இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•5:47:00 PM
மாதம் ஒருமுறை நிச்சயம் கூட்டாஞ்சோறு ஆக்கித் திண்போம். அப்போது தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் மிக மிகக் குறைவு. இருந்த ஒன்றிரண்டும் வெகு தூரத்தில் இருக்கும். நான் 16 கிமி தொலைவில் இருக்கும் ஒரு ஊரில் போய் 6,7ஆம் வகுப்பு படித்தேன். அப்போது டவுன் பஸ்ஸில் 60 பைசா தனியார் பஸ்ஸில் 80 பைசா டிக்கெட்( 1991 & 92). தினமும் சென்றுவருவதால் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் தான். 20 பைசா குறைவு. :). பள்ளிக்கு மாதக் கட்டணம் 6ஆம் வகுப்பில் 60 ரூபாய் 7ஆம் வகுப்புக்கு 70 ரூபாய். :). 11 மற்றும் 12ஆம் வகுப்பும் தனியார் பள்ளியில்தான் படித்தேன். அப்போது காலாண்டுக் கட்டணம் 1250 ரூபாய். தினமும் அந்த பள்ளிக்கு சென்றுவர 80கிமீ பயணம் :(. காலை 5.45க்கு பஸ் ஏறணும். இப்போ அலாரம் வச்சாலும் அதை ஆஃப் பண்ணிட்டு 8 மணிக்கு தான் எழ முடியுது.. :)

சரி மேட்டர் அதில்லை. இவ்வளவு குறைவான கட்டணமாக தெரிந்தாலும் கிராமத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு போய் படிப்பவர்கள் 10 பேர் கூட இல்லை. எல்லாரும் எங்கள் ஊரிலும் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளிலும் தான் படிப்போம். நான் 1 முதல் 5 வரை எங்க ஊரில், 8,9 மற்றும் 10ஆம் வகுப்புகள் 2.5கிமீ தொலைவில் இருந்த அரசு பள்ளிகளில் படித்தேன். சைக்கிள் அல்லது நடந்து போவோம்.

அரசு பள்ளிகளில் படித்ததால் வீட்டுப் பாடம் என்ற கொடுமை எல்லாம் சுத்தமா இல்லை. எப்போதாவது அபூர்வமாக கொடுப்பார்கள். ஆனால் புதுப் பழக்கம் எதுக்குன்னு நாங்க ஒண்ணும் பண்ணாமலே போய் நின்னு செமத்தியா அடிவாங்கி வெளியே முட்டி போடுவோம். சில சமயங்களில் மைதானத்தில் கல்லும் மண்ணும் கலந்த கலவையில் முட்டி போடணும். மணிக் கணக்கில். கொஞ்ச நாளிலேயே பழகிப்போய்டும். அப்புறம் ஒண்ணும் உறைக்காது. :)

ஆகவே பள்ளி விட்டு வந்தால் எப்போதும் விளையாட்டு தான். எதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டாஞ்சோறுக்கு முடிவு செய்துக் கொள்வோம். தினமும் எல்லோருமே பார்த்துக் கொள்வோமே. ஆகவே செயற்குழு முடிவு உடனடியாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதற்காக தயாராகிவிடுவோம்.

காலை 11 மணிபோல் கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் ஊர் ஏரியில் தான் கூடுவோம். குறைந்தது 30 பேராவது இருப்போம். எல்லாருமே தேவையான பொருள் எதாவது எடுத்து வரவேண்டும் . வெறும் கை வீசி வருபவருக்கு இடமில்லை. யார் என்ன எடுத்து வரவேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்துக் கொள்வோம். கூட்டாஞ்சோறு என்பது தக்காளி சாதம் தான். பலரும் கூட்டாக சமைத்து உண்பதால் கூட்டாஞ்சோறு. வேறு எதும் இல்லை. மற்ற ஊர்களில் எப்படின்னு தெரியலை.

சிலர் அரிசி, சிலர் தக்காளி, சிலர் மிளகாய், ஒருவர் உப்பு, சிலர் பாத்திரங்கள், பாத்திரம் மூடி வைக்க தட்டு இன்னும் அதற்கு தேவையானவை எதுவோ அதெல்லாம் கொண்டு வருவார்கள். ஒவ்வொருவராக இடத்துக்கு வந்து சேர்வார்கள். எல்லாரும் வரும் வரை கதை அடிப்போம். பெரியவங்க ஒரு இடத்துல சேர்ந்தாக் கூட அவங்களுக்கு பேச மேட்டர் கிடைக்குமோ இல்லையோ, எங்களுக்கு பேச அவ்ளோ விஷயங்கள் இருக்கும். எல்லாரும் வந்ததும் ஆளாளுக்கு ஒரு வேலை ஆரம்பிப்போம்.

