இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•2:27:00 PM
பனிக்காலம் வந்தாலே ஊர்ல தினமும் காலைல கலர் கோழிக் குஞ்சுகள் விக்கறவங்களை பார்க்கலாம். சைக்கிள் கேரியரில் அகலமான மூங்கில் கூடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக 2 அல்லது 3 கூடைகள நிறைய கோழிக் குஞ்சுகள் கொண்டு வருவாங்க. ஒரே சமயத்தில் 2 , 3 வியாபாரிகள் கூட ஒன்றாய் வந்து விற்பார்கள். பச்சை , சிவக்கு, நீலம், இளஞ்சிவப்பு , பழுப்பு என பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகள் இருக்கும். எந்த வீட்டில் எல்லாம் பொடிசுகள் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் எல்லாம் இதற்கு டிமாண்ட் இருக்கும். எல்லோரும் வாங்கி வளர்ப்போம்.

நாட்டுக் கோழிகளுடன் சேர்க்காமல் இதை எப்போதும் கூண்டில் அடைத்து தனியாகவே வளர்ப்போம். நாட்டுக் கோழிகள் இவற்றை சேர்க்காது. கொத்தி காயப் படுத்திவிடும். கலர்க் கோழிக் குஞ்சுகள் வாங்கிய கொஞ்ச நாளிலேயே சாயம் வெளுத்துவிடும். சாயம் போனதும் எல்லா கலர்க் கோழிகளும் வெள்ளை நிறமாய் தான் இருக்கும்.

இதை பனிக்காலங்களில் விற்கக் காரணம் , இவைகளின் உணவு அப்போது தான் ஏராளமாக கிடைக்கும். கரையான்கள் தான் கலர்க் கோழிக் குஞ்சுகளுக்கு மிகவும் பிடித்த உணவு. அவைகள் பனிக்காலங்களில் தான் அதிகம் இருக்கும். எல்லா வகை மரங்கள், மண்ணில் விழுந்திருக்கும் சிறு சிறு குச்சிகள் ஆகியவற்றை சூழ்ந்து வீடு கட்டி குடி இருக்கும். ஒரு சிறு குச்சியை எடுத்து உதிர்த்தாலே போதும்.. நூற்றுக் கணக்கான கரையான்கள் அதில் இருந்து கீழே விழும். கலர் கோழிக் குஞ்சுகள் வேக வேகமாக அவற்றை கொத்தித் திண்பதே தனி அழகு.. இப்போது நினைத்தால் கொடூரமாக இருக்கிறது. ஒரு உயிர் வாழ எத்தனை உயிர்களை அழித்திருக்கிறோம்.

காலையில் எழுந்ததும் காலைக் கடன்கள் எல்லாம் முடித்து கூழ் குடித்துவிட்டு அவசர அவசரமாய் போய் கூண்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளை கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிடுவோம். வளர்க்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நம்முடன் நன்கு பழகிவிடும். பிறகு நாம் எங்கு சென்றாலும் நம் கூடவே வரும். ஊரில் ரோட்டோரம் ஏராளமான மரங்கள் இருக்கும். அதில் எல்லா மரங்களிலும் கரையான் இருக்கும். கிராமங்களில் பெரும்பாலும் பெரிய பெரிய புற்றுகள் இருக்கும். பெரும்பாலான் பெரிய புற்றுகள் சாமி புற்றுகளாக்கி விடுவார்கள். அங்கெல்லாம் போகவே முடியாது. அதில் நிச்சயம் பாம்பு இருக்கும். பின்ன.. எல்லாப் புத்துக்கும் ஒரு சாமி பேர் வச்சி பக்கத்துல வேல்க் கம்பு நட்டு புத்துக்கு பூ வச்சி பொட்டு வச்சி பால் எல்லாம் ஊத்தினா பாம்பு குடி இல்லாம என்ன பண்ணுமாம்.. :)..

கொஞ்சம் சிறிய புற்றுகள் அல்லது ஏரியில் இருக்கும் கருவேல மரங்களின் உடைந்து விழுந்த குச்சிகள் ஆகியவற்றில் இருக்கும் கரையான்களை கோழிக் குஞ்சுகளுக்கு இரையாக்கிவிடுவோம். ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப கரையான் புற்றுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த குட்டி ஜீவன்களின் உழைப்பு அப்போது புரியவில்லை.

