•9:20:00 AM
படங்களின் மேல் க்ளிக் பண்ணுங்க. பெரிய திரையில் தெரியும்.
கிணற்றில் விளையாடிக் கொண்டிருந்த மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் 5 அல்லது 10 நிமிட தாமதத்தால் கீரி - பாம்பு சண்டையை தவற விட்டுவிட்டேன். ரொம்ப பெரிய நாகப் பாம்பு. 2 கைகளாலும் தூக்கி தான் புதரில் விச முடிந்தது. அவ்வளவு கனம். போர்க் களம் : பருத்தி வயல்.ரூம் போட முடியலைனாலும் மரத்தடியில உக்கார்ந்து யோசிப்போம்ல.. இங்கிருந்து வலது புறம் 10 அடி தூரத்துல தான் அந்த கீரி - பாம்பு சண்டை நடந்திருக்கு.
இதுக்குப் பேர் மானம். அரிசி பருப்பு ஆகியவற்றை அளக்க பயன்படுத்துவார்கள். இப்போதும் வீட்டில் பயன்படுத்துகிறோம். இதைவிட 2 மடங்கு அதிக கொள்ளளவு இருந்தால் அதற்கு “படி” என்றும் படியைவிட 4 மடங்கு பெரிதாக இருந்தால் “ வல்லம்” என்றும் பெயர். தானியங்களை வல்லத்தில் அளந்து தான் மூட்டை கட்டுவார்கள். அதில் அளந்து தான் விற்பனையும் செய்வார்கள்.
அந்த காலத்து ”நிஜக் கதைகளை” சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு தாத்தா . அவருக்கு வலதுபுறம் தென்னை மர நிழலில் அமர்ந்து ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். விரைவில் அதை சொல்கிறேன். நம்ப முடியுதா பாருங்க. எல்லாம் நிஜம் என்கிறார். :)
இதுக்கு பேர் தெரியலை. மறந்து போச்சி. இதோட விதைகள் கடுகு மாதிரி இருக்கும். இதை கடுகில் கலப்பதாகவும் சொல்வார்கள். வித்தியாசம் தெரியாது.
ஆவாரம் பூ.. இப்போ எல்லாம் இருக்கும். பொங்கல் சமயத்தில் படையலுக்கு வைக்க தேடினால் கிடைக்காமல் அலையவிடும். :)
சென்ற மாத சுவடுகளில் பார்த்த அதே காட்டாமணக்கு தான், இப்போ பூ விட்டு பார்க்க அழகா இருக்கு. குசும்பன் சொன்னது போல் இதில் வரும் திரவம் மூலமும் ஹூக்கின் நுனியில் முட்டை விடலாமாம். யூ ஆர் ரைட் மிஸ்டர் குசும்பன். ;)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
58 Comments:
ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்
nellaitamil
கீரி பாம்பு சண்டை;
[ஹிஹி செத்த பாம்பை தைரியமாய் தூக்கிப் போட்டு விட்டு] அந்த இடத்துக்கு அருகிலேயிருந்தபடி ஹீரோவின் போஸ்;
மானம், படி, வல்லம் பற்றிய விளக்கங்கள்;
தொட்டியிலே வளைந்து விழும் தண்ணீரின் பாய்ச்சல் படம்;
செடிகொடிகள் காய்கனிகள்;
தாத்தா சொன்ன கதை என்ன என்று ஒரு சஸ்பென்ஸ்;
எல்லாத்துக்கும் மேலே தீக்ஷிதாவின் விஸில்...
அருமை அருமை. அத்தனைக்கும் நன்றி.
:)
:)
பாம்பு போட்டோ பக்கா!
// கிராமத்து சுவடுகள் - ஏப்ரல் 2 //
நெம்ப சந்தோசமுங்கோவ்........!!!! நல் வரவுங்கோவ்......!!!
மேல சொல்லுங்கோவ்.......!!!!
// கிணற்றில் விளையாடிக் கொண்டிருந்த மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் 5 அல்லது 10 நிமிட தாமதத்தால் //
ஏதோ ப்ளைட்டு தாமதமுங்கர மாதிரி சொல்லிபோட்டீங்கோ......!!!
// கீரி - பாம்பு சண்டையை தவற விட்டுவிட்டேன். ரொம்ப பெரிய நாகப் பாம்பு. 2 கைகளாலும் தூக்கி தான் புதரில் விச முடிந்தது. அவ்வளவு கனம். போர்க் களம் : பருத்தி வயல். //
அட ஏனுங் தலைவரே ....... !! மொதோ படமே நெம்ப வல்கரா இருக்குது......!! எனக்கென்னமோ இத கடைசியா போட்டிருக்கலாமின்னு தோனுது....!! பரவால்ல எது எப்புடியோ...... நம்ம கீரிப்புள்ளதான் எப்பவுமே " கிங்கு "......!!!!!
// ரூம் போட முடியலைனாலும் மரத்தடியில உக்கார்ந்து யோசிப்போம்ல.. //
அட நீங்க வேற தம்பி.......!! ஏ . சி ரூம் போட்டாளுமும் இந்த மாதிரி இயற்கையான காத்து கெடைக்கவே கெடைக்காது..... !! அதுமில்லாம இங்க ஒக்காந்தாத்தேன் நெரிய ஐடியா கெடைக்குமுங்கோ.........!!!!
// இங்கிருந்து வலது புறம் 10 அடி தூரத்துல தான் அந்த கீரி - பாம்பு சண்டை நடந்திருக்கு. //
ஏதோ மீடியாகாரங்க கார்கில் வார் நடந்த எடத்துக்கு பக்கத்துல இருந்து பேட்டி குருக்குற ரேஞ்சுல பில்ட்- அப் உட்டுருக்குரீங்கோ.......!!!!
இதெல்லாம் நெம்ப டூ-மச்.........!!!
அட .. தென்னமட்டகீது உளுந்தரபோவுது.... கொஞ்சம் தள்ளிகோருங்கோ......!!!!
// இதுக்குப் பேர் மானம். அரிசி பருப்பு ஆகியவற்றை அளக்க பயன்படுத்துவார்கள். இப்போதும் வீட்டில் பயன்படுத்துகிறோம். இதைவிட 2 மடங்கு அதிக கொள்ளளவு இருந்தால் அதற்கு “படி” என்றும் படியைவிட 4 மடங்கு பெரிதாக இருந்தால் “ வல்லம்” என்றும் பெயர். தானியங்களை வல்லத்தில் அளந்து தான் மூட்டை கட்டுவார்கள். அதில் அளந்து தான் விற்பனையும் செய்வார்கள். //
ஓஓ......!! பரவால்ல... நா " படி " , " வல்லம் " மட்டும்தேன் பாத்திருக்குறேன்....!!!
" மானம் " பாத்ததில்ல..... !!
// தேக்கு பூ மற்றும் காய்கள். //
நெம்போ அண்ணாந்துபாத்து எடுத்திருப்பீங்கலாட்ட.....!! மாடன் ஆர்ட் மாதிரி நல்லாத்தேன் இருக்குது......!!!
// தொட்டியில் நிறைந்து வயலுக்குப் போகும் தண்ணீர்.. அழகா இருக்குல? :) //
அடா... அடா.... அடா....!! பாத்தாலே குளிக்குனும்போல இருக்குது.....!! தண்ணி உளுவரது நெம்ப அழகா இருக்குதுங்கோ தலைவரே......!!!
// வெங்காயப் பூக்கள் //
இன்னுமும் கொஞ்சம் க்ளோஸ்-அப்புல எடுத்துருக்கலாம்......!!
//சிக்கடிக்காய்.. பொரியல் ரொம்ப சுவையா இருக்கும் //
அட ... கொத்தவரங்கா.........!! ஆமாங்கோவ்......!! நெம்ப நல்லா இருக்குமுங்கோவ்......!!
இந்த கொத்தவரங்காயில நார் சத்து அதிகம்......!!! ஒடம்புல இருக்குற கொழுப்ப ( பேச்சுல இருக்குற கொழுப்ப இல்ல ) கரைக்கும்.......!!
// அந்த காலத்து ”நிஜக் கதைகளை” சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு தாத்தா . அவருக்கு வலதுபுறம் தென்னை மர நிழலில் அமர்ந்து ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். விரைவில் அதை சொல்கிறேன். நம்ப முடியுதா பாருங்க. எல்லாம் நிஜம் என்கிறார். :) //
அப்போ அடுத்த பதிவு நெம்ப இண்டரஸ்டிங்கா இருக்குமின்னு சொல்லுங்க தலைவரே.......!!!!
// இதுக்கு பேர் தெரியலை. மறந்து போச்சி. இதோட விதைகள் கடுகு மாதிரி இருக்கும். இதை கடுகில் கலப்பதாகவும் சொல்வார்கள். வித்தியாசம் தெரியாது. //
பரவால புடீங்கோ .......!! சூதானமா யோசிச்சு மெதுவாத்தேன் சொல்லங்கோ ......!!!
//சென்ற மாதம் சிறு செடியாக பார்த்த முலாம்பழம் செடியில் இப்போது காய்கள். //
அப்போ முலாம்பழ சூஸ் வேணுமின்னா கோயம்பத்தூர் வந்தரலாம்.......???!!!???
// ஆவாரம் பூ.. இப்போ எல்லாம் இருக்கும். பொங்கல் சமயத்தில் படையலுக்கு வைக்க தேடினால் கிடைக்காமல் அலையவிடும். :) //
ஆஹா....!! இது ஒரு நெம்ப அற்புதமான மூலிகை.... !! இதுவுமும் ஒடம்புல இருக்குற கொழுப்ப கரைக்கரதுக்குமும், சர்க்கரை நோய் இருக்குறவுங்களுக்கு சக்கர அளவ குறைக்கரதுக்குமும் நெம்ப அருமையான மூலிகை.....
ஒடம்புல இருக்குற கொழுப்ப கரைக்கரதுக்கு.....
இந்த ஆவாரம்பூவ காம்பெல்லாதையுமும் நீகீட்டு ஒரு பாத்தரத்துல போட்டு கொதிக்கிற சுடுதண்ணிய ஊத்தி ஒரு அஞ்சு நிமிஷம் மூடி வெக்யோனும்.... அப்பத்தான் அதுல இருக்குற பூச்சி .. புழுவெல்லாம் செத்துபோவும்....!! அப்பறமா தண்ணிய வடிகட்டீட்டு , போவ தோச மாவுல கலந்து சீரகம் , சின்ன வெங்காயம் , கருவாப்புதல , பச்ச மொலவா , எல்லாத்தையும் கில்லி போட்டு , உப்பு சேத்து பணியாரமா ஊத்தி சாப்புட்ட ஒடம்புக்கு நேம்போ நல்லது .....
அதுமட்டுமில்லாம ரத்தத்த சுத்தம் செய்யும் .......
சுகர் பேசன்ட்டுக்கு......
இந்த ஆவாரம்பூவ காம்பெல்லாத்தையுமும் நீக்கீட்டு நெழல்ல காயவெச்சு பொடி பண்ணி தெனமும் காலையில ஒரு ஸ்பூன் சாப்பிட்டா சுகர் தொல்லை இனிமேளுமும் இல்லை......!!
ஆவாந்தலைய காயவெச்சு பொடி பண்ணி வெச்சி போக போட்டா கொசு வராது.....!!
// சென்ற மாத சுவடுகளில் பார்த்த அதே காட்டாமணக்கு தான், இப்போ பூ விட்டு பார்க்க அழகா இருக்கு. //
அப்போ சீகிரமே அதுல ஆயில எடுத்து பெரிய அம்பானி ஆயிருவீங்கோ......???
எப்புடியோ எங்குளுக்கு ட்ரீட் வெச்சா ச்சேரி.........!!!!
// மரவள்ளிக் கிழங்கு செடிகள். //
" ஓஒ.....!! எந்தா கப்பயோ.........?? "
.
.
.
.
.
அப்புடீம்பாங்கோ மலையாலத்துக்காரங்கோ.....!!!!
// படம் புடிச்ச மாமனுக்கு அக்கா மகள் அடிக்கும் விசில். சத்தம் கேட்குதா? :)) நான் விசில் அடிச்சதை பார்த்து பழகும் தீக்ஷிதா. :) //
இது நெம்ப பொய்யி.....!! என்னால நம்ம்பவே முடியாது........!!!
மொக்க பதிவ போட்டிருக்குறியே மாமான்னு கல்லெடுத்து அடிக்கற மாதிரி தெரியுது.....!! நீங்க ஏதோ போட்டோவ கிராபிக்ஸ்ல டகால்டி வேல பன்னி மாதீடிங்கோ.....!!!
எதா இருந்தாளுமும் நா தீக்க்ஷி குட்டிமா'கிட்ட நேருல கேட்டுகிறேன்......!!!
தமிழ் மணத்துக்கு நான்தான் அனுப்பி வைத்தேனாக்கும்:)!
ப்பா, செத்த பாம்பைக்கண்டாக்கூட குலை நடுங்குது. இந்த மாதிரி தண்ணி பம்ப்செட்டுல பாத்து எவ்வளோ நாளாச்சு
//தொட்டியில் நிறைந்து வயலுக்குப் போகும் தண்ணீர்.. அழகா இருக்குல? :)//
இதையெல்லாம் பார்த்து, அனுபவிச்சி ரொம்ப வருஷமாச்சு!
//ரூம் போட முடியலைனாலும் மரத்தடியில உக்கார்ந்து யோசிப்போம்ல.. //
அங்க உக்காந்து இருக்கப்ப இருக்க சுகம் செண்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷன் ரூம்ல இருக்கப்ப கூட வராது மாப்பி
எங்க ஊர் பக்கம் மரக்கால்னு சொல்லுவாங்க மாப்பு. வல்லம்னு நீங்க சொல்றது நாங்க வாளின்னு சொல்லுவோம்
5 மரக்கால் ஒரு வாளி
5 வாளி ஒரு மூட்டை . இப்டித்தான் எங்க பக்கத்து கணக்கு.
தண்ணி என்ன மாப்ள 2 இன்ச் சப்ளை தானா? ரொம்ப கம்மியா இருக்கே?
கரும்பெல்லாம் போட்டா சமாளிக்க முடியுமா?
ஆவரம்பூவ தேடி அலையுறியா? அடப்பாவி அப்ப பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வந்துரு. ஆவரம்பூ எடுத்துட்டுப் போகலாம்.
அந்த காட்டமணக்கு இலை காம்ப உடைச்சா அதுல வர்ற தண்ணிய கையால தேய்ச்சா நுரை வரும், நாங்க இத வைச்சு எப்டி சோப்பு செய்யிறதுன்னு எல்லாம் ஆராய்ச்சி செஞ்சுருக்கோம் சின்னப்புள்ளைல.
அடப்பாவி, அக்கா மகளையும் உன்னைய மாதிரி கெடுத்து குட்டிச்சுவராக்கிறாத
எனக்கு என் ஊரு நினைப்பு வந்துருச்சு மாப்பு.
ஒரே ஃபீலிங்ஸ்.
/
ஜோசப் பால்ராஜ் said...
எனக்கு என் ஊரு நினைப்பு வந்துருச்சு மாப்பு.
ஒரே ஃபீலிங்ஸ்.
/
சேம் ப்ளட்
இந்த தடவை அசத்துனது தீக்ஷிதா!!!!
அன்புடன் அருணா
சஞ்சய்,
செத்து போன பாம்பை பார்க்கவே பயமா இருக்குது. ஒரு 5 நிமிடத்துக்கு முன்னால போயிருந்தீங்கன்னா இந்த கீரி பாம்பு சண்டையை தவிர்த்திருந்திருக்கலாம். என்னமோ போங்க.
எங்க வீட்டுல இதை "நெய் படி"னு சொல்லுவாங்க. மானம்னு நீங்க சொல்லி தான் கேட்கறேன்.
உங்க அக்கா பொண்ணு தீக்ஷிதாவின் விசில் சூப்பர். அந்த தாத்தாவோட நிஜ கதைகளை எதிர்பார்த்துட்டு இருக்கேன் சீக்கிரம் பதியுங்க.
வழக்கம் போலவே அருமையா படம் பிடிச்சு போட்டிருக்கீங்க.
அண்ணா அண்ணா உங்க ஊருக்கு என்னையும்,பரிக் குட்டியையும் கூட்டிட்டு போங்களேன்:)
படங்களைப் பார்த்தவுடன் அந்த இடத்தை நேர்ல பார்க்கனும் போல இருக்கு!
//சிக்கடிக்காய்.. பொரியல் ரொம்ப சுவையா இருக்கும்.
//
எங்க ஊர்ல இதுக்கு பேரு கொத்தவரங்காய் :(
ஆவாரம் பூ rompa nala pakkanumnu asai unga postla pathuten thanks pa
vithyasamana pathivu sanjai anna
உங்க பதிவை பார்த்து மிகவும் மெய் சிலிர்த்து அந்த கிராமத்து காற்றை சுவாசித்தேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நிங்க பெற்ற சந்தோசத்தை நம்மிடம் பதிவாய் அழகாய் பகிர்ந்துக்கொண்டதற்க்கு நன்றிகள்
கிரி பாம்பு சண்டை ஜஸ்ட் மிஸ்
என்னைய மாதிரி நகரத்துக் காற்றை மட்டும் சுவசித்துக் கொண்டு... கிராமங்களையே காணாத கண்களுக்கு இது விருந்துதானுங்கோவ் !!!
Nice Post keep it up:)))))))))
என்ன சஞ்செய் !
தமிழ் நாட்டில மட்டுமில்லாது வட நாட்டிலும் கூட கை நட்டுக்குமாமே ? என்ன கொடுமையப்பா இது ?
வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன்
மருங்காபுரி இளவரசன்.
( கை நட்டுக் கொண்டால் உங்கள் மனது நோகுமே அதற்காக வருத்தம். நாடு தப்பித்து விடுமே அதற்காக மகிழ்ச்சி.)
படங்கள் எல்லாம் தூள்ப்பா
நன்றி தமிழ்சினிமா. வருகிறேன்.
நன்றி லக்ஷ்மி அக்கா.. தமிழ்மணத்துல சேர்த்ததுக்கும் :)
(கிர்ர்ர்ர்ர்ர்.. டோட்டல் டேமேஜ்)
நன்றி வித்யா.. :)
நன்றி சிவா :)
( புலிக்கு பாம்பைப் பிடிச்சிருக்கா? :) )
நன்றி மேடி. :)
சின்ன அம்மிணி அக்கா.. பயப்படாதிங்க. நானிருக்கேன். தம்பி உடையார் படைக்கஞ்சார். :)
நன்றி சிபி. எங்க ஆளையே காணோம்?
நன்றி ஜோசப் மச்சி..:)
நன்றி மங்களூர் மாமா.. :)
நன்றி ராசுக் குட்டி.. :)
நன்றி பூர்ணி. :)
நன்றி சுப்பு.. :)
நன்றி காயத்ரி. :)
நன்றி சக்தி.. :)
நன்றி சுரேஷ் :)
நன்றி கடைக்குட்டி :)
நன்றி காடுவெட்டி :)
அன்புள்ள அனானி அவர்களுக்கு,
தாங்கள் யாரென்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து இங்கே அரசியல் வேண்டாம். அதற்கு தனி இடம் இருக்கு. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
படங்களை ரசித்ததற்கு நன்றி.
இந்த படங்களை பார்க்கும் போது வார்த்தியால் விவரிக்க முடியாத கிராமத்து மண் மணத்தை நுகர முடிகிறது.
தங்கள் சேவை தொடரட்டும்.
//ஆவாரம் பூ.. இப்போ எல்லாம் இருக்கும். பொங்கல் சமயத்தில் படையலுக்கு வைக்க தேடினால் கிடைக்காமல் அலையவிடும்//
நானும் அலைந்திருக்கிறேன்.
ஊர் ஞாபகம் வந்திடுச்சு.
கலக்கல் படங்கள்.
சத்தமிடாத பாம்பு , சலசலக்கும் தண்ணீர் தொட்டி, அளந்து விடும் மானம், அள்ளித் தெளித்த சிரிப்பு விசில், கிராமத்து கிளியின் கிட்டி விளையாட்டு, உக்கிர சூரியனின் நடுவில் நல்ல நர்த்தனம், நல்ல்தொரு செடியின் படம் வின்னைப் பிடிக்கும் மரத்தடியில் வித்தியாச நாயகன். வன்னத்தை அள்ளி அப்பிக் கொண்ட படங்கள், நெருப்பில் தகித்த தங்கச் சிதறல்கள்.
வாழ்த்துக்கள் கோவை குடி கொண்ட கோமக்னே!
வாரப் பத்திரிகையில் எழுதுபவன்.
வெங்காய பூக்கள்..நான் இதுவரை பார்த்ததில்லை..உங்கள் பதிவில் பார்த்துகொண்டேன்.
பாம்பு படம் பக்கா..
மிக்க நன்றி முக்கோணம்.
( பேர் வித்தியாசமா இருக்கே. :)
மிக்க நன்றி நாடோடி இலக்கியன்.. உங்கள் நினைவுகளையும் எழுதுங்களேன் .
வாரபத்திரிக்கையில் எழுதுபவரே,
பாட்டாவே படிச்சிட்டிங்க போல.. உங்க பேரை தெரிஞ்சிக்கலாமா? :)
ரொம்ப நன்றி கலாட்டா அம்மணி. நேத்து நேத்து கடுகு செடியில் பூ இருந்தது.தர்பூசணி மூட்டையை எடுத்து வர அவசரத்துல படம் புடிக்க மறந்துட்டேன். உங்க கமெண்ட் பார்த்து தான் ஞாபகம் வருது. அடுத்த வாட்டி போறதுக்குள்ள இருக்காதுன்னு நினைக்கிறேன். :(
பாம்பு அவுட் படம் சூப்பருங்க!!
முதல் படத்தை மாத்த முடிஞ்சா மாத்திடுங்களேன். பார்த்ததும் பயமா இருக்கு.
நன்றி தேவன்மயம்.. :)
ஹிஹி.. விக்னேஷ்வரி.. என்னைப் பார்த்து தான் யாரும் பயப்பப்டறது இல்லை..நான் படம் புடிச்ச பாம்பைப் பார்த்தாவது பயப்படட்டும்னு தான். :)
உங்கள் பதிவை படித்த பிறகு, கிராமத்துக்கு சென்று வந்ததை போல் என்னை உணர வைத்து விட்டிர்கள்.
என் நன்றிகள்.
அன்பின் சஞ்செய்
அருமை அருமை - கிராமத்து சுவடுகள் அருமை - சிறு வயதில் வய்க்காட்டில் சுத்தினது நினைவில் பசுமையாக இருக்கிறது
நல்லபடங்கள் - நல்ல பதிவு - நல்வாழ்த்துகள் சஞ்செய்
தீக்ஷிதாவின் விசில் சூப்பர் :)
வாவ்வ்வ்... படமும் செய்தியும் அருமை நண்பரே
நெறைய கத்துக்கிடலாம் போல...
மத்ததையும் படிச்சிட்டு வர்றேன்..
