இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•7:16:00 PM
அதிகாலை 6 மணிக்கு முன்பே எழுந்துவிடுவோம். 4 மணியிலிருந்தே சேவல்கள் கூவ ஆரம்பித்துவிடும். கோழிகள் இல்லாத வீடு எதுவும் இருக்காது. எலலார் வீட்லையும் இருக்கும். அதனால் என்ன அசதியாய் இருந்தாலும் 6 மணிக்கு மேல் தூங்க முடியாது. காக்கா, குருவி , கோழி, சேவல், அணில் இன்னும் பல பல சத்தங்கள் அனைவரின் தூக்கத்தையும் கலைத்துவிடும்.

( பல திருட்டு கோழிகள் கையில் அகப்படாது. வீட்டு கூரையில் அல்லது அருகில் உள்ள மரங்களில் தான் தங்கும். மாலையில் ஓரளவு இருட்ட ஆரம்பித்ததும் வீட்டில் தங்கும் கோழிகள் நல்ல பிள்ளைகளாய் வீட்டிற்குள் வந்து வழக்கமாக அடைபடும் மூலையில் வந்து அமர்ந்துகொள்ளும். அதன் மேல் ஒரு மூங்கில் கூடை வைத்து மூடிவிடுவோம். கோழிகளின் எண்ணிக்கை பொருத்து சில பல கூடைகள் தேவைபடும். எங்கள் வீட்டில் ஒரே சமயம் 25 கோழிகளுக்கு மேல் எல்லாம் இருந்தது.சில அடங்கா கோழிகள் பக்கத்தில் மரத்திற்கு அல்லது வீட்டு கூரைக்குச் சென்றுவிடும். எதுவாயினும் இரவில் ஒரு முறை எண்ணப் படும். அவரவர் வீட்டுக் கோழிகள் பத்திரமாய் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வோம். சில ஜொள்ளு சேவல்கள் அது ரூட் விடும் கோழிகள் எங்கு தங்குதோ அங்கே போய்டும். அந்த கோழிக்கு சொந்த காரர்கள் சொல்லிவிடுவார்கள் இந்த சேவல் அவர்கள் வீட்டில் இருக்கு என்று. பிறகு நாம் போய் அதை பிடித்து வர வேண்டும். :P)

எழுந்தவுடன் காலை கடன்கள் முடித்து அல்லது முடிக்காமல் - அவரவர் அவசரத்தை பொருத்து :P - அடுப்புக்கு அருகில் வந்துவிடுவார்கள். பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் சோளக் கூழ் காய்ச்சுவார்கள். எங்க வீட்டில் எப்போதும் இருந்ததில்லை.. :(.. ஆகவே அருகில் இருந்த தாத்தா வீட்டிற்கு சென்றுவிடுவேன். தாத்தா ( அதாவது பாட்டி... கிராமங்களில் பாட்டி என்ற வார்த்தையே சமீக வருஷங்களில் தான் அறிமுகம் ஆயிருக்கு.. தாத்தா , பாட்டி எல்லோருமே எங்களுக்கு தாத்தா தான்) மாற்றடுப்பில் கூழ் காய்ச்சிக் கொண்டிருப்பார். எல்லார் வீட்டு அடுப்பிலும் 2 அடுப்பு இருக்கும். ஒன்று மெயின் அடுப்பு.. அதில் தான் விறகு வைக்க இடம் இருக்கும்.. இன்னொன்று மாற்றடுப்பு ( மாத்தடுப்பு) .. வலது புறம் இருக்கும்..மெயின் அடுப்பின் நுழைவாயிலில் அதிக விறகுகளை வைத்து எரிக்கும் போது அதிக நெருப்பு எரியும். மெயின் அடுப்பின் மீது வைத்திருக்கும் பாத்திரத்தின் வழியாக முழுமையாக வெளியேற முடியாமல் அது மாற்றடுப்புக்கும் போகும்.