பிறகு கொஞ்சம் வெயில் அடிக்க ஆரம்பித்ததும் வீட்டிற்கு வந்து கோழிக் குஞ்சுகளை கூண்டில் அடைத்து விட்டு கூண்டை தொங்க விட்டு விடுவோம். அப்போது முழுவதுமே ஓட்டு வீடுகள் அல்லது குடிசை வீடுகள் தான் என்பதால் கூரை பகுதியில் ஓடு பொருத்துவதற்கு அல்லது ஓலை வேய்வதற்கு ஏதுவாக நீளமான மரக் கொம்புகள் இருக்கும். அதில் ஒரு நீளமான மெல்லிய இரும்புக் கம்பிகளை (கட்டுக் கம்பி) கட்டி அதில் கோழிக் கூண்டைத் தொங்க விட்டுவிடுவோம். எல்லாம் வீட்டு புலிகளின் (பூனைகள்) தாக்குதலில் இருந்து காக்கத் தான்.

பிறகு பள்ளிக்கு போய்விடுவோம். ஆனாலும் அதை பற்றிய எண்ணங்களே மூளையை ஆக்கிரமித்திருக்கும். எல்லா பயல்களும் கலர் கோழிக் குஞ்சுகள் வளர்ப்பார்கள் என்பதால் அவரவர் கோழிகள் பற்றிய பெருமைகள் பேசித் தீர்ப்போம்.

“ நான் என்ன சொல்றனோ அதத் தாண்டா என் கோழி கேக்கும்.. நான் கூப்டா வரும்.. எங்க பாப்பா(தங்கை) கூப்ட்டான்னா வரவே வராது..” என்பான் ஒருவன்.

“ டே... அதாவது பரவால்லடா.. எங்க கோழி செல்லு பூச்சிய(கரையான்) கீழ போட்டா தின்னாதுடா.. என் கைல வச்சா தான் நல்லா கொத்தி கொத்தி தின்னும்.. அதுக்கு என்னா கொழுப்பு பாத்தியாடா” என்பான் இன்னொருவன் பெருமையாக..

இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த கலர் கோழிக் குஞ்சுகளை வைத்து பேசப் படும். பின் பள்ளி முடிந்தவுடன் கோழிகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கரையான்கள் கிடைக்காது. எல்லாம் குழிக்குள் சென்றுவிடும். வெய்யில் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் கோழிகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை... இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே கோழிகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. பூனைகளிடம் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு பருந்துகள். எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. தூக்கிடும்.. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாகிவிடும்.

அதை சாப்பிட்டுவிட்டு பள்ளியிலோ அல்லது பல பொடிசுகள் ஒன்றாய் இருக்கும் போதோ பேசிக் கொள்வோம்..

....”எங்க கோழில சுத்தமா எலும்பே இல்ல தெரியுமா?” என்பான் ஒருவன்.

.... போடா.. அன்னைக்கு எங்க அத்தூட்டார் (அத்தை வீட்டார்)வந்தப்போ எங்க கோழிய அறுத்துட்டோம். என்னா ருசி தெரியுமா?.. நாட்டுக் கோழி கூட அவ்ளோ ருசி இருக்காதுடா தம்பி.. நெனச்சிக்கோ..” என்பான் இன்னொருவன் பெருமையாக..
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

This entry was posted on 2:27:00 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

39 Comments:

On October 14, 2008 at 3:31 PM , said...

எனக்கு நொம்ப பிடிக்கும் இந்த கலர் கோழி குஞ்சு :))


பட் ஒவ்வொரு முறையும் வாங்கி வீட்ல வளர்த்தா ரெண்டே நாள்ல பூனையே வேற எதாவது ஆட்டைய போட்டுட்டு போயிடுங்க :((

இப்ப பார்த்தாலும் அதை நின்னு வேடிக்கை பார்த்துட்டு போறப்பா மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் :)

 
On October 14, 2008 at 3:33 PM , said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்..:)
ஊரில் இருந்து வரும்போது கலர்குஞ்சு நான்கு வைத்திருந்தோம்... ரொம்ப நாள் வரை விசாரித்துக் கொண்டு இருப்பேன்... அப்புறம் சுக்கா வைத்ததா சொன்னதும் விட்டுட்டேன்.

 
On October 14, 2008 at 3:34 PM , said...

பள்ளி விட்டு வரும்போது கலர்க்கோழி வித்துகிட்டு இருப்பாங்க. கிச் கிச் சத்ததுடன் அங்கும் இங்கும் அட்டை பெட்டிக்குள்ள ஓடிகிட்டு இருக்கும். வேடிக்கை பார்த்துகிட்டு
இருக்க பிடிக்கும்.

அந்த ஞாபகத்தை கிளப்பிவிட்டுடுச்சு உங்க பதிவு.

 
On October 14, 2008 at 3:35 PM , said...

ஆமாம் என்னாச்சு உங்க எல்லோருக்கும். மொக்கை, கும்மி எல்லாத்தியும் இப்படி மொத்தமா விட்டுடீங்களே!


கந்தா என்னவோ ஆகிருச்சு இந்த புள்ளைங்களுக்கு. :( :)))

 
On October 14, 2008 at 3:36 PM , said...

நாங்க சின்ன வயசுல செம்மறி ஆட்டுக்குட்டி வாங்கி வளர்ப்போம், அத நினைப்பு வந்துடுச்சு.
செம்மறியாடும் அப்படித்தான் ஆளுங்க பின்னாடியே வரும். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சஞ்சய்.

 
On October 14, 2008 at 3:56 PM , Anonymous said...

சூப்பர்..

நான் கூட கோழியை பற்றி எழுதி இருக்கிறேன்..

என்னுடைய கோழிக்கதையை, "கோழித்திருடன்" என்று கூகிள் இட்டு பார்க்கலாம்...

 
On October 14, 2008 at 3:57 PM , said...

இந்த மாதிரி எங்கப்பா வளர்த்த கோழியை எங்க பாட்டி கொழம்பாக்கிட்டாங்கன்னுதான் எங்கப்பா கோழி சாப்பிடறதை நிறுத்திட்டார்.

 
On October 14, 2008 at 4:03 PM , said...

எங்க நெருங்கின குடும்ப நண்பர் (மதுரை) வீட்ல இப்படி எக்கச்சக்கமா கலர்க்கோழி இருக்கும். அதுக்காகவே மேக்சிமம் அவங்க வீட்ல தங்கணும்னு ஆசைப்படுவேன். செம ஜாலியா விளையாடினது இப்பவும் நியாபகம் இருக்கு. ஊருக்கு திரும்பனும்னதும் செம ஆர்ப்பாட்டம் செஞ்சு வரமாட்டேன்னதும், அப்போ அதே மாதிரி வித்துக்கிட்டு இருந்த பொம்மையை வாங்கி சமாதானப்படுத்தி கூட்டிக்கிட்டு வந்தாங்க. இன்னொரு வருத்தம் என்னன்னா, நான் ரொம்ப ஆசையா வெச்சுக்கிட்டு இருந்த ரோஸ் கலர் கோழிக்குஞ்சை அந்த வீட்ல இருந்த அண்ணன் ஒருத்தர் தெரியாம மிதிச்சு கொன்னுட்டார்:(:(:(

 
On October 14, 2008 at 4:19 PM , Anonymous said...

//இப்போது நினைத்தால் கொடூரமாக இருக்கிறது. ஒரு உயிர் வாழ எத்தனை உயிர்களை அழித்திருக்கிறோம்.//

இது கோழியை வறுத்து தின்ன நீங்க சொல்லவே கூடாது :D

 
On October 14, 2008 at 6:06 PM , said...

இதனை படிக்கும் போது பழைய ஞாபகம் வருது,ஆனால் இதுவரை அதனை சாப்ப்பிட்டது கிடையாது, பூனைக்கும் நாய்க்கும் தான் கொடுத்திருக்கிரேன்
இவன்

www.tamilkudumbam.com
பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

 
On October 14, 2008 at 9:15 PM , said...

//பட் ஒவ்வொரு முறையும் வாங்கி வீட்ல வளர்த்தா ரெண்டே நாள்ல பூனையே வேற எதாவது ஆட்டைய போட்டுட்டு போயிடுங்க ://

கோழி வளத்தா பூனை ஆட்டைய போடுதுன்னு பூனைய வளத்தா ...
பாவிப் பயலுவ பூனைய ஆட்டைய போட்டுடாணுவ ..

 
On October 15, 2008 at 9:46 AM , said...

