•12:01:00 AM
6 மணிக்கு முன்பு முழிப்பு
சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்
கலர் கோழிகுஞ்சு
25பைசா இட்லி
50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்
தேன்மிட்டாய்
இலந்தை பழம் ஊறுகாய்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
இரவு நேர தினசரி கபடி
ஐஸ்பைஸ் விளையாட்டு
குச்சி ஐஸ்
இரவு நேர கண்ணாமூச்சி
அஞ்சாங்கல்
பணங்காய் வண்டி
சோளத் தட்டு வண்டி
புல் கோட்டி
கூட்டாஞ்சோறு
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
காரைப்பழம்
பூலாப்பழம்
எலந்தைபழம்
நாகப் பழம்
குருவி முட்டை சுடறது
நண்டு பிடிச்சது
காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
மாட்டு வண்டி பயணங்கள்
வழுக்கு மரம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை...
................ இன்னும் மறந்து போன ஏராளமான கிராமத்து அடையாளங்களை எழுத்து வடிவிலாவது சேமித்து வைக்கும் ஒரு சிறிய முயற்சியே
"என் கிராமத்து நினைவுகள்"
இவை எல்லாம்.. எதோ 50 , 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல.. 10 , 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமத்து பசங்களின் தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாதவைகளாய் இருந்தவைகள் தான்...
இவற்றில் பெரும்பாலானவற்றை கபளீகரம் செய்த பெருமை செயற்கைகோள் தொலைகாட்சிகளையே .. குறிப்பாக சன் டிவியையே சேரும்...
பெரும் லட்சாதிபதிகளையும் லோட்டீஸ்வரர்களையும் உருவாக்க நினைத்து சிறுவர்களின் நேரத்தை உறிஞ்சும் பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இதன் அழிவில் பங்குண்டு.....
எந்த அறிவியல் வளர்ச்சி இந்த கிராமத்து அடையாளங்களை சுவடுகள் கூட இல்லாமல் ஆக்கியதோ... அதே அறிவியல் வளர்ச்சியை கொண்டே அழிந்து போன அடையாளாங்களை பிரதி எடுத்து வைப்போம்... என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு சந்ததியை எந்திர வாழ்க்கை எரிச்சலூட்டும்.. அப்போது அவர்களுக்கு இவைகள் பயன்படும்...
வாருங்கள்....இனி கிராமத்தில் பயணிக்கலாம்....
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
71 Comments:
me the first?
ஹையா....நான் தான் பர்ஸ்ட்டு:)
கிராமம்ன்னு சொன்னாலே முதல் ஆளா ஓடி வந்திடுவோம்ல:)
ஆமா...என்ன எழுதி இருக்கீங்க?
இன்னும் படிக்கவே இல்லை:)
இருங்க படிச்சிட்டு வாரேன்:)
/6 மணிக்கு முன்பு முழிப்பு/
நானு ஏழு மணிக்கு தான்..:)
/சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்/
ஹையா...எங்க வீட்டிலும் இதே தான்....செம டேஸ்ட்டா இருக்கும்....சில நாள் கேழ்வரகு கூழ்...அதுவும் சூப்பர் தான்!
/கலர் கோழிகுஞ்சு/
ரொம்ப பீல் பண்ண வைக்குறீங்களே...எங்க வீட்டில் நிறைய கலர் கோழி குஞ்சுங்க இருந்துச்சு....தினமும் அதுங்க கூட நானும் குப்பை மேடு எல்லாம் சுத்தி இருக்கேன்....கழுகு பருந்து கிட்ட இருந்து அதை தினமும் காப்பாத்த பெரிய போராட்டமே நடக்கும்....எப்பவாவது கழுகு தூக்கிட்டு போய்டும்....அன்னைக்கு பூரா சாப்பிட மனசே இல்லாம திரிவேன்:(
/25பைசா இட்லி/
அட போங்க....கிராமத்து டீக்கடையில் இட்லி சாப்பிட்ட நினைவுகளா வருது....இப்ப ஒரு கடைங்க கூட எங்க கிராமத்தில் இல்லை:(
/50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்/
அட...ஆமாம்....நான் 75 பைசா கொடுத்து எங்க தாத்தா வீட்டுக்கு(30km) போய் இருக்கேன்...இப்ப முடியுமா?
