரசிச்சதுக்கு நன்றி காயத்ரி தங்கச்சி.. ;)

 
On March 20, 2009 at 5:59 PM , said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி மகா.
தூக்கணாங்குருவிகள் மொத்தமா அழிஞ்சிடலைங்க. மிகக் குறைவான எண்ணிக்கைல இருக்கு. சமீபத்துல கூட பார்த்தேன். ஆனா எங்க ஏரியாவுல ப்கூடு கட்டறதில்லை. அதான் வருத்தம். நான் அவைகளை பார்த்த நேரமும், பார்த்த இடமும் அவைகள் கூடுகள் இல்லாமலே வாழப் பழகிடுச்சோன்னு தோனுது. :(

--------------

மிக்க நன்றி புனிதா. :)

 
On March 20, 2009 at 8:11 PM , Anonymous said...

Looks like after puliampatti before sathy....

Correct?

 
On March 21, 2009 at 6:29 PM , said...

{பட்டிக் குடிசை - ஆடு, மாடுகள் அடைத்து வைக்கும் பட்டியில் இரவில் தங்குவதற்கான கட்டிலுடன் கூடிய குடிசைகள்}


ரொம்ப பிடிச்சி இருக்கு மாமு.. இந்த குடிசைக்கு ஒன் நைட் ரெண்ட் எவளவு இருக்கும்?

 
On March 21, 2009 at 6:30 PM , said...

{தூக்கணாங்குருவி கூடு - கூடு மட்டுமே மிஞ்சி இருக்கு.. குருவிகள் அழிந்துவிட்டது போலும்.. பார்க்கவே முடியவில்லை.. ஒருகாலத்தில் நூற்றுக் கணக்கில் கூடு கட்டி வாழ்ந்திருந்தன.}


இதே நீ சாபிடுரதுகு முன்னாடி யோசிச்சி இருக்கணும்..!

 
On March 21, 2009 at 6:31 PM , said...

{கொஞ்சமா கிளி அல்லது வவ்வால் குடைந்த கொய்யாப் பழம்}


அது கிளியும் இல்லை வவ்வாலும் இல்லை, ஏதோ அணில் சாப்பிட்டு மிச்சம் வச்சிட்டு பொய் இருக்கு.

 
On March 21, 2009 at 6:34 PM , said...

தென்னை மரமுங்கோ..

எங்க வீட்லயும் கடந்த வருஷம் தான் இருந்த எட்டு தென்னை மறந்ததையும் வெட்டிட்டு வீட்ட கொஞ்சம் பெரிசு பண்ணி வச்சி இருக்கோம்..

மரம் ஏற தெரிஞ்சது எனக்கும் என் தம்பிக்கும் தான், ஒரு முறை நான் மேல இருந்து கீழ விழுந்துட்டேன், (எந்த மருத்துவமனை? எவ்வளவு மொய் எழுதினேன்னு லம் கேட்க்க கூடாது..) அதே பார்த்துட்டு என் தம்பியும் மரம் ஏறுரத மறந்துட்டான்.. அதற்கு பின் மரம் ஏற தெரிஞ்ச ஆள பிடிக்குது பெரிய விஷயமா போச்சு.. அப்படி யாராச்சு வந்தா தான் மரம் கொஞ்சம் அழகா தெரியும், இந்த போட்டோ ல இருக்கிற மாதிரி.

இப்ப தான் சில நாட்களுக்கு முன்னாடி யாரோ ஏறி இருக்காங்க நல்ல தெரியுது.

 
On March 21, 2009 at 6:47 PM , said...

[மரவள்ளிக் கிழங்கு செடி]