//panaiyeri said...

கோழி வளத்தா பூனை ஆட்டைய போடுதுன்னு பூனைய வளத்தா ...
பாவிப் பயலுவ பூனைய ஆட்டைய போட்டுடாணுவ ..//

இந்த கமெண்ட் கலக்கல். சிரித்துக்கொண்டே இருக்கேன்.

நல்ல காமெடி சென்ஸுங்க panaiyeri.

 
On October 15, 2008 at 9:53 AM , said...

//நந்து f/o நிலா said...

//panaiyeri said...

கோழி வளத்தா பூனை ஆட்டைய போடுதுன்னு பூனைய வளத்தா ...
பாவிப் பயலுவ பூனைய ஆட்டைய போட்டுடாணுவ ..//

இந்த கமெண்ட் கலக்கல். சிரித்துக்கொண்டே இருக்கேன்.

நல்ல காமெடி சென்ஸுங்க panaiyeri./

ஹாஹா.. நானும் தான்.. இதை படிச்சதும் சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்.. அனுபவத்தை எவ்ளோ அழகா சரியான இடத்துல பயன் படுத்தி இருககார்.. கலக்கல் பனையேறி.. :))

 
On October 15, 2008 at 10:32 AM , said...

போண்டா கோழின்னு சொல்லுவோம், எங்கூரில்! நானும், வளர்த்த சமயத்தில் நிறைய கொலைகளுக்குத் துணைபோயிருக்கிறேன் :) மழை முடிந்து 2-3 நாட்கள் ஆன பின், உதிர்ந்து கிடக்கும் மரத்துண்டுகளில், கறையான்கள் அதிகமாக இருக்கும்.

என்னதான் கொழு கொழுன்னு, பொடியன் மாதிரி இருந்தாலும், நாட்டுக் கோழி ருசிக்கு இணையில்லை :)

 
On October 15, 2008 at 5:03 PM , said...

நாங்க சைவம் அதனால வீட்டுல கோழி வளர்கிறதுக்கு எல்லாம் அனுமதி கிடைக்காது :(. ப்ரெண்ட் வீட்டுல இருக்கற கோழிக்கு எல்லாம் கரையான் பிடிச்சு போடுவோம்

 
On October 15, 2008 at 5:37 PM , said...

நானும் கலர் கோழி குஞ்சு வளர்த்து இருக்கேன். ஆனா ஒன்னு கூட பெருசானதுஇல்ல!

 
On October 16, 2008 at 9:48 AM , said...

மாம்ஸ் தலைப்பு ஆபாசமாக இருக்கு:))

மாற்றவும்!

இப்படிக்கு தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்

(கோழி குஞ்சு கலரா இருந்தா என்ன இல்லேன்னா என்ன)

 
On October 16, 2008 at 9:51 AM , said...

//காலையில் எழுந்ததும் காலைக் கடன்கள் எல்லாம் முடித்து கூழ் குடித்துவிட்டு அவசர அவசரமாய் போய் கூண்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளை கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிடுவோம். //

பொருசா டால்மேசன் நாய கூட்டிக்கிட்டு வாக்கிங் போற மாதி பில்டப்ப பாரு! மேச்சது கோழி!!

 
On October 16, 2008 at 10:14 AM , said...

சஞ்சய் உன் போஸ்ட் எப்படியோ. முதல்ல பனையேறி கமெண்ட்,

இப்ப குசும்பன் கமெண்ட். சான்சே இல்ல அப்படி சிரிச்சேன்...


இப்படி ரிலாக்ஸான கமெண்ட்ஸ் படிக்கறதுக்காகவே போஸ்ட் போடு...

 
On October 16, 2008 at 2:56 PM , Anonymous said...