சிலர் அருகில் இருக்கும் கிணத்து மேடு அல்லது வயல்களின் எல்லைகளுக்காக போடப் பட்டிருக்கும் கல்கட்டுகளில் இருந்து கற்களைக் கொண்டுவருவோம். சிலர் அருகில் இருக்கும் மரங்கள் அல்லது வயல்களில் இருக்கு துவரம் மரங்களின் காய்ந்த கிளைகள் போன்றவற்றை உடைத்து

கொண்டு வரணும். அப்போதும் சமையல் பெண்கள் துறை தான். நாங்கள் எல்லாம் சேகரித்துக் கொண்டு வந்ததும் அவர்கள் சமையல் ஆரம்பிப்பார்கள். 30 பேருக்கு மேல் இருந்தாலும் 2 பாத்திரங்களில் சமைத்தால் போதும். பசியாறும் அளவுக்கெல்லாம் யாரும் சாப்பிட மாட்டோம். எல்லோருக்கும் சிறு சிறு கவளங்கள் தான்.

இரண்டு அல்லது மூன்று கற்களை வைத்து அதன் மீது பாத்திரத்தை வைத்து கற்களின் இடையில், கொண்டுவந்த காய்ந்த விறகுகள் அல்லது சிறு சிறு சுள்ளிகளை வைத்து தீ மூட்டுவோம். சில சமயங்களில் காய்ந்த விறகுகள் கிடைக்காது. ஓரளவு பச்சையாக இருக்கும் விறகுகள் தான் கிடைக்கும். அதை தீமூட்டுவது மிக சிரமம். ஆகவே அது அணையும் போதெல்லாம் ஊற்றி எரிய வைக்க மண்ணெண்ணயும் வைத்திருப்போம். காயாத விறகுகளை எரிக்கும் போது ஏராளமாக புகை வரும் . பக்கத்துல ஒரு பய நிக்க முடியாது.

முன்பே பாத்திரங்களில் அரிசி ,தக்காளி ,உப்பு, மிளகாய் என தேவையான அனைத்தும் கலந்து வைத்திருப்போம். அந்த பாத்திரத்தை கற்களின் மீது வைத்து சமையல் ஆரம்பமாகும். அருகில் பெண்கள் அமர்ந்து கரண்டிகளை வைத்துக் பாத்திரத்தில் கிண்டிக் கொண்டே இருப்பார்கள்.சோறு தயாராகும் வரை அருகில் இருக்கும் மரம் அல்லது புதர்களின் அடியில் அமர்ந்து கதை வளர்ப்போம். அங்கு போன சிறிது நேரத்திலேயே அந்த இடங்களில் இருக்கும் புதர்களில் அடியில் அமரும் அளவு இடம் தயார் பண்ணிடுவோம். சிலர் துண்டு விரித்து குட்டித் தூக்கமும் போட்டுவிடுவார்கள்.சிறிது நேரத்தில் கூட்டாஞ்சோறு தயார்.

இது வரை கூட்டாஞ்சோறின் ருசியில் வீட்டில் சாப்பிட்டதில்லை. தக்காளி சாதம் என்றால் நாம் வீட்டில் அல்லது உணவகத்தில் சாப்பிடுவது போல் இருக்காது. பொங்கல் போல் இருக்கும். ஆனால் சுவை மட்டும் மிக அதிகமாக இருக்கும். அந்த வழியே செல்லும் பெரியவர்கள் எல்லாம் கெஞ்சுவார்கள். அவர்களும் சிறு வயதில் இதன் ருசி அனுபவித்தவர்கள் தானே. பெரும்பாலும் கொடுக்க மாட்டோம். அங்கே இருப்பவர்களின் வீட்டச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொடுக்க மாட்டோம். :)

கருவேல மரங்கள் போன்றவற்றின் முட்கள் பரவலாக கீழே இருக்கும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் செருப்பு போட்டிருக்க மாட்டார்கள். எல்லாருமே வாங்கிக் குடுத்த சில நாட்களிலேயே தொலைத்து விடுவோம். தொலைத்து விட்டு மீண்டும் கேட்டால் வீட்டில் எங்களைத் தொலைத்து விடுவார்கள். ஆகவே வெறுங்காலுடன் தான் முட்களிலும் வெயிலிலும் நடந்தாக வேண்டும். பெரும்பாலும் செருப்பு தொலையும் இடங்கள் கல்யாண வீடுகள் தான். கிராமத்து கல்யாணத்தை பற்றி பெரிய தொடரே எழுதலாம். :).. ஏழை வீடோ பணக்காரர் வீடோ , அது குறைந்த பட்சம் 3 நாள் திருவிழா. விரைவில் எழுதிடுவோம்.

சமையல் நடந்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் போய் அருகில் இருக்கும் வாழை மரங்களில் அல்லது ஆமணக்கு மரங்களில் இலைகளை பறித்து வருவோம். பெரும்பாலும் ஆமணக்கு இலை தான். வாழை இலை கிடைப்பது கொஞ்சம் அரிது. சமையல் முடிந்ததும் இலையை கையில் ஏந்தி வட்டமாக அமர்ந்துவிடுவோம். எல்லாருக்கும் சரியான அளவில் சிலர் பரிமாறுவார்கள். நான்கு ஐந்து மணி நேரங்களுக்கு அங்கு பொழுதைக் கழிப்போம். அங்கேயே அஞ்சாங்கல், கோட்டிப் புல், கபடி என எதாவது விளையாடிக் கொண்டிருப்போம்.பிறகு 3 அல்லது 4 மணிக்கு மேல மாடு , எருமை மேய்க்கும் கடமை இருக்கும் என்பதால் அத்துடன் சபை கலைந்துவிடும்.