இதே பார்க்கும் போது ஒரு நேகைசுவையான நினைவு நாபகம் வருது.. அடியேன் ஒரு முறை மழைநு கூட பார்க்காமே, ரயில் பெங்களூர் பையணம், நான் சென்னை ல வண்டி ஏறின இரவு பங்காருபேட்டை ரயில் நிலையம் பக்கத்துல இருக்கிற ஒரு குட்டி நதி (அதுக்கு முன்ன அதுல நான் தண்ணி ஓடி பார்த்தது இல்லை) அந்த நதிக்கு மேல ஒரு பாலம், அது வெள்ளத்துல அடிச்சிட்டு போய்டுச்சு, நான் போற அன்னைக்கு தான அப்படி நடக்கணும்? எங்க ரயில் நான் தூக்கி எழுந்தும் போது சேலம் பக்கத்துல ஏதோ ஒரு போட்டால் காட்ல நின்டுகிட்டு இருந்தது, பெங்களூர் ரயில் சேலம் பக்கதுல என்ன பண்ணுது நு கேட்காத, எனக்கும் அதே டவுட் தான் இருந்தது, வழி மாற்றி விட பட்டு இருக்கு. மூணுமணிநேரம் அங்கயே இருண்டது, இப்படி ஒரு பேயரை வச்சிக்கிட்டு, எறங்கி பொய் என்ன பார்கல அப்படிநா நமக்கு மதிப்பு இருக்காது.. ஏறகினா ஏதோ ஒரு அடர்த்தியான பெரிய்ய சைஸ் வயல் வெளி, அங்கே போயிட்டு இருந்த ஒரு பாட்டி யா விசாரிச்சது அது ஒரு கெழங்கு காடு நு தெரிஜ்னது, chedi கு கீழ கெழங்கு இருக்கும் நு சொன்னாங்க.. கீழ நு சொன்ன வொடனே கீழ உட்காந்து பக்கத்துல ஒரு குழி தோண்ட ஆரம்பிச்சிட்டேன், ஒரு குட்டி ஒடைஞ்ச கெழங்கு மட்டும் தான் கெடைச்சது.. என்னோட கஷ்டத்த பார்த்து கூட பையணம் செய்ஞ்ச ஒரு சக பிரயாணி எறங்கி வந்து, கெழங்கு எப்படி எடுக்கணும் நு சொல்லி குடுத்தாரு.. செடிய் யா அப்படியே புடிச்சிட்டு ரெண்டு ஆட்டு, அப்படியே புடுங்கிட்டாரு.. ஹகா இப்படியாடா வாலு ஒரு சின்ன விஷயத்துக்கு அசிங்க படுறது.. சரி நானும் புடுங்குறேன் பாரு நு பக்கத்துக்கு செடிய புடுங்குனா அது வெறும் chedi மட்டும் தான் வருது..

நானும் மூன்று , நாலு, நு நெறைய செடிய (மட்டும்) புடிங்கி போட்டாச்சு.. கெழங்கு வந்தா பாடு இல்லை ..."நீ புடுங்குறது பூரா தேவை இல்லாதது தான்.. " அப்படி நு யாரோ சொன்ன மாதிரி இருந்தது.. கடைசியா ஏதோ ஒன்னு சின்ன chedi யா புடிச்சி தூகினேன்.. குட்டி கெழங்கு (பெரிய சைஸ் வேரா கூட இருக்கலாம் ) வந்துடுச்சு. அத வச்சிக்கிட்டு எனக்கு வந்தா சந்தோஷம் இருக்கே.. எடுத்துகிட்டு எனக்கு கெழங்கு pudnga சொலி குடுத்த குரு கிட்ட சொல்லலாம் நு எழுந்து பார்கிறேன்.. சுத்தி ஒரு நான்கு ஐந்து வேட்டி கட்டிய ஆளுங்க.. இந்த குட்டி கேலங்க புடிங்கி சாப்பிட இத்தனை மக்களை யாரு அஙுபினது நு யோசிச்சேன்.. என் குரு வையும் kaanum. ரயில் ஒரு முப்பது நாற்பது மீட்டர் தொலைவில இருந்தது..

அதே விடுங்க இவுங்க யாரு நு பார்போம், வந்தவங்க அந்த தொப்ப்புகு ஆர் காட்டுக்கு sondhakaarangalam.. கண்ணனுக்கு எட்டின தூரத்துல யாருமே இல்லை நு தானே எறங்கினேன், அத்குள்ள எப்படி இதனை paire மொளைசிஈங்க ஒரே ஆசிரியம்,

என் கதைய சொன்னேன், சென்னை, பெங்களூர் போகணும், ரயில் வண்டி ரூட் மாறிடுச்சு, பசிக்குது, அதன் நு சொன்னேன்.. அவுங்க புடிக்கு இருந்த மொரட்டு தனம் மனசுல இல்லை.. கைல வச்சி இருந்த ஏதோ ஒரு instrument வச்சி அவுங்க ரெண்டு மூணு எடுத்து குடுத்தாங்க.. ரயில் ல யாரும் பார்க்கல. சோ நாமே தான் அதெலாம் புடிங்கினோம் நு build-up பண்ணலாம் ரயில் அருகே வந்தா என்னோட குரு, கேட்ட்டரே ஒரு கேள்வி "உன்ன அவுங்க ஒன்னும் பண்ணலையா?"