ஈழத்தில் இவை நிறம்பூசி விற்கப்படுவதில்லை.வெள்ளைக் குஞ்சுகளாகவே இருக்கும்; இது வைற் லெக்கோன் எனும் ஒரு மேல்நாட்டு இனம்; இதை வாங்கி அடைகிடக்கும் நாட்டுக் கோழியுடன்
சேர்த்து வளப்பவர்களும் உண்டு . அல்லது அரிக்கன் லாம்பு; மின் விளக்கால் வெப்பம் கொடுத்து
வளர்ப்பவர்களும் உண்டு. அன்றைய நாட்களில் இவை குஞ்சொன்று 50 சதத்துக்கு விற்கப்பட்டது.
இவை பொதுவாக வளர்ந்த போது சேவலாகவே வரும்..;;அதன் சூக்குமம் பின்னே புரிந்தது.
இந்த இயந்திரத்தின் உதவியால் குஞ்சு பொரிக்குமிடங்களில் ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை
பால் பிரித்து பேட்டுக் குஞ்சு 2 ரூபா; சேவல் 5 சதம்....பால் பிரிக்காத கலப்புக் குஞ்சு 50 சதமென
விற்பார்கள். இந்தச் சிறு வியாபாரிகள்;;;சேவல் குஞ்சை 5 சதத்துக்கு வாங்கி 50 சதத்துக்கு விற்று
விடுவார்கள். பொதுவாக குஞ்சிலே பால் பாகுபாடு அறியும் நுணுக்கம் தெரியாததால் பலர் பேடும் வரும்
மென நினைத்து வாங்கி ஏமாறுவர்.
மேலும் இந்த வகைக்குஞ்சுகள்...மிக இலகுவில் நோய் வாய்ப்பட்டுவிடும்....10 வாங்கி ஒன்று மிஞ்சுவதே
அருமை...
மிகுந்த கவனிப்புடன்; மருந்துச் செலவும் உண்டு....
இவை என் அனுபவங்கள்.
கூட்டுக்குள் இரவில் இவை அரிக்கன் லாம்பைச் சுற்றிப் சூட்டுக்குப் ஒன்றில் மேல் மற்றது தலை வைத்துப் படுத்திருக்கும் போது; பருத்தி பஞ்சுப் பொதியைப் பிரித்துப் பரப்பியது போல் இருக்கும்; நான் பல
இரவுகளில் மெதுவாக கூட்டில் தட்டினால் அவை தலையைத் தூக்காமல் ஒருங்கே கண்விழித்துப்
பார்க்கும் அந்தக் காட்சி பரப்பிய பஞ்சுப் பொதியில் மிளகு தூவியதுபோல் இருக்கும்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
என்னால் மறக்கமுடியாத இளமைக் காலம்....
இப்போ வெளிநாட்டு வாழ்வில் இவற்றை அனுபவிக்க முடிவதில்லை. 2005 ஈழம் சென்றபோது
வீட்டாருக்கு நான் வரும் திகதி பொரிக்கக் கூடியதாக ஒரு கோழியை அடை கட்டி விடும்படி கேட்டு
நான் சென்ற அன்று பொரித்த 12 குஞ்சுகளுடன் ஒரு மாதம் நின்று மகிழ்ந்தேன் .
50 வயதில் இது ஒரு பைத்தியக்காரத்தனமாகப் பலருக்குப் படலாம். ஆனால் நான் மிக மகிழ்த்தேன்.

 
On October 16, 2008 at 5:13 PM , said...

பாதியில் விட்ட கும்மி இடைவேளைக்கு பின்...

 
On October 16, 2008 at 5:14 PM , said...

//கம்பு நட்டு புத்துக்கு பூ வச்சி பொட்டு வச்சி //

சடை யாரு மாமா பின்னிவிடுவாங்க!

 
On October 16, 2008 at 5:17 PM , said...

//எல்லாம் குழிக்குள் சென்றுவிடும். வெய்யில் காரணமாக இருக்கலாம்//

இந்த கண்டுபிடிப்புக்காவே இந்த வருட நோபல் பரிசு உமக்குதான் மாமா!

 
On October 16, 2008 at 5:18 PM , said...

//ஆனாலும் எங்கள் கோழிகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை.//

இருக்காத பின்னே கோழி வெடக்கோழியா இருந்தா இன்னும் பெருமை அதிகம் தான். (மாமா எந்த கோழிய சொல்றீங்களோ அதே கோழியதான் நானும் சொன்னேன்)

 
On October 16, 2008 at 5:20 PM , said...

மாமா ஊர் பசங்க எல்லாம் சேந்து வளர்த்த கோழி குஞ்ச பத்தி சொன்னீங்க ஆனா உங்க...

..
..
..

பக்கத்து வீட்டு பரிமளா வளத்த கோழி குஞ்ச பத்தி சொல்லவே இல்லையேன்னு கேட்க வந்தேன் மாமா

 
On October 16, 2008 at 5:22 PM , said...