எல்லார் வீட்டிலும் எருமைகள், மாடுகள் இருக்கும் என்பதால் விடுமுறை நாட்களில் நாங்கள் தான் அதை மேய்க்க வேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும் சாணி அள்ளி அருகில் சாணம் கொட்டி வைத்திருக்கும் இருக்கும் இடத்தில் கொட்ட வேண்டும். மிகப் பெரும் இயற்கை உரம். நிலமில்லாதவர்கள் அல்லது குறைவான நிலம் வைத்திருபப்வர்கள் அதிக விலைக்கு இந்த “எரு”வை விற்பார்கள். இரண்டு வேளை அவைகளுக்கு தவிடு, புண்ணாக்கு கலந்த தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுக்கு தான் ’தண்ணிக் காட்றது’ அப்டின்னு பேர். இவைகளை பராமரிப்பதையே தனிப் பதிவாக போடலாம். அம்புட்டு மேட்டர் இருக்கு. :)

(..இதுல தான் தண்ணி காட்டணும்.. தீனி அல்லது குளுத்தி என்று பெயர்..)








கூட்டாஞ்சோறு லொக்கேஷன்ஸ் :-)

..தலைகீழ இல்ல... தண்ணீரில் எதிரொளிக்கிறது..



இது போன்ற புதர்கள் அல்லது கருவேல மரத்தடிகளைத்தான் உட்காரும் அளவு மாற்றிவிடுவோம். மூன்றுமே அதே ஏரியில் எடுத்த படங்கள் தான். போட்டோஷாப் ஜிகினா வேலைக்கு ஏற்ற மாதிரி அழகாவும் அசிங்கமாவும் தெரியலாம்..
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

This entry was posted on 5:47:00 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

58 Comments:

On February 8, 2009 at 6:45 PM , said...

me the first..

 
On February 8, 2009 at 6:46 PM , said...

இருங்க‌..ப‌டிச்சிட்டு வ‌ரேன்:-)

 
On February 8, 2009 at 6:53 PM , said...

சூப்ப‌ர் போஸ்ட்.க‌லாய்க்க‌ ம‌ன‌சு வ‌ர‌மாட்டேங்குது..:‍(..

 
On February 8, 2009 at 6:55 PM , said...

கூட்டாஞ்சோறு ரொம்ப ருசி... பரவாயில்லை நீங்கள் விளையாடிய இடம் எல்லாம் ஓரளவுக்கு அப்படியே இருக்கு... நாங்க சிறு வயதில் விளையாடிய இடங்கள் எல்லாம் இப்போ சுத்தமா இல்லை... நிறைய இடங்களை இப்போ வீடுகள் ஆக்கிரமிச்சுருச்சு...

எருமை/மாடுக்கு தண்ணி காட்டறதுக்கு பேரு (அது தாங்க அந்த படத்துல இருக்கறது) தாளி தானே.

 
On February 8, 2009 at 6:56 PM , Anonymous said...

சஞ்சய்,

நாங்களும் இதுமாதிரிச் செஞ்சிருக்கோம். ஆனா எல்லாக் காய்கறிகளும் போட்டுச் செய்வதுதான் கூட்டாஞ்சோறு. எந்தக் காய் அதிகமாக இருக்கிறதோ அதன் சுவையில் இருக்கும் சாப்பாடு.

இதற்கு புளிஞ்சட்னிதான் செம காம்பினேசன். புளியம்பிஞ்சு, வரமிளகாய், பூண்டு, உப்பு வைத்து கல்லில் ஒன்றிரண்டாக அரைத்துச் சாப்பிட்டால் அந்த ருசியே தனிதான். எழுதும்போதே நாக்கில் நீர்.

 
On February 8, 2009 at 7:00 PM , said...

//இய‌ற்கை said...

சூப்ப‌ர் போஸ்ட்.க‌லாய்க்க‌ ம‌ன‌சு வ‌ர‌மாட்டேங்குது..:‍(..//

நன்றி ராஜி.. அம்மாடி.. தப்பிச்சிட்டேன்.. ஆனால் இன்னும் சிலர் இருக்காங்களே.. :(

 
On February 8, 2009 at 7:05 PM , said...

ராசுக்குட்டி, எங்க கிராமம் , அருகில் அந்த பெரு நகரின் தொல்லையும் இல்லாத சிறுகிராமம். அதனால் குடி இருப்புகளுக்காக ஆக்கிறமிக்க இன்னும் பல ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை. ஆனால் பழய பழக்க வழக்கங்கள் தான் மறைந்து கொண்டே போகிறது. சிறுவர்கள் எல்லாம் தனியார் பள்ளி மற்றும் தொலைகாட்சிகளுக்கு அடிமை ஆகிவிட்டார்கள்.