மாத்தடுப்பில் சுடச்சுட கூழ் தயாராய்ட்டு இருக்கும். குளிர்காலமா இருந்தா அனலில் கைகாட்டி உள்ளங்கையை முகத்தில் வைத்துக் கொள்ளும் சுகமே தனி. கூழ் தயாரானதும் அதில் கொஞ்சம் மோர் கலப்பார்கள். அப்போது தான் சுவை இன்னும் கூடும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மோர் கடைந்து வச்சிடுவாங்க.

அடுப்பில் கூழ் இருக்கும் போதே மோர் விட்டு கலக்கியதும் சுட சுட டம்ப்ளரில் ஊற்றிக் கொடுப்பாங்க. 4, 5, 6 டம்ப்ளர்கள் என்று உள்ளே போய்க் கொண்டே இருக்கும்.. கூழ் தீரும் வரை.. :).. குடித்து முடித்ததும் அப்படியே க்ளாசை வீசீவிட்டு ( வேலை முடிஞ்சதுல்ல :D.. எங்க வீட்ல ரொம்ப கண்டிப்பு - சின்ன வயசுல.. இப்போ இல்ல.. ஆனா தாத்தா வீட்ல , பெரியம்மா வீட்ல எல்லாம் ஓவர் செல்லம்.. யார் பேச்சையும் கேக்கறதில்லை...) வீட்டிற்கு வந்துவிடுவேன்... வந்து படிப்பு அல்லது படிப்பது போல் நடிப்பு.. :)

கூழ், மண் சட்டியில் தான் காய்ச்சுவாங்க... சோறு மற்றும் சில வறுக்கும் ஐட்டங்கள் தவிர மற்ற எல்லாம் மண் சட்டியில் தான். அதன் சுவை ரொம்ப அதிகம். பெரும்பாலான வீடுகளில் அவ்வப்போது தேவையான அளவு நெல் உரலில் போட்டு உலக்கையால் குத்தி அரிசியாக பிரிபபார்கள். அப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் சாமை அல்லது வரகு( கேள் வரகு இல்லை) சோறு தான். நெல்லு சோறெல்லாம் சில வீடுகளில் தான். ஆகவே நெல் சோறு என்றாலே அது கை குத்தல் அரிசிதான். மில்களில் அரைப்பது போல் வெண்மையாக இல்லாமல் கொஞ்சம் பழுப்பு நிறமாக இருக்கும்.

எல்லார் வீட்லையும் எருமை மாடு , பசு மாடுகள் நிச்சயம் இருக்கும். அதனால் எல்லார் வீட்லையும் மோர் இருக்கும். மோர் கலக்கும் முறையே ரொம்ப வித்தியாசமா இருக்கும்... சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடைய "மத்து" இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும். அப்போது தான் கயிறை இழுக்கும் போது மத்து பாத்திரத்தின் அடிப் பகுதியில் முட்டாமல் இருக்கும். சுவர் ஓரம் நட்டு வைத்திருக்கும் கொம்பிற்கு அருகில் தயிர் இருக்கும் பாத்திரத்தை வைத்து அதில் மத்தை விட்டு அந்த கொம்பில் இருக்கும் கயிறுக்குள் மத்தை நுழைத்துகொள்ள வேண்டும். பிறகு மத்தில் இருக்கும் கயிறின் இரு முனைகளையும் இரு கைகளிலில் பிடித்து முன்னும் பின்னும் இழுக்க வேண்டும். அப்போ மத்து இடதும் வலதும் சுற்றும். தண்ணீர் கலந்த தயிரில் இருந்து சிறிது நேரத்தில் வெண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். அதை கையில் எடுத்து வேறு பாத்திரத்தில் வைத்துவிட்டு மோர் இருக்கும் பாத்திரத்தை கூரை பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிறில் வைத்துவிடுவார்கள். தேவை படும் போது எடுத்துக் கொள்வார்கள். பூனை மற்றும் எறும்பின் தொல்லையில் இருந்து தப்பிக்க மோர் மற்றும் வெண்ணெய் தூக்கில் தொங்க விட்டுவிடுவார்கள்.

