•12:45:00 PM
அதிகாலை கிராம நினைவுகள் - 1
குடிநீர் பிடிக்கும் வைபவம்...
.......... மழைக்காலங்களில் பெரிய கஷ்டம் எதும் இருக்காது.... ஆனால் கோடையில்..? குடிநீர்ப் பிரச்சனைப் பெருங்கொடுமை.. மனிதர்க்கு மட்டுமல்ல.. கால்நடைகளுக்கும்... ( அப்போ மனிதர்கள் எல்லாம் எதுல நடக்கறாங்க? :) )... ஊரில் ஒரு பொதுக் கிணறு இருக்கு. இப்போது அதை யாரும் பயன்படுத்துவது இல்லை.. பஞ்சாயத்து மூலம் வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் வந்திடிச்சி.
அப்போது குடிநீர் வேண்டுமானால் ஒரே தண்ணீர்த் தொட்டி தான். அதை சுற்றிலும் நான்கு புறமும் தலா 2 குழாய்கள் இருக்கும். கோடைக் காலங்களில் 5 மணிவாக்கில் ஆபரேட்டர் வந்து மோட்டார் போடுவார். நாங்க எல்லாம் 4 மணியிலிருந்தே அந்த தொட்டியை சுற்றி தவம் கிடப்போம். பலரும் அங்கே உட்கார்ந்துக் கொண்டேத் தூங்கி விழுவார்கள் :)...
ஆளுக்கு ஒரு குடம் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.. எல்லாரும் ப்ளாஸ்டிக் குடங்கள், சில்வர்க் குடங்கள், வெண்கலக் குடங்கள், பெரிய பெரிய அண்டா என்று வரிசையாக வைத்திருப்பார்கள். யார் முன்னாடி வராங்களோ அவங்க மொத்தமுள்ள குழாய்களிலும் 2 , 3 குடங்கள் வைத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் 2 , 3 பேர் வரையில் வந்திருப்பார்கள்... சிறியவர்கள் பெரியவர்கள் எல்லாம் இருப்பார்கள்.. வரிசைப்படி தான் தண்ணீர் பிடிக்க முடியும். கடைசியாக வரும் சோம்பேறிகளுக்கு தண்ணீர் கிடைக்காமலும் போயிடும். அவங்களுக்கு அதிகம் தண்ணீர் வைத்திருக்கும் யாராவது குடுப்பாங்க... கிராமங்களை பொருத்த வரையில் பெரும்பாலும் அனைவருமே உறவினர்களாகத் தான் இருப்பார்கள். அதனால் உதவிகள் கிடைக்கும்... அதைவிட அதிக உபத்திரவங்களும் கிடைக்கும்.. :)
தினம் தினம் இதே நிலைதான்... தினம் எதற்கு இவ்ளோ தண்ணீர்?.. பெரும்பாலும் எல்லார் வீட்டிலுமே மாடுகள் அல்லது ஆடுகள் இருக்கும். அவற்றிற்கும் தண்ணீர் வேண்டுமே.. கோடைகாலங்களில் அல்லது மழை பொய்த்துவிடும் சமயங்களில் விவசாயக் கிணறுகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் ஊரிலிருந்து சற்று தள்ளியே விவசாய நிலங்கள் இருக்கும்.. அங்கிருந்து எடுத்து வருவது ரொம்ப சிரமம்.. சிலர் மட்டும் சைக்கிள் கேரியரில் குடங்களை கட்டி தண்ணீர் எடுத்து வருவார்கள்..
அதன் பிறகு வீட்டிற்கு போய் பெண்கள் சமையல் வேலை பார்ப்பார்கள்..ஆண்கள் ஆடு மாடுகளை கவனிக்க ( தவிடு, புண்ணாகு, வைக்கோல் வைக்க), பால் கறக்க விவசாய நிலம் இருக்கும் ஏரியாவுக்கு போய்டுவாங்க.. அங்க தான் எறுமை மாடுகளுக்கு கொட்டகை ஆடுகளுக்கு "பட்டி" எல்லாம் இருக்கும்... தினமும் ஆட்டுப் பட்டியை திருப்ப வேண்டும். அதாவது இடம் மாற்ற வேண்டும்...
ஆட்டுப்பட்டி
மூங்கிலால் பின்னப்பட்ட "படல்"கள் என்று அழைக்கப் படும் அமைப்புகளை ஒரு பக்கத்திற்கு குறைந்தது 2 நிறுத்தி 4 பக்கமும் சுவர் போல நிறுத்தி வைத்திருப்பார்கள். ஒரு படலையும் மற்றொரு படலையும் இணைக்க படலில் ஓரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும் மூங்கில்களில் வளயத்தை மாட்டிவிடுவார்கள். சிறு கயிறுகள் மூலம் படல்களின் மையப் பகுதிகளிலும் கட்டி வைபபர்கள்.
..... ஆட்டுப்பட்டி பற்றி விரிவாக அடுத்த பதிவு.. :))
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
11 Comments:
ஹய்யா நாந்தான் பர்ஸ்ட்டூ :)))
//ஆட்டுப்பட்டி பற்றி விரிவாக அடுத்த பதிவு.. :))//
ஒ.கேய்ய்ய்ய்ய்!
அருமையானப் பதிவு ... வாழ்த்துக்கள் !!!!! :) :) அவ்வளவாக கிராமம் பக்கம் செல்லாத என்னைப் போல உள்ளவர்களுக்கு புது அனுபவம் உங்கள் பதிவுகள்!!!
//நோ டா செல்லம்..நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்...:)//
ஹி ஹி ஹி
//அதைவிட அதிக உபத்திரவங்களும் கிடைக்கும்.. :)//
ஆமாமா :)
//கடைசியாக வரும் சோம்பேறிகளுக்கு தண்ணீர் கிடைக்காமலும் போயிடும் //
ஹையோ அப்படியா ??? :(
//ஆட்டுப்பட்டி பற்றி விரிவாக அடுத்த பதிவு.//
நான் வைட்டிங் :)
படம் சூப்பர் !!!
/கோடைகாலங்களில் அல்லது மழை பொய்த்துவிடும் சமயங்களில் விவசாயக் கிணறுகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. /
கிராமங்களிலுமா தண்ணீர் பஞ்சம் உண்டு??
very nice
நாங்க ஊருக்கு போகும்போது பெரும்பாலும் சம்மர் வெக்கேஷன் தான்.
அந்த வெக்கை வெக்கேஷனில் இந்த தண்ணி பட்ட பாடு நான் அனுபவிச்சதுதான்.
ஒரு சண்டை வரும் பாரு.
பல அண்டா குண்டான்களெல்லாம் நசுங்கும்.
ம் பாக்குற நமக்கு கொண்டாட்டந்தான்.