பெரிய பயலுகளும் இஞ்சினியரிங் கல்லூரிகளில் படிக்க பல நூறு மைல் இடைவெளிகளில் பரவிக் கிடக்கிறார்கள்.


அதை தாளி என்று சொல்லலாமா தெரியவில்லை. அதற்கு சில பகுதிகளில் ”தீனி” என்றும் சில பகுதிகளில் ”குலுத்தி” என்றும் பெயர்.

 
On February 8, 2009 at 7:05 PM , said...

மலரும் நினைவுகளா ;)


இப்ப தெரியுது உங்க உடம்பு ஏன் இப்படி இருக்குனு. எல்லாம் கூட்டாஞ்சோறு மகிமையா.. ;)

//எல்லாருமே வாங்கிக் குடுத்த சில நாட்களிலேயே தொலைத்து விடுவோம். தொலைத்து விட்டு மீண்டும் கேட்டால் வீட்டில் எங்களைத் தொலைத்து விடுவார்கள்.//

பதிவில் இடை இடையே கவிதையெல்லம் எழுதுவீங்களோ :))


அருமையான பதிவு.

 
On February 8, 2009 at 7:09 PM , said...

அண்ணாச்சி உங்கள் பால்ய வயதில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் அபப்டி செய்ததாக நினைவில்லை. தக்காளி சாதம் தான். தொட்டுக்க எதும் செய்ததில்லை.

//புளியம்பிஞ்சு, வரமிளகாய், பூண்டு, உப்பு வைத்து கல்லில் ஒன்றிரண்டாக அரைத்துச் சாப்பிட்டால் அந்த ருசியே தனிதான்//

ஒரே மாற்றம் புளிபிஞ்சிக்கு பதில் குழம்புக்கு பயன்படுத்தும் புளி பயன்படுத்துவோம். பழயசோற்றில் தயிர் விட்டு கரைத்து குடிக்கும் போது தொட்டுக்க புளிச்சட்னி தான். எனக்கு ரொம்ப புடிச்சது. எங்க வீட்டில் மதிய நேரங்களில் வயல்வேலைகள் முடித்து வரும் போது இது கிடைக்கும். சாப்பிடுவதை விட 2 மடங்கு அதிகம் குடிப்பேன்.. ;))

 
On February 8, 2009 at 7:13 PM , Anonymous said...

// ஸ்வாமி ஓம்கார் said...
இப்ப தெரியுது உங்க உடம்பு ஏன் இப்படி இருக்குனு. எல்லாம் கூட்டாஞ்சோறு மகிமையா.. ;)///
Repeatoo repeat:-)
Repeat:-)
Repeat:-)

போஸ்டை கலாய்க்க‌ ம‌ன‌சு வ‌ர‌லேன்னுதான் சொன்னேன்.போஸ்ட் எழுதின‌வ‌ரை அல்ல‌

 
On February 8, 2009 at 7:15 PM , said...

ஸ்வாமி யூ டூ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(

என் உடம்பு எபப்டி இருக்கு? குத்து மதிபபா போட்டு வைக்காதிங்க.. வலைமக்கள் முக்கால்வாசி பேருக்கு எனனைத் தெர்யும்.. உங்க மேல மான நஷ்ட வழக்கு போட்றுவாங்க.. :))

இந்த வலைப்பூவே கருகிய நினைவுகளுக்காகத் தான் ஸ்வாமி.. :)

என்னாது கவிதையா? கிகிகி.. ஒருவேளை உங்க மூச்சுக் காத்து மேல பட்டதால அப்டி இருக்கலாம்.. :))

உங்கள் தரிசனம் என் பாக்கியம் ஸ்வாமி.. :)

மிக்க நன்றி.

 
On February 8, 2009 at 8:26 PM , said...

அருமையான நினைவுகள் அதையொட்டிய படங்களுடன். கூடவே பள்ளி நினைவுகளும். ரசித்தேன் சஞ்சய்.

 
On February 8, 2009 at 9:09 PM , said...

ரசித்து படித்தேன்!!!

 
On February 8, 2009 at 10:16 PM , said...

உங்க கூட்டாஞ்சோறை நானும் ருசித்து சாப்பிட்டாச்சு....ம்ம்மம் superb taste..

 
On February 8, 2009 at 10:19 PM , said...

\\எப்போதாவது அபூர்வமாக கொடுப்பார்கள். ஆனால் புதுப் பழக்கம் எதுக்குன்னு நாங்க ஒன்னும் பண்ணாமலே போய் நின்னு செமத்தியா அடிவாங்கி வெளியே முட்டி போடுவோம் \\

ஹிஹிஹி.....

 
On February 8, 2009 at 10:57 PM , said...

சூப்பர் போஸ்ட் எனக்கும் கலாய்க்க மனசு வரலை இருந்தாலும் கலாய்ப்பேன் :).

 
On February 8, 2009 at 11:01 PM , said...

//நான் 16 கிமி தொலைவில் இருக்கும் ஒரு ஊரில் போய் 6,7ஆம் வகுப்பு படித்தேன்.//

படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரமோ

//அப்போது டவுன் பஸ்ஸில் 60 பைசா தனியார் பஸ்ஸில் 80 பைசா டிக்கெட்( 1991 & 92). தினமும் சென்றுவருவதால் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் தான். 20 பைசா குறைவு. :).//

என்ன இது கெட்ட பழக்கம். பஸ்ல டிக்கெட் எல்லாம் வாங்கி இருக்கிங்க போல :).

//காலை 5.45க்கு பஸ் ஏறனும். இப்போ அலாரம் வச்சாலும் அதை ஆஃப் பண்ணிட்டு 8 மணிக்கு தான் எழ முடியுது.. :)//

8.00 மணிக்கு எழுந்திரிச்சு பல்லு விளக்காம காபி குடிச்சுட்டு திரும்ப தூங்கறதை ஏன் எழுதலை

 
On February 8, 2009 at 11:04 PM , said...

//அரசு பள்ளிகளில் படித்ததால் வீட்டுப் பாடம் என்ற கொடுமை எல்லாம் சுத்தமா இல்லை. எப்போதாவது அபூர்வமாக கொடுப்பார்கள். //

ஆமாம் எனக்கும் கூட அரசு பள்ளிகள்ல பிடிச்ச விஷயம் இதுதான்.:)

//ஆனால் புதுப் பழக்கம் எதுக்குன்னு நாங்க ஒன்னும் பண்ணாமலே போய் நின்னு செமத்தியா அடிவாங்கி வெளியே முட்டி போடுவோம்//

கரெக்ட் எப்பவும் ஒரேமாதிரிதான் இருக்கணும்.

 
On February 8, 2009 at 11:10 PM , said...

//வெறும் கை வீசி வருபவருக்கு இடமில்லை. //

நாங்க எல்லாம் எல்லாரையும் சேர்த்துக்குவோம். ஆனா அவங்களுக்கு வேலை ஜாஸ்தியா தருவாங்க :)

//மற்ற ஊர்களில் எப்படின்னு தெரியலை.//

நாங்களும் கூட்டாஞ்சோறுன்னுதான் சொல்லுவோம்


ஹை நாங்களும் பெரியவங்க யாருக்கும் தரமாட்டோம். கொஞ்சம்தான் இருக்கு. எங்களுக்கு பத்தாதுன்னு சொல்லிடுவோம்.

செருப்பு ‍ யூனிபார்ம் மாதிரி அது ஸ்கூலுக்கு போகும் போது மட்டுமே போடற விஷயம். மத்த நேரத்தில வெறுங்காலுடோடதான் சுத்தறதே.:)

எறுமை மேக்கற வேலை மட்டும் இல்லை. :)

 
On February 8, 2009 at 11:14 PM , said...

நான் என்னோட சின்ன வயசில குடியிருந்த விளையாண்ட இடம் எல்லாம் இப்ப அபார்ட்மெண்ட் ஆகிபோச்சு. கணபதியிலதான் இருந்தோம். போன வாரம் அங்க வந்தப்போ நாங்க் விளையாண்ட இடத்தை கண்டு பிடிக்கவே முடியலை. பெரிய ஆலமரம், கிணறு கூட காணாம போயி இருந்தது. பெரிய தோட்டமா இருந்த இடம் முழுக்க இப்ப வொர்க் ஷாப் கட்டிடமும், கடைகளுமா இருக்கு :(

 
On February 8, 2009 at 11:17 PM , said...

திரும்ப என்னோட ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு நினைவுகளுக்கு கூட்டிட்டு போன இந்த பதிவுக்காக ஒரு நன்றி :)

 
On February 8, 2009 at 11:20 PM , said...

அப்புறம் அந்த மாட்டுக்கு தண்ணி காட்டற தொட்டியை இங்க கோவை பக்கம் தாழின்னுதான் சொல்லுவோம். அரிசி களைச்ச தண்ணி, உளுந்து தவிடு, பழைய சோறு, வாழை பழ தோல் எல்லாம் அதுலதான் கொண்டு போய் போடுவோம்.

 
On February 8, 2009 at 11:36 PM , said...

முதல்முறையா உங்க பதிவ படிக்கறேன் சஞ்சய். ரொம்ப அழகா உங்க அனுபவத்தை பகிர்ந்து இருக்கீங்க. பயங்கர சுவாரசியமா எழுதறீங்க. keep it up.

 
On February 9, 2009 at 9:50 AM , said...

//எறுமை மேக்கற வேலை மட்டும் இல்லை. :)//

தாரணி அக்கா.. அதெல்லாம் மனுஷங்க வேலை.. :))

( நீங்க தெய்வம்னு சொல்ல வந்தேன்.. :)) )

 
On February 9, 2009 at 10:07 AM , said...

naangalum ithu mathiri senji saptu irukome.
nanga neraya per iruka mattom 6 or 7 member than.

unga anupavam nalla iruku

 
On February 9, 2009 at 6:24 PM , said...
This comment has been removed by the author.
 
On February 9, 2009 at 6:25 PM , said...

சிறு வயசுல நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைக்கும் போது இப்பொழுதும் மனம் கனக்கிறது. அந்த புளியமரம் , கம்மாய் , வாய்க்கா, வரப்பு இன்னும் என்ன என்னவோ -- நன்றி SanJai காந்தி....

 
On February 9, 2009 at 7:07 PM , said...

நாங்க இந்தக் கூட்டாஞ்சோறு எங்க வீட்டுத் தோட்டத்துக்குள்ளேயே செய்து பயங்கர அடியெல்லாம் வாங்கியிருக்கோமாக்கும்....
அழகான பதிவு.
அன்புடன் அருணா

 
On February 9, 2009 at 9:12 PM , said...

//போஸ்டை கலாய்க்க‌ ம‌ன‌சு வ‌ர‌லேன்னுதான் சொன்னேன்.போஸ்ட் எழுதின‌வ‌ரை அல்ல‌//

ராஜி , முறைப்படி பதில் மரியாதை செய்யப்படுமாக்கும் :)

 
On February 9, 2009 at 9:13 PM , said...

// ராமலக்ஷ்மி said...

அருமையான நினைவுகள் அதையொட்டிய படங்களுடன். கூடவே பள்ளி நினைவுகளும். ரசித்தேன் சஞ்சய்.//

நன்றி லக்‌ஷ்மியக்கா.. ஒவ்வொரு முறையும் நீங்க குடுக்கும் ஊக்கம் தான் காரணம். :)

 
On February 9, 2009 at 9:22 PM , said...

// வெட்டிப்பயல் said...

ரசித்து படித்தேன்!!!//

நன்றி வெட்டி.. குட்டி தேவதை எப்டி இருக்காங்க? :)

---------------

//கலாட்டா அம்மனி said...

உங்க கூட்டாஞ்சோறை நானும் ருசித்து சாப்பிட்டாச்சு....ம்ம்மம் superb taste..//

ஹிஹி.. ரொம்ப நன்றிங்க அம்மனி.. :)

 
On February 9, 2009 at 9:26 PM , said...

// தாரணி பிரியா said...

சூப்பர் போஸ்ட் எனக்கும் கலாய்க்க மனசு வரலை இருந்தாலும் கலாய்ப்பேன் :).//

என்னா ஒரு வில்லத் தனம்? :(

//8.00 மணிக்கு எழுந்திரிச்சு பல்லு விளக்காம காபி குடிச்சுட்டு திரும்ப தூங்கறதை ஏன் எழுதலை//

பொதுவா என்னை பத்தி நானே புகழ்ந்து பேசிக்கிறதில்லை.. :))

//ஹை நாங்களும் பெரியவங்க யாருக்கும் தரமாட்டோம். கொஞ்சம்தான் இருக்கு. எங்களுக்கு பத்தாதுன்னு சொல்லிடுவோம்.//

இப்போ வரைக்கும் அப்டிதான? :)\

//திரும்ப என்னோட ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு நினைவுகளுக்கு கூட்டிட்டு போன இந்த பதிவுக்காக ஒரு நன்றி :)//

ஏழாம் வகுப்பை தாண்டலையா? :))

//அரிசி களைச்ச தண்ணி, உளுந்து தவிடு, பழைய சோறு, வாழை பழ தோல் எல்லாம் அதுலதான் கொண்டு போய் போடுவோம்.//

எல்லா ஊர்லையும் இப்டி தான் போடுவாங்க.. உங்களுக்கும் வீட்ல இப்டிதானா? :))

 
On February 9, 2009 at 9:28 PM , said...

//மணிகண்டன் said...

முதல்முறையா உங்க பதிவ படிக்கறேன் சஞ்சய். ரொம்ப அழகா உங்க அனுபவத்தை பகிர்ந்து இருக்கீங்க. பயங்கர சுவாரசியமா எழுதறீங்க. keep it up.//

நன்றி மணிகண்டன்.. 200 பதிவுகளுக்கு அப்புறம் ஒரு பாராட்டு.. :))
-----------

//gayathri said...

naangalum ithu mathiri senji saptu irukome.
nanga neraya per iruka mattom 6 or 7 member than.

unga anupavam nalla iruku//
நன்றி காயத்ரி.. :))

//அசோசியேட் said...

சிறு வயசுல நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைக்கும் போது இப்பொழுதும் மனம் கனக்கிறது. அந்த புளியமரம் , கம்மாய் , வாய்க்கா, வரப்பு இன்னும் என்ன என்னவோ -- நன்றி SanJai காந்தி....//

நேரம் கிடைக்கும் போது எழுதுங்க அசோசியேட்.. நன்றி..பேர் என்ன சார்? :)

-----------

 
On February 9, 2009 at 9:30 PM , said...