நந்து f/o நிலா said...
இப்படி ரிலாக்ஸான கமெண்ட்ஸ் படிக்கறதுக்காகவே போஸ்ட் போடு...//

பெருசு இங்கே எல்லாம் வக்கனையா கமெண்ட் போடுங்க, பதிவு போட கூப்பிட்டா பதிவு மட்டும் போடாதீங்க!

 
On October 17, 2008 at 1:45 AM , said...

எங்கள் வீட்டில் நாட்டு கோழி வளர்த்ததால் இந்த கலர் கோழி குஞ்சுகளை வளர்க்கவில்லை. இருந்தாலும் நீங்கள் கூறியிருக்கும் அனைத்தும் நாங்களும் எங்கள் நாட்டு கோழி குஞ்சுகளுக்காக செய்திருக்கிறோம். (அவைகளை கூட்டிக்கொண்டு காலையில் செல்வதை தவிர.).

இருப்பினும் என் நண்பன் வீட்டில் இந்த கலர் கோழி குஞ்சுகளை வளர்த்ததால் அவைகளுடன் விளையாடிய நியாபகம் நன்றாகவே இருக்கிறது. அதுவும் அவைகளில் ஒரு கோழி இருக்கிறதே... அதை கோழி என்பதை விட நாய் என்று கூறலாம். காரணம்... அந்த சேவல் ரொம்பவும் மூர்க்கமானது. என் நண்பனின் வீட்டுக்கு அருகில் செல்லவே அனைவரும் பய படுவர். அந்த வழியாக செல்லும் அனைவரையும் அது கொத்த வரும். அதுவும் அது ரொம்ப பெரியதாக வளர்ந்துவிட்டிருந்ததல் அனைவரும் அதை கண்டால் பயபடுவர். இப்படி பழைய நியாபகங்களை அசை போட வைத்தமைக்கு மிக்க நன்றி பொடியன் அவர்களே.

 
On October 25, 2008 at 9:06 PM , Anonymous said...

கலர்குஞ்சு ரொம்ப பிடிக்கும்.. :)

குஞ்சு பார்த்துட்டு போறப்பா மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.. :)

எப்ப பார்த்தாலும் அதை நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு
இருக்க பிடிக்கும். ;-))

குஞ்சு மேட்டர் குஜால் ஐடியா தம்பிசெட்டிபட்டி பொடியன்-|-SanJai

சாரு நிவேதிதாவுக்கு அப்புறம் குஞ்சு மேட்டர் எழுதுனது நீங்க தான்!

- திரேஷ்

 
On October 26, 2008 at 10:18 PM , said...

கொஞ்சம் அப்படியே மலரும் நினைவுகளுக்குப் போயாச்சு...

(ஆமா அதென்ன குசும்பன் தலை தீபாவளி பதிவுல சஞ்சய் பேரு அடிபடுது?)

 
On October 30, 2008 at 9:10 PM , said...

நல்ல பதிவு...

மனசை அள்ளிட்டீங்க தல...

ஆனா பாருங்க எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்ல, அம்மாவுக்கு பிடிக்காது. ஆகவே என் மகள் ஆசைப்பட்டால் வாங்கி வளர்த்து நம்ம ஆசையையும் நிறைவேத்திக்கனும்!

 
On November 7, 2008 at 6:19 PM , said...

கோழி மட்டும் அல்ல,மீன்களும் முயலும் ஏன் பொன் வண்டும் வைத்துகொண்டு பண்ணியவை மறக்க மறுக்க முடியா சந்தோசமான தருணங்கள்..நன்றி...

 
On November 7, 2008 at 6:19 PM , said...

அனானியின் வார்த்தைகள் மற்றும் அனுபவம் அழகு....

 
On November 11, 2008 at 11:02 AM , said...

நான் அப்பொ மூனாவது இல்ல நாலாவது படிசிட்டு இருந்தேன்...
என்னோட வீடு பக்கதுல இருந்த பசங்க எல்லாம் இந்த கலர் கோழி குன்ஜி வாங்கி இருந்தானுக...
நானும் ரோம்ப ஆச பட்டு அப்பா கிட்டே கேட்டேன்…
ஆனா... வூட்ல பாம்பு வன்துரும்னு அப்ப வெனாம்னு சொல்லிடரு...
இன்னிகி வரைகும் என்னல கோழி வளக்கவே முரியல...