/தேன்மிட்டாய்/
ஐந்து பைசாக்கு ஒரு மிட்டாய்....தினமும் பள்ளிக்கு போகும் போது வாங்கி சாப்பிட்டு கிட்டே போவேன்...இப்ப ஊரில் தேன் மிட்டாய் கிடைக்குதா?
/இலந்தை பழம் ஊறுகாய்/
இது தாங்க செம சூப்பர்....படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுதே....முழுங்கி தொலைச்சிட்டு அடுத்த கமெண்ட் போட போக வேண்டியது தான்...வேற என்ன பண்ண முடியும்:)
/காக்கா கடி மிட்டாய்/
ஒன்னையும் நீங்களும் விட்டு வைக்கல போல:)
/பம்பரம்/
என்கிட்டே விதம் விதமா நிறைய பம்பரம் இருந்துச்சி....தரையில் குத்தி அப்படியே கைல எடுத்து உள்ளங்கைல சுத்த விட்டு வேடிக்கை காட்டிட்டே இருப்பேன்...:)
/கோலி குண்டு/
கோலி நாங்க கில்லி தெரியும்ல....ஒரே அடியே இப்படி லீவும் அதுவுமா பீல் பண்ண வச்ச பொடியனை என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே இருக்கேன்:
/இரவு நேர தினசரி கபடி/
அடங்கொக்க மக்கா நீங்களும் இரவு நேர கபடி தானா? களத்து மேட்டில் எங்க செட் எல்லோரும் தினமும் கபடி விளையாண்டது தான் நினைவுக்கு வருது....:)
/ஐஸ்பைஸ் விளையாட்டு/
இது என்ன? எனக்கு தெரியாம போச்சே:(
/குச்சி ஐஸ்/
அப்ப எல்லாம் சாதா குச்சி ஐஸ் ஐந்து பைசா....சேமியா ஐஸ் பத்து பைசா....சூப்பரா இருக்கு....இப்ப கூட ஊருக்கு போனப்போ வாங்கலாம்னு பார்த்தேன்....ஐஸ் வண்டி வரவே இல்லை:(
/இரவு நேர கண்ணாமூச்சி/
சோறு கொட்டிக்க கூட போகாம போக்கு காட்டிட்டு பசங்க கூட நைட்ல கண்ணாமூச்சி விளையாடுவோம்....கடைசில எங்க வீட்டில் யார் கிட்டயாவது நாலு சாத்து வாங்கிட்டு தான் ஆட்டத்த விட்டு போவேன்:)
/அஞ்சாங்கல்/
இது என்ன புதுசா இருக்கு....யார் தலைலயாவது அஞ்சு கல்லை எடுத்து போடுற விளையாட்டா:???
/பணங்காய் வண்டி/
அடடா...இந்த வண்டிய வச்சிக்கிட்டு பசங்க பண்ணுற அலப்பறை இருக்கே தாங்காது....இதில ஒத்தை பனங்காய் வண்டி ரெட்டை பனங்காய் வண்டி எல்லாம் செய்வோம்.....ரெட்டை பனங்காய் வண்டில காய்ந்த பனை ஓலையை கட்டி விட்டு வேகமா இழுத்துகிட்டு ஓடினா நல்லா சவுண்ட் வரும்...எங்களுக்கு அந்த காலத்து என்பீல்ட் வண்டியே பனை ஓலை கட்டின வண்டி தான்:)
/சோளத் தட்டு வண்டி/
இந்த வண்டி எப்படி விட்டு போச்சுன்னு தெரியலையே:(
/புல் கோட்டி/
அண்ணே...இது என்ன புல்லு...சத்தியமா எனக்கு தெரியலை:)
/கூட்டாஞ்சோறு/
இதில் இருக்கிற ருசியே தனி தான்....இனிமே எங்க அதெல்லாம்....இப்படி படிச்சி தெரிஞ்சிக்க வேண்டியது தான்!
/உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்/
யோவ்...பொடியரே எப்படி இப்படி எல்லாம் நான் செஞ்சதை எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்லி இருக்கீங்க....புளியங்காய் வாயெல்லாம் கூசினாலும் அந்த ருசிக்காக அடி வயிறு கலங்குற மாதிரி நிறைய மிளகாய் பொடி போட்டு தான் சாப்பிடுவேன்:)
/கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி/
யோவ்...அட போங்கப்பா...நான் இப்பவே கிளம்பி எங்க ஊரை பார்க்க போயிடலாமான்னு இருக்கேன்...எங்க பாட்டி செய்வாங்க...ரொம்ப நல்லா இருக்கும்...இப்ப யாரும் வீட்டில் இதெல்லாம் செய்றாங்களா என்ன?
/பொண்வண்டு/
கலர் கலரா இருக்குமே பொன்வண்டு முட்டை....பொன்வண்டை பிடிச்சி தீப்பெடியில அடைச்சி வச்சிப்போம்....அப்புறம் மெதுவா அது கழுத்தில் நல்ல அழுத்தமான நூலை கட்டி நூலோட மறு முனையை பிடிச்சி சுத்தினா பொன்வண்டு பறக்கிற அழகு இருக்கே...அடடா...செம கலர்புல்லா இருக்கும்...எப்படித்தான் பொன்வண்டுக்கு அப்படி விதவிதமான கலர் உடம்பில் இருக்குன்னு ஆச்சர்யமா பேசிக்குவோம். ஆனா ஒன்னுங்க பொன்வண்டு கழுத்து பகுதி செம ஸ்ட்ராங்.அங்க கைய வச்சோம்னா அது கழுத்தை உடம்போடு சேர்த்து இருக்குச்சுன்னா கைல ரத்தம் வர ஆரம்பிச்சிடும்...நாங்க நூலை அது கழுத்தில் கட்டும் போது கொஞ்சம் நேக்கா தான் கட்டுவோம்:)
/காரைப்பழம்/
காரைப்பழமா?....நாங்க காரம் பழம்ன்னு சொல்லுவோம்....ஸ்கூல் போகும் போது காரம் பழம் அடிச்சி சாப்பிடுவோம்....இந்த காரம் பழத்தை மட்டும் லைப்ப்ல நான் மறக்கவே முடியாதுங்க...ஒரு தடவை காரம் பழம் அடிக்கிறப்போ....பக்கத்தில் இருந்த கள்ளி மரத்தில் என் பிரண்ட் அடிச்ச கல்லு பட்டு அந்த கள்ளி பிய்ந்து என் வலது கண்ணுல பட்டுடுச்சி...ரொம்ப சிரம பட்டு போயிட்டேன்:(
/பூலாப்பழம்/
எங்க ஊரில் இல்லாம போச்சே:(
me the second ? :):):):)
/எலந்தைபழம்
நாகப் பழம்/
இந்த ரெண்டு பழத்தையும் கணக்கு வழக்கில்லாம சாப்பிட்டு இருக்கேன்....இப்ப எங்க ஊரில் இந்த மரங்களையே பார்க்க முடியல....ஏன்ன்னு தான் தெரியல:(
/ Podiponnu - பொடிப் பொண்ணு said...
me the second ? :):):):)/
வாங்க....நீங்க 31 st:)
/குருவி முட்டை சுடறது/
நான் இதை மட்டும் சுட்டதில்லைங்க....எங்க வீட்டிலேயே குருவி கூடு கட்டி இருந்துச்சு...ஏனோ அந்த முட்டைங்களை சுட மனசு வரலை....ஆமா இப்ப உள்ள வீடுங்களில் குருவி கூடு எல்லாம் கட்ட முடியுதுங்களா? குருவிகளையே அதிகம் பார்க்க முடியுறதில்லை....உயிரின சமன்பாடுகள் அழிஞ்சிட்டே வருதே...என்ன நடக்குமோ கடைசில:(
/நண்டு பிடிச்சது/
இதை பிடிச்சதை விட நிறைய கடி தான் வாங்கி இருக்கேன்...அது என்னமோ ஒரு கலைன்னு சொல்லி நான் கடி வாங்கும் போது எல்லாம் பசங்க சிரிப்பானுங்க....ஒரு குச்சில நுனியில் கிளிஞ்சல்கள் எல்லாத்தையும் கோர்த்து கட்டி நண்டு வலைக்குள்ள விட்டு ஆட்டுனா நண்டு அண்ணாச்சி மெதுவா வெளிய வருவாரு...அப்படியே ஒரே அமுக்குல பிடிப்பாங்க....எனக்கு மட்டும் கடைசி வரைக்கும் பிடிபடவே இல்லை:)
/காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது/
நான் ஒரு பதிவே போடலாம்னு நினைச்ச விஷயம் இது....அப்புறம் ஏனோ விட்டுட்டேன்...எங்க வீட்டில் முப்பதுக்கு மேல ஆடுங்களும் ஏழு எருமை மாடு நாலு பசுமாடு மூன்று ஜோடி காட்டு காளை மாடுங்களும் இருந்துச்சி....இதுங்களை எல்லாம் தினமும் மேய்க்க ஓட்டிட்டு போயிட்டு வர்றது எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா? இன்னைக்கு கிராமத்தில் யாரும் ஆடு மாடுங்களை வளர்க்கிறது கூட இல்லைங்க....கிராமங்கள் எல்லாம் பாலைவனமா கிடைக்கிறப்போ வாயிலாத அந்த ஜீவன்களுக்கு கண்ணுல காட்ட கூட புல் பூண்டு முளைக்காத போது எப்படி வளர்க்கிறது???