//அன்புடன் அருணா said...

நாங்க இந்தக் கூட்டாஞ்சோறு எங்க வீட்டுத் தோட்டத்துக்குள்ளேயே செய்து பயங்கர அடியெல்லாம் வாங்கியிருக்கோமாக்கும்....
அழகான பதிவு.
அன்புடன் அருணா//

அப்டியா? எதுக்கு அடி வாங்குனிங்க? பகக்த்து வீட்ல அரிசி சுட்டிங்களா? :))

அக்கா.. நீங்க சொன்ன எழுத்துப் பிழைகள் எல்லாம் சரி பண்ணிட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி. :)

 
On February 9, 2009 at 9:48 PM , said...

நல்லா இருக்க்கு கூட்டாஞ்சோறு..

அது என்ன தண்ணியில உங்க சத்தம் வேணா எதிரொலிச்சிருக்கும்.. மரங்களுமா.. ஓ ப்ரதிபலிக்குதா சரி சரி.. :)

 
On February 9, 2009 at 10:20 PM , said...

//எல்லா ஊர்லையும் இப்டி தான் போடுவாங்க.. உங்களுக்கும் வீட்ல இப்டிதானா? :))//

ஆமாம். ஆனா உங்களுக்கு போடற மாதிரி நிறைய எல்லாம் போடறது இல்லை. கொஞ்சம்தான் :(

 
On February 9, 2009 at 10:22 PM , said...

//நன்றி மணிகண்டன்.. 200 பதிவுகளுக்கு அப்புறம் ஒரு பாராட்டு.. :))//

ஏதோ தெரியாம சொல்லிட்டார் விடுங்களேன்

 
On February 10, 2009 at 9:47 AM , Anonymous said...

:)

 
On February 10, 2009 at 9:48 AM , Anonymous said...

//நோ டா செல்லம்..நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்...:)
//


Oh no...

 
On February 10, 2009 at 12:39 PM , said...

அழியாத நினைவுகளை அசை போடும்போது.... அதுவே ஒரு தனி சுகம்......

 
On February 11, 2009 at 7:00 PM , said...

சப்போர்ட்க்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி பிரியா.

சஞ்சய், நான் ப்ளாக் படிக்க ஆரம்பிச்சி கொஞ்ச நாள் தாங்க ஆவுது. அதுனால தான் மிஸ் பண்ணிட்டேன். இனிமே விடாம வருவேன்.

இளையராஜா வயலின் பத்தி தப்பா சொல்றவங்கள சப்போர்ட் பண்ணினீங்க உங்க பதிவுக்கு வந்து spam பின்னூட்டம் போடுவேன் !!!!!!!

 
On February 14, 2009 at 5:41 AM , said...

அருமை

 
On February 16, 2009 at 9:45 AM , said...

முத்தக்கா.. எதோ அறியாத பையன் தெருயாம சொல்லிட்டேன்.. விட்டுடுங்களேன்.. :))

-----------

தாரணி அக்கா.. ஏன் இந்த பொறாமை? தம்பியை மத்தவங்க பாராட்டினா சந்தோஷப் படனும்.. பொறாமைப் படக்கூடாது.. :))

 
On February 16, 2009 at 9:46 AM , said...

என்னம்மா தூயா.. நீயும் கமெண்ட் போட்டிருக்கன்னு ஒத்துக்கனும் அவ்ளோ தானா? ரைட்டு விடு.. :)

-------------

ரொம்ப நன்றி வாசவன்.. அடிக்கடி வாங்கோ.. :)

 
On February 16, 2009 at 9:48 AM , said...

மணிகண்டன் , நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.. அது இளையராஜாவா இருந்தாலும்.. :))

ப்ரியா அக்காவை நம்பி நன்றி சொல்லிடாதிங்க பாஸ்.. அவங்க உங்களுக்கும் ஆப்பு வைப்பாங்க.. அவ்ளோ நல்லவங்க.. :))

 
On February 16, 2009 at 9:48 AM , said...

ரொம்ப நன்றி ராஹினி மேடம்.. :)

 
On February 24, 2009 at 12:44 PM , said...

என்ன பண்ணறது சஞ்சய் ........ எங்க ஊரிலும் அப்படித்தான் ...., ஆனா .... அப்போ கூட்டா உக்காந்து கூட்டாஞ்சோறு சாப்பிட்ட சகாக்கலெல்லாம் , இப்போ கூட்டா உக்காந்து கூட்டு சரக்கு அடுச்சுகிட்டு இருக்கோம் ....................!!!! காலம் எப்படி உருண்டு ... உருண்டு ... ஓடுது பாருங்க ...... !!!!!

 
On March 4, 2009 at 1:23 PM , Anonymous said...

அருமை நண்பரே. பழைய நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள். மிக்க நன்றி.

 
On March 15, 2009 at 12:20 PM , said...

மாம்ஸ் கலக்கல்!

 
On March 15, 2009 at 12:22 PM , said...