.............. இன்னும் வெளிச்சம் வரவில்லை.. அதிகாலை தொடரும்.. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

This entry was posted on 7:16:00 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

21 Comments:

On September 7, 2008 at 9:21 PM , said...

நல்ல நினைவுகள். அழகாக விவரித்து இருக்கிறீர்கள். கிராமத்துக்கே சென்றது போல் உணர்வு

 
On September 7, 2008 at 9:25 PM , said...

/எங்க வீட்ல ரொம்ப கண்டிப்பு - சின்ன வயசுல/;-));-));-)))))


romba nalla yeluthreenga sanjay ..congrats..
oru yeluthallar vegama uruvaharar .......

 
On September 7, 2008 at 9:53 PM , said...

/அதிகாலை 6 மணிக்கு முன்பே எழுந்துவிடுவோம்/
;-))))

 
On September 7, 2008 at 9:59 PM , Anonymous said...

//சில ஜொள்ளு சேவல்கள் அது ரூட் விடும் கோழிகள் எங்கு தங்குதோ அங்கே போய்டும்//

அது சரி.

 
On September 7, 2008 at 10:02 PM , said...

//மாத்தடுப்பில் சுடச்சுட கூழ் தயாராய்ட்டு இருக்கும். குளிர்காலமா இருந்தா அனலில் கைகாட்டி உள்ளங்கையை முகத்தில் வைத்துக் கொள்ளும் சுகமே தனி.//

நினைத்தேன் ரசித்தேன் :))

 
On September 8, 2008 at 9:53 PM , Anonymous said...

தம்பிசெட்டி பட்டிக்கு போகும் போது மாற்றடுப்பு, மோர் கடையும் மத்து, இதெல்லாம் படம் எடுத்து வந்து இதில் சேர்க்கலாமே சஞ்சய்!

நல்ல ஒரு ஆவணமாகவும் இருக்கும்.

 
On September 8, 2008 at 11:07 PM , said...

அண்ணே சின்னவயசு ஞாபகம்...இப்ப எனக்கு கொசுவத்தி சுத்துது

 
On September 9, 2008 at 9:57 AM , said...

ஆஹா சஞ்சய்,

வீட்டுல பொண்ணு பார்க்கறாங்களா?

என்ன ஆச்சு. சூப்பர் பதிவுகளா போட்டுத்தாக்கறீங்க?

வாழ்த்துக்கள்.

 
On September 9, 2008 at 11:57 AM , said...

நல்ல முயற்சி சஞ்சய். பாராட்டுக்கள். மறந்து போன வாழ்க்கையை நினைவு படுத்துவதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றியும்.

 
On September 9, 2008 at 2:19 PM , said...

/புதுகைத் தென்றல் said...

ஆஹா சஞ்சய்,

வீட்டுல பொண்ணு பார்க்கறாங்களா?

என்ன ஆச்சு. சூப்பர் பதிவுகளா போட்டுத்தாக்கறீங்க?

வாழ்த்துக்கள்./


ரிப்பீட்டேய்....:)

 
On September 9, 2008 at 10:14 PM , said...

நல்லா எழுதுங்க அய்யா.தினமும் கோழிக்கூவுன உடனே நாங்க வறோம்

 
On September 10, 2008 at 9:17 AM , said...

படங்களுடன் நன்றாக விவரித்திருக்கிறீர்கள். மாத்தடுப்பு எங்கள் வீட்டிலும் உண்டு. Gas நுழைந்தது 70-களின் இறுதியில்தான். அதே போல வீட்டின் பால் தேவைக்கு மாடுகளும் இருந்தன. வெண்ணெய் திரண்டு வரும் அழகைப் பார்ப்பதே ரசனையான அனுபவம்.

தொடரட்டும். வாழ்த்துக்கள்.