/மாட்டு வண்டி பயணங்கள்/
அடடா...என்ன சுகமான அனுபம்....என்ன தான் ஏசி காரில் போனாலும் மாட்டு வண்டி பயணத்தில் கிடைத்த சுகமே அலாதியானது!
/வழுக்கு மரம்/
அந்த பக்கமே நான் போக மாட்டேனாக்கும்:)
/10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை.../
இப்ப கூட எங்க ஊர் சினிமா கொட்டைகளில் கூட்டம் அலை மோதுதுங்க....கல்யாணம் நடக்கிற நாட்களில் மட்டும்...எல்லா கொட்டகைகளும் திருமண மண்டபங்களா மாறி ரொம்ப நாள் ஆச்சுங்கோ:)
/இன்னும் மறந்து போன ஏராளமான கிராமத்து அடையாளங்களை எழுத்து வடிவிலாவது சேமித்து வைக்கும் ஒரு சிறிய முயற்சியே
"என் கிராமத்து நினைவுகள்"/
உங்க முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....நிறைய எழுதுங்க....எழுத்திலாவது நமது அடையாளங்கள் இருக்கட்டும்!
romba feel panna vaikkireenga! Hmm..
kuduthu vachavangappa..
6 மணிக்கு முன்பு முழிப்பு
சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்
கலர் கோழிகுஞ்சு
25பைசா இட்லி
50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்
தேன்மிட்டாய்
இலந்தை பழம் ஊறுகாய்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
இரவு நேர தினசரி கபடி
ஐஸ்பைஸ் விளையாட்டு
குச்சி ஐஸ்
இரவு நேர கண்ணாமூச்சி
அஞ்சாங்கல்
பணங்காய் வண்டி
சோளத் தட்டு வண்டி
புல் கோட்டி
கூட்டாஞ்சோறு
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
காரைப்பழம்
பூலாப்பழம்
எலந்தைபழம்
நாகப் பழம்
குருவி முட்டை சுடறது
நண்டு பிடிச்சது
காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
மாட்டு வண்டி பயணங்கள்
வழுக்கு மரம்
ஆஹா..எவ்வளவு விஷயங்களை மிஸ் பண்ணியிருக்கோம்னு
உடனே தெரியவச்சுட்டீங்க!
களத்துல இறங்குங்க ...காத்திருக்கோம்...!
மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது//
ஆங் நான் கூட என்னை மாதிரி புலி வேட்டைக்குதான் போய் இருக்கீங்களோன்னு நினைச்சுப்புட்டேன்.
//உடனே தெரியவச்சுட்டீங்க!
களத்துல இறங்குங்க ...காத்திருக்கோம்...!//
ஆமா அமெரிக்கா, ஈரான் போர் நடக்குது களத்துல இறங்கி சண்டை போடுங்க!!!
யோவ் மாம்ஸ் உன் கிட்ட அவரு நீ ஆட்டைய போட்டு சாப்பிட்ட லிஸ்டையா கேட்டார்? இப்படி சொல்லி இருக்கீங்க!
அழிந்து போன, நிறைய விஷயங்கள லிஸ்ட் போட்டுருக்கீங்க. தட்டுக் கோடு, கிளிக்கோடு, சில்லு (பாண்டி?), கிட்டிப் புல்லு, திருடன் போலிஸ், ஆத்துக் குளியல் (கொத்தான் கொத்தான்), ஓணான் அடிக்கிறது, தட்டான் புடிக்கிறது, மாங்கா உப்பு கடிக்கிறது இதெல்லாம் பண்ணது இல்லையா? :)
அதென்ன ஐஸ் ஸ்பைஸ், சோளத்தட்டு வண்டி, புல் கோட்டி?
என்னங்க இது, இப்படி நெஞ்சைப் பிழியற மாதிரி பதிவு எழுதி மனசை கனக்க வெச்சிட்டீங்களே. நான் எந்த கிராமத்தையும் பார்த்ததில்லை, பெரியளவுல கிராமத்து மனிதர்களோடும் நெருங்கிய பழக்கங்கள் இல்லை. ஆனா அப்படியே பெருநகரங்களோடும் அதன் கலாச்சாரங்களிலும் முழுமையாக ஒன்ற முடிந்ததுமில்லை. எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை உண்டென்றால் அது கோவையிலிருந்து மங்கி பால்ஸ், பின்னர் அங்கிருந்து ஆழியாறு போகும் வழி இப்படி, இந்த சுத்துவட்டாரத்தில் ஒரு வாரமாவது தங்கி இருக்கணும். மங்கி பால்சில் தினமும் குளிக்கணும். அங்க இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, நல்லா சமைச்சு சாப்பிட்டு, அங்கிருக்கும் அந்த அழகான வித்தியாசமான மண்ணில் சின்ன அளவுக்காவது தோட்ட வேலை செய்யணும். எங்க அக்காபையனை திருமூர்த்தி பால்சில் குளிக்கவெச்சு, அவன் எக்சைட் ஆகறதை பார்க்கணும். நானும் என்னோட ரங்கமணியும் அங்க கிடைக்கிற வாகனத்தில் ஏறி போகும்போது, அங்க அடிக்கடி பெய்யற சாரல் மழை பெய்யணும். இப்படில்லாம் சொல்லிக்கிட்டே போகலாம். கொஞ்சம் சினிமா மாதிரி லூஸ்தனமா தெரிஞ்சாலும், அங்க இதயெல்லாம் சிலப்பேர் நிஜத்துல வாழறத பாத்திருக்கேன். இன்னும் கூட நல்லா நியாபகம் இருக்கு, அவங்களை எல்லாம் பார்த்து, அந்த இடத்தில் என்னையும் என் ரங்கமணியும் கற்பனை பண்ணியதெல்லாம்:):):)
நல்ல வேளை, வடகரை வேலன் அவர்கள் எனக்கு இதனை சுட்டினார். இல்லையென்றால் நாளைதான் பார்த்திருப்பேன்:):):) அவருக்கு ஸ்பெஷல் நன்றி:):):)
அருமையான ஆரம்பம்.
கைகோர்த்து வரத் தயார்!!!
இந்த பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் விரைவில் போடுகிறேன். அதுவரை அடுத்த பதிவு பாருங்க :)
...அதிகாலை கிராமம் - 1
இன்னும் சில..........
ஊரணியில் மீன் பிடிப்பது
எலி பிடிச்சது
வட்டு விளையாட்டு
கிளியாந்தட்டு
முறுக்கு கடித்தல்
கள்ள நொங்கு
கிணத்து நீச்சல்
வடம் இழுத்தல் ......
அருமையான பதிவு சஞ்சய்
அழகான பதிவு ...நமது கிராமங்களை இங்காவது பத்திரப் படுத்துவோம் .
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி பாரதி அண்ணாச்சி.. :)
உங்கள் 60 ஆண்டுகளுக்கு முந்தயை நினைவுகளை கிண்டி கிளறிவிட்டேன் போல.. கவலை வேண்டாம்.. இந்த கொசுவர்த்தி அணையாமல் பார்த்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு தெரியாத அஞ்சாங்கல் போன்றவற்றை தெளிவாகவே சொல்லித் தருகிறேன்.. :)
வாம்மா மின்னல்.. தடிப்பொண்ணு சாரி சாரி.. பொடிப் பொண்ணு நித்யா.. உன் நல் வருகைக்கு நன்றி..
ஓரோர் வரிக்கு ஒரு பதிவு எழுதலாம். அருமை!
சொல்ல மறந்திட்டேனே!
சஞ்சய் இப்ப தான் உருப்படியா ஒரு பதிவு போட்ருக்கார். போய் பாருங்கனு வடகரை வேலன் அண்ணாச்சி தான் சிபார்சு பண்ணினார்.
நன்றி ராஜி.. வொய் ஃபீலிங்.. நோ ஃபீலிங்யார்.. இன்னும் இருக்கு... கிராமத்து சரக்கு...
-----
நன்றி சுரேகா.. நீங்க மிஸ் பண்ணதை எல்லாம் நான் மிஸ் பண்ணாம தரேன்.. குட்டி பையனுக்கும் சொல்லிக் குடுங்க...
-------
குசும்பன் மாமா.. நாங்க உங்கள மாதிரி கொட்டை எடுத்த புலி வேட்டைக்கு எல்லாம் போக மாட்டோம்..:))
-------
ஸ்வாமி தஞ்சாவூரானந்தா.. நீங்க சொல்லி இருப்பது மட்டுமில்லாம இன்னும் நிறைய விடு பட்டிருக்கு.. எல்லாமே பதிவுகளாய் வரும்.. :)
ஐஸ்ஸ்பைஸ், சோளதட்டு வண்டி, புல் கோட்டி( கோட்டி புல் அல்லது கில்லி ) எல்லாம் சொல்லித் தரேன்.. :)
-------
தலைவி ராப்.. உங்க ஆசை எதும் லூசுத் தனம் இல்லை.. சீக்கிறம் உங்க ஆசையை நிறைவேத்திக்கோங்க.. மிக வேகமா எல்லா கிராமங்களும் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கிறது.. :(
வடகரை வேலன் அண்ணாச்சிக்கு ரொம்ப நன்றி.. இந்த பதிவைப் பலருக்கும் அறிமிகப் படுத்தியதோடு மட்டுமில்லாமல் , பதிவில் இருக்கும் ஏராளமான எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டினார். வரும் காலத்தில் திருத்திக் கொள்கிறேன். ;)
நன்றி பரிசலாரே.. :)
---
நன்றி பனையேறி.. வட்டு மற்றும் கிளியாந்தட்டு பற்றி பதிவிடுங்கள்.. எனக்கு இது புதுசு.. :)
---
நன்றி காஞ்சனாக்கா
----
நன்றி பூங்குழலி.. என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன்..
-------
நன்றி வெயிலான்..
//சஞ்சய் இப்ப தான் உருப்படியா ஒரு பதிவு போட்ருக்கார். போய் பாருங்கனு வடகரை வேலன் அண்ணாச்சி தான் சிபார்சு பண்ணினார்.//
ஹைய்யா..நானும் ஒரு உருப்படியான பதிவு எழுதிட்டேன்..:))))))))))))))))))
hi...
just now i ve read ur post "en gramathu ninaivugal"...chanceless...
"6 மணிக்கு முன்பு முழிப்பு
சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்
கலர் கோழிகுஞ்சு
25பைசா இட்லி
50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்
தேன்மிட்டாய்
இலந்தை பழம் ஊறுகாய்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
இரவு நேர தினசரி கபடி
ஐஸ்பைஸ் விளையாட்டு
குச்சி ஐஸ்
இரவு நேர கண்ணாமூச்சி
அஞ்சாங்கல்
பணங்காய் வண்டி
சோளத் தட்டு வண்டி
புல் கோட்டி
கூட்டாஞ்சோறு
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
காரைப்பழம்
பூலாப்பழம்
எலந்தைபழம்
நாகப் பழம்
குருவி முட்டை சுடறது
நண்டு பிடிச்சது
காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
மாட்டு வண்டி பயணங்கள்
வழுக்கு மரம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை...