/எல்லாருமே வாங்கிக் குடுத்த சில நாட்களிலேயே தொலைத்து விடுவோம். தொலைத்து விட்டு மீண்டும் கேட்டால் வீட்டில் எங்களைத் தொலைத்து விடுவார்கள்.//

ஓ இப்பிடித்தான் தொலைச்சு தொலைச்சி வெளையாடறதா????
:))

 
On March 15, 2009 at 12:25 PM , said...

//அரசு பள்ளிகளில் படித்ததால் வீட்டுப் பாடம் என்ற கொடுமை எல்லாம் சுத்தமா இல்லை. எப்போதாவது அபூர்வமாக கொடுப்பார்கள். //

//ஆனால் புதுப் பழக்கம் எதுக்குன்னு நாங்க ஒன்னும் பண்ணாமலே போய் நின்னு செமத்தியா அடிவாங்கி வெளியே முட்டி போடுவோம்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்
சேம் ப்ளட்
ப்ளஸ் டூ வரைக்கும் நானும் கவர்மண்ட் ஸ்கூல்தான் மாம்ஸ்!

 
On March 20, 2009 at 6:18 PM , said...

நன்றி மேடி. :)

-------------

வந்து ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி குப்புசாமி சார். நலமா இருக்கிங்களா?.

---------------

வாங்க மங்களூர் மாமா..
//அவ்வ்வ்வ்வ்வ்வ்
சேம் ப்ளட்
ப்ளஸ் டூ வரைக்கும் நானும் கவர்மண்ட் ஸ்கூல்தான் மாம்ஸ்!//

ஹிஹிஹி.. :))

 
On July 14, 2009 at 7:21 PM , said...

நீங்க எழுதியிருக்கிற அத்தனை விஷயங்களும் நானும் அனுபவித்திருக்கிறேன்.நான் மீசை வைத்த பிறகும் கூட கூட்டாஞ் சோறு ஆக்கியிருக்கிறோம்.என்னைத் தவிர மற்றவர்களலெல்லாம் குழந்தைகள்.இப்போ ஊருக்கு போனாக் கூட நமக்கு ஐந்து வயதில் இருந்து எல்லாரோருமே ஃபிரண்ட்ஸ்தான்.சின்ன பசங்க என்னையும் அவங்க விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுவானுங்க இப்ப கூட.எனக்கு அப்படி ஒரு ராசி.அதைப் பற்றி விரைவில் ஒரு பதிவிட ஐடியா கொடுத்திருக்கு உங்களின் இந்த பதிவு.

 
On October 2, 2009 at 10:53 AM , said...

கடந்தகால பொக்கிஷம்
அழகான கிரமப்புற பகுதிகள் நினைவுகளை பின்னோக்கியபடியே நானும்,,

பதிவு சூப்பர்

 
On December 23, 2009 at 3:07 PM , said...

Its very nice... made us to remember the days we spent....

 
On June 27, 2010 at 5:19 PM , Anonymous said...

//அந்த வழியே செல்லும் பெரியவர்கள் எல்லாம் கெஞ்சுவார்கள். அவர்களும் சிறு வயதில் இதன் ருசி அனுபவித்தவர்கள் தானே. பெரும்பாலும் கொடுக்க மாட்டோம். அங்கே இருப்பவர்களின் வீட்டச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொடுக்க மாட்டோம். :)//

அட பாவிங்களா.

எங்கள் ஊரில் கூட்டஞ்சோறு என்று சொல்வார்களா தெரியாது. ஆனால் சிறு வயதில் செப்பு வைத்து விளையாடி இருக்கிறோம். செப்பு என்றால் களி மண்ணால் செய்யப்பட்ட சின்னப் பானை, இரண்டு சட்டிகள், உலை மூடி, அரிக்கன் சட்டி (அரிசி கலையும் சட்டி) ஒரு அடுப்பு என்று எல்லாம் இருக்கும். அதில் கிடைக்கற மரக்கறிகள் (காய்கறிகள்), வெங்காயம், பச்சை மிளகாய், பருப்பு, (சில வேளைகளில் உருளைக்கிழங்கு) வெள்ளை அரிசி, உப்பு, மிளகு தூள், மிளகாய்த் தூள் எல்லாம் போட்டு செய்வோம். கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு இறக்குவோம். நன்றாக இருக்கும். தேக்கமிலை அல்லது ஆமணக்கு இலையில் போட்டு சாப்பிடுவோம்.

 
On June 27, 2010 at 5:20 PM , Anonymous said...

வடகரை வேலன், உங்கள் சைட் டிஸ் சொல்லித் தந்ததுக்கு நன்றி. ஆனால், செய்து பார்க்க புளியம் பிஞ்சு கிடைக்காத தூரத்தில் இருக்கிறோம்.

 
On May 1, 2012 at 2:57 PM , said...

அருமை மிகவும் அருமை .
இந்த மாதிரி நீங்காத நினைவுகளை அள்ளித்தாருங்கள். நன்று. நன்றி!!!