 
On September 14, 2008 at 6:22 PM , said...

நன்றி வெண்பூ :)
---
நன்றி ராஜி :)
---
நன்றி வடகரைவேலன் அண்ணாச்சி :)
---
நன்றி ஆயில்யன் :)
---
நன்றி வெயிலான் :)
.. மோர் மத்து இப்போது எங்கும் இல்லை.. அடுப்பு வேண்டுமானால் படம் எடுத்து வருகிறேன்.

 
On September 14, 2008 at 6:26 PM , said...

நன்றி அப்துல்லா.. நல்லா சுத்தட்டும்.. :)
---
புதுகைதென்றல் அக்கா... புரளிய கெளப்பி விடாதிங்க :(
----
நன்றி தரணி :)
---
நல்லவரே.. அழ வைக்காதிங்க :(
---
அடடே.. வாங்க வாங்க குடுகுப்பைகாரரே.. :) நன்றி...
---
நன்றி லக்ஷ்மியக்கா.. :)

 
On September 14, 2008 at 6:29 PM , said...

அதிகாலை கிராம நினைவுகள் - 2 போட்டாச்சி

 
On September 14, 2008 at 9:55 PM , said...

ரொம்ப ரொம்ப அழகானப் பதிவு . அப்படியே சினிமா பார்க்கிற மாதிரி இருக்கு :) :)

 
On September 14, 2008 at 9:56 PM , said...

///நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

ஆஹா சஞ்சய்,

வீட்டுல பொண்ணு பார்க்கறாங்களா?

என்ன ஆச்சு. சூப்பர் பதிவுகளா போட்டுத்தாக்கறீங்க?

வாழ்த்துக்கள்./


///

ரிப்பீட்டேய்....:)

 
On September 17, 2008 at 8:37 PM , said...

ரொம்ப நன்றி நித்தி.. :)

 
On November 17, 2008 at 1:47 PM , said...

very nice sanjai.....sorry ganthi...
romba nalla iruku unga pathivugal athanaiyum...
enga appa veetu sidum..amma veetu sidum intha method of cooking ipa kooda paka mudiyum..
chinna vaisula thatha veetuku ponna ninaivugalai kondu varuthu unga pathivugal..
vazhthukal-nga....

 
On June 19, 2009 at 7:19 PM , said...

அழகான நினைவுகள் மத்து படம் தேடிய பொது கிடைத்தது.

 
On July 14, 2009 at 8:05 PM , said...

எங்க வீட்டு சேவலொன்று ரூட்விட்டு பக்கத்து தெருவிற்கே சென்று விட்டது.அதை திரும்ப கொண்டுவர பெரும்பாடு பட்ட நினைவை கிளறிவிட்டு விட்டது இந்த பதிவு. மேலும் கோழி திருடர்கள் நிறைய உண்டு அப்போது ஊரில், நம்ம வீட்டு கோழியை அடித்துத் தின்றுவிட்டு கோழியின் இறகுகளை குப்பையில் இட்டு புதைத்து விடுவார்கள்,பூனை அல்லது நாய் அதை நோண்டி திருடியவர்களின் குட்டை உடைத்து ரகளை நடக்கும்,அதெல்லாம் ஒரு காலம்.
கூழ் மேட்டர் எங்க அப்பா காலத்தில் இருந்திருக்கு.எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.எப்போதாவது எனது பாட்டி கேப்பக் கூழ் காய்ச்சுவார் அதை ருசித்ததுண்டு.

பழைய நினைவுகளை அப்படியே சின்ன சின்ன விஷயங்கள் கூட மிஸ் ஆகாமல் உங்களின் எழுத்தில் கொண்டு வருகிறீர்கள் சஞ்சய்.இதற்கு நிரம்ப நியாபக சக்தி வேண்டும்.அது உங்களிடம் இருக்கிறது.அசத்தல் பதிவுகள்,பாராட்டுக்கள் சஞ்சய்.