என்னொட சின்ன வயசு நிராசைல இதுவும் ஒன்னு…

ஆனாலும் என்னிகாவது ஒரு நாள் நால் கோழி வளக்க தான் போரேன்.....


Excellent Post. Nice Memories

 
On November 14, 2008 at 8:54 AM , Anonymous said...

//கரையான்கள் அதில் இருந்து கீழே விழும். கலர் கோழிக் குஞ்சுகள் வேக வேகமாக அவற்றை கொத்தித் திண்பதே தனி அழகு.. இப்போது நினைத்தால் கொடூரமாக இருக்கிறது//

அது ecological balance. நம்ப புடிச்சு கோழிக்கு போடக்கூடாது. அதுவா புடிச்சு சாப்பிடலாம்.

 
On November 25, 2008 at 3:53 PM , said...

கலர் கோழி
நொம்ப ஞாபகத்த கிளறி விட்டுடுச்சு பாஸ்

கோழி வாங்கி காக்காவுக்கு நேந்து விடறது அடிக்கடி நடந்ததால
இந்த ப்ராசஸையே கை விட்டுட்டோம்.

கடைசி பொடிசுகள் வரிகள், அப்படியே இயல்பாய் இருந்தது.
கொஞ்ச நேரம் அப்படியே அதன் ஸ்டைல்லயே மனசுக்குள்ள சொல்லிப் பாத்துக்கிட்டேன்.

 
On September 6, 2009 at 8:49 AM , said...

அருமையான பதிவு

 
On June 27, 2010 at 4:44 PM , Anonymous said...

என்னங்க சொல்றீங்க. சஞ்சேய் எழுதியதா இது. அவர் போட்டோவுக்கும் எழுத்துக்கும் சம்மந்தம் இருக்கற மாதிரி தெரியல்லையே. =))

Excellent Post.

எங்கள் ஊரில் இப்படி கலர் கோழிகள் இல்லை. ஆனால் சின்ன வயதில் ஏதோ ஒரு படத்தில் பார்த்து விட்டு வீட்டில் நான் அடித்த கூத்தில் கலர் அடிச்சு கொடுத்தாங்க.

சின்ன குஞ்சுகளுக்கு கறையான் (றை தான் வரும் என்று நினைக்கிறேன்) தேடிக்கொடுக்கறது நாங்களும் செய்தது தான். நாங்க மட்டும் தான் அப்படி லூசுத் தனமாக ஏதோ செய்திருக்கிறோம் என்று நினைத்தேன். இங்க பார்த்தால் தான் தெரிகிறது எங்களோட முப்பாட்டன்கள் எல்லாம் கூட அப்படித் தான் செய்திருக்கிறார்கள் என்று. ஹா ஹா.

அப்புறம் வீட்டில் வளர்க்கும் கோழிகளை அடித்துச் சாப்புடும் கொடூர குணம் எங்களுக்கு இல்லை. ஆனால், கடையில மட்டும் வாங்குவோம். ஹி ஹி.

அப்புறம், ஏன் அங்கிள் உங்க பேரு பொடியன் சன்சேய்ன்னு இருக்கு. இளைமையா காட்டிக ரொம்பவே கஷ்டப்படறீங்க. =))

யார் யாரையோ மெறட்டறதுக்கு ஃபிளைட்டே அனுப்பறேன்னு சொன்னீங்க. உங்க ஊரில மாநாடு நடக்கறது. என்னகு ஒரு ஃபிளைட்டிக்கெட் கூட அனுப்பல. சை. பீலிங்கஸ் (வசூல் ராஜா கமல் மாதிரி படிக்கவும்)

 
On August 24, 2018 at 5:30 PM , said...


I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Builders In Trivandrum
Flats In Trivandrum
Apartments In Trivandrum
Flats Near Technopark
Villas In Trivandrum
Budgeted homes Trivandrum
Flats In Thiruvananthapuram
Builders In Thiruvananthapuram
Builders near Technopark

 
On November 5, 2018 at 12:18 AM , said...

Valuable in formation. Thanks for sharing the article

Villas in Trivandrum
Villas for sale in Trivandrum
Builders in Trivandrum
flats in Trivandrum
apartments in Trivandrum
Villas in Trivandrum near me