.................................."
epdi ivlo-vum niyabagam iruku???
enaku padichitu, kanne kalangidichi....
naa kooda ithu maathiri, yaellathaium note panni vaikanum-nu nenachiruken....
but implement pannala...
enga oor niyabagam vanthuruchi...
mathavangaluka-vathu sila vilayaatu name differ aagum....but naama ore oor-ingrathaala,
evlo naa miss panrangrathu theriuthu...:-(
wat to do??!!!!
hats off u...
vaalthukkal pa...
mannikka-vum!!!
ennidam tamil fonts illai...
/SanJai said...
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி பாரதி அண்ணாச்சி.. :)
உங்கள் 60 ஆண்டுகளுக்கு முந்தயை நினைவுகளை கிண்டி கிளறிவிட்டேன் போல.. கவலை வேண்டாம்.. இந்த கொசுவர்த்தி அணையாமல் பார்த்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு தெரியாத அஞ்சாங்கல் போன்றவற்றை தெளிவாகவே சொல்லித் தருகிறேன்.. :)/
அடங்கொக்கமக்கா....நீங்க சொல்லுறதில் பாதி வயசு தான் ஆகுதுப்பா....ஏன் இந்த கொலைவெறி??????
//என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு சந்ததியை எந்திர வாழ்க்கை எரிச்சலூட்டும்..//
அந்த நாள் அதிக தொலைவில் இல்லை.
ஆவலைத் தூண்டும் அருமையான ஆரம்பம். வாழ்த்துக்கள் சஞ்சய்.
நன்றி ஆர்த்தி.. :)
இனி அடிக்கடி வந்துட்டு அழுதுட்டு போ.. :))
---
வாழ்த்துக்கு நன்றி லக்ஷ்மியக்கா.. :)
அதிகாலை நினைவுகள் - 2 போட்டாச்சி.. :)
நண்பர் பொடியன் அவர்களே,
மிக்க அருமையான பதிவு. ரொம்பவும் ரசித்தேன். என்னுடைய இளமை பருவத்துக்கு அப்படியே அழைத்து சென்று விட்டீர்கள். நானும் இத்தனை விளையாட்டுகளையும் விளையாடி இருக்கிறேன், இன்னும் சில விளையாட்டுகளும் அடங்கும்.
இப்படிக்கு,
ராசுக்குட்டி.
இந்த முறை கோயம்புத்தூர் வந்திருந்த போது தேன் மிட்டாய் சாப்பிட்டேன் :).
காக்கா கடியை யார் மறக்க முடியும்.
கோலி குண்டு விளையாடுவதில் நான் கில்லாடியாக்கும்.
குச்சி ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ் நகா பழம், கார பழம், இலந்தை பழம், உப்பு மிளகாய் சேர்த்த புளியாங்காய் (பேய் பயம் வந்தது தனி கதை) - நாக்கில் எச்சில் ஊறுதே.
கில்லி விளையாடி எல்லோரையும் பயப்பட வைத்தது, பொன் வண்டு பிடிக்க மருத மலை சென்றது, வெள்ளிங்கிரி மலைக்கு மாட்டு வண்டி பயணம் (இடையிடையே ஓடும் ஆற்றில் விளையாண்டது). எல்லாம் அருமையான் நினைவுகள்.
ஓணான் பிடித்தது, குச்சி விளையாண்டது (அது தாங்க குச்சியை தட்டிட்டு ஓடிட்டே இருப்போமே. அதுலயும் கல்லு மேல வைச்சாலும் கல்லை கடிச்சு காட்டுவமே ) அப்புறம் ஓடு (சில்) விளையாட்டு, ராஜா கல், ராணி கல் விளையாட்டு பூசணி காய் விளையாட்டு, கண்ணா மூச்சி. இன்னும் ethanaiyo விளையாட்டுகள். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் . எல்லாம் இப்போ இருக்கும் சிறார்கள் விளையாடுகிறார்களா?
இப்படிக்கு,
ராசுக்குட்டி.
//
/அஞ்சாங்கல்/
இது என்ன புதுசா இருக்கு....யார் தலைலயாவது அஞ்சு கல்லை எடுத்து போடுற விளையாட்டா:???
//
அஞ்சாங்கல் பத்தி இங்க படிச்சுப் பாருங்க..
http://chummafun.blogspot.com/
2008/12/1.html
என்னன்னே, நீஙக நம்மாலா!!!!!!.