 
On March 21, 2009 at 6:51 PM , said...

{பேர்த் தெரியலை,}

அதுக்கு paire
கட்டு ஆமணக்கு..

Courtesy : வால்'ஐ ஈன்று எடுத்த வீர தாய்.
ஏதோ அதோட பால் எடுத்து மருந்து செய்வாங்கலம்..

 
On March 21, 2009 at 6:55 PM , said...

பன்னாடை - மெய்யாலுமே இதானுங்க பன்னாடை.. இதை சொல்லி ஏன் திட்றாங்க? :(
( தென்னை மரத்தில் தென்னைமட்டையை சுற்றி வளரும் )


எல்லாத்தையும் நானே சொல்லனுமா?? தென்னை மரத்துல கல் எடுக்கும் போது அதுல நெறைய தூசு இருக்குமாம் அதே எடுத்து கல்'எ சுத்தம் பன்றதுக்கு அங்கே இருக்கிற ஒரே பொருள் இந்த பன்னாடை தான், அதுல கல்'ல ஊதின்னா தூசு லம் அது வச்சிக்கிட்டு சுத்தமான (ஒரு அளவுக்கு) கல்லு கெடைக்குமாம்..

எதுல பன்னாடை நு என் திட்டுறாங்க நு சந்தேகம் எனக்கும் வந்தது, தேவை இல்லதே தூசி அது வச்சிக்கிட்டு முக்கியாமான கல்'எ கீழ விட்டுடுது ல அதான்.. அப்படிந ஒரு கேட்ட paire..

 
On March 21, 2009 at 6:59 PM , said...

en thamil konjam kastam dhaan.. kandukkaadhe..

 
On March 21, 2009 at 9:06 PM , said...

"சஞ்சய்...உங்களின் தமிழ் ஆர்வம் எமக்கு மிகுந்த மன மகிழ்வை தருகின்றது..எம் மண்ணின் மாறாத பசுமையுடன்...,வாழ்த்துக்கள்...,உமது பணி சிறக்க ...!!!"

 
On March 22, 2009 at 5:00 PM , said...

nice pictures sanjai

 
On March 22, 2009 at 7:07 PM , said...

ஆமாங்க சஞ்சய். ஆமணக்கு செடில இருந்து தான் விளக்கெண்ணை எடுப்பாங்க எங்க மாமா தோட்டத்துல வேலி ஓரத்துல நிறைய ஆமணக்கு செடி வைச்சுருப்பாங்க. நாங்க இதை கொட்டமுத்துன்னு தான் சொல்லுவோம்.

அந்த செடியை காய் வரும் போது படம் பிடித்து போடறேன்னு சொன்னதுக்கு நன்றிங்க சஞ்சய்.

 
On March 28, 2009 at 10:57 AM , said...

நல்ல புகைப்படங்கள்!
நினைவுகள் வருகின்றன!

 
On March 28, 2009 at 5:18 PM , said...

ஆஹா... அருமையான படங்கள்....

ஆட்டுப்பட்டி பத்தி எழுத நினைச்சு கிடாபுல போட்டிங்களா.. இல்ல.. கிடைலயே போட்டிங்களா? ;)))))

 
On April 15, 2009 at 3:05 PM , said...

ஆடு அடைக்கிற பட்டி பத்தி எழுதுங்க. தினமும் பட்டி தூகின அனுபவத்துல சொல்றேன்.

பன்னாடை, தெளுவு பற்றியும் எழுதலாமே. நானும் கிரமத்து நினைவுகல்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

 
On April 29, 2009 at 1:51 PM , Anonymous said...

arumaiyaana pukaippadangkal. ennai oru 20 aaNdukaL pinnookki kaddathisellavaithana endraal mikaiyillai!