இதுக்கு பேர் தெரியலை. மறந்து போச்சி. இதோட விதைகள் கடுகு மாதிரி இருக்கும். இதை கடுகில் கலப்பதாகவும் சொல்வார்கள். வித்தியாசம் தெரியாது.//
விவசாயம் பண்ணி வியாபாரம் பண்றீங்க பேரே தெரியாம:)
மானம், படி, வல்லம் பற்றிய விளக்கங்கள்; //
எங்க ஊர்ல படி, மரக்கால், டிரம் அப்படின்னு சொல்லக் கேட்டிருக்கேன்.
நன்றி ஜெட்லி
நன்றி சீனா சார்
நன்றி பட்டாம்பூச்சி
நன்றி ஞானசேகரன்
நன்றி அஷோக்
நன்றி குடுகுடுப்பை ( குடும்பமே வந்து கும்மி அடிக்கிது.. :)) 0
அனைத்துமே அருமை...
//ரூம் போட முடியலைனாலும் மரத்தடியில உக்கார்ந்து யோசிப்போம்ல.. இங்கிருந்து வலது புறம் 10 அடி தூரத்துல தான் அந்த கீரி - பாம்பு சண்டை நடந்திருக்கு.//
ஆப்பிள் விழுந்து ஒருத்தர் விஞ்ஞானி ஆனார். உங்க தலைல ஒரு தேங்கா விழுந்திருந்தா நீங்க விஞ்ஞானி ஆகிருப்பீங்களா மாமா ?
அருமை...
Hな人妻たちの社交場、割り切った付き合いも当然OK!欲求不満のエロ人妻たちを好みに合わせてご紹介します。即会い、幼な妻、セレブ、熟女、SM妻、秘密、以上6つのジャンルから遊んでみたい女性を選んでください
1日5万円~が手に入るサイドビジネスのご案内です。男狂いのセレブ女性はネットで知り合った男を次々に金の力で食い散らかしています。そんな女性を手玉にとって大金を稼いでみませんか
みんなで楽しめるHチェッカー!簡単な設問に答えるだけであなたの隠されたH度数がわかっちゃいます!あの人のムッツリ度もバレちゃう診断を今すぐ試してみよう
最近流行の家出掲示板では、各地のネットカフェ等を泊り歩いている家出少女のメッセージが多数書き込みされています。彼女たちはお金がないので掲示板で知り合った男性の家にでもすぐに泊まりに行くようです。あなたも書き込みに返事を返してみませんか
性欲を持て余し、欲求不満になっている女性を金銭の対価を得て、癒して差し上げるお仕事です。参加にあたり用紙、学歴等は一切問いません。高収入アルバイトに興味のある方はぜひどうぞ
வணக்கம்,
அருமையான முயற்ச்சி, வாழ்த்துக்கள்.
சேலம் ஆத்தூர் எனது சொந்த ஊர்.
இங்கு சிக்கடி காய் என்று உங்களால் பதியப்பட்ட காய், கொத்தவரங்காய் என்றழைக்கப்படுகிறது.
நன்றி.
Mama enaku andha paambu thol venum
Enda village oda ela features pathi soniye open university pathi solala
ஹனி, இங்க என்ன வேலை உனக்கு? ஏன் மானத்த வாங்கற?.. மிதிச்சிடுவேன்.. ஓடிப் போய்டு..
Chuma bore aidchu da, athan apdi indha pakama vandhen. indha Mara nai kathaiyellam nijama, ila papaku ethum theriyathunu suthariya
Your blog is too outstanding and eye catching,you should try blogerzoom.com for advertising and marketing.
ஒரு புடி புடிக்கலாம்னு தான் பார்த்தேன்.
ஆனா “Leave your comment'க்கு கீழே பார்த்து ஆஃப் ஆயிட்டேன்!ஹி..ஹி..
படங்களுக்கு விளக்கம் சூப்பர் அண்ணா யதார்த்தம்
We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111
Best Digital Marketing Agency in Chennai
Best Content Marketing companies in Chennai
Best SEO Services in Chennai
leading digital marketing agencies in chennai
digital marketing agency in chennai
best seo company in chennai
best seo analytics in chennai