இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•9:55:00 AM
இதுவும் குழுவிளையாட்டு. அணி விளையாட்டு அல்ல. விளையாடும் எல்லோரிடமும் ஒரு நீளமான குச்சி இருக்கும். இஸ்கோல்ல வாத்தியாருங்களாண்ட ஒதை வாங்குவமே.. அதே மாதிரி குச்சி. :) . இப்போது குழுவில் ஒரு பலி ஆடு தேர்ந்தெடுக்கனும்.

பிறகு ஒரு வட்டம் போட்டு அதன் மத்தியில் அந்த பலியாட்டின் குச்சியை வைத்துவிட வேண்டும். பெரும்பாலும் எதாவது ஒரு மரத்துக்கு கீழ் தான் ஆட்டம் ஆரம்பிக்கும். பாதி வானரங்கள் மரத்துக்கு மேலையும் மீதி எல்லாம் கீழ இருக்கும்.

பலியாடு அந்த குச்சியை பாதுகாத்து பக்கத்தில் நிற்பான். மற்றவர்கள் அவனை ஏமாற்றி அந்தக் குச்சியை தங்கள் கையில் உள்ள குச்சியின் மூலம் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது வட்டத்தில் உள்ள குச்சிக்கு சொந்தக் காரன் யாரை தொடுகிறானோ அவன் அவுட். அடுத்து அவன் பலியாடாக வேண்டும்..

ஒருவேளை அவன் தொடுவதற்குள் குச்சியை தள்ளுபவன் பக்கத்தில் எதாவது ஒரு கல்லின் மீது அவன் குச்சியை தொட்டுக் கொண்டு இருந்தால், அவனை அவுட் ஆக்க முடியாது. அப்போது வேறு ஒருவன் கீழே இருக்கும் குச்சியை தள்ளிக் கொண்டு போவான். அவனை தொட முயற்சிக்கும் போது குச்சியை தள்ளிக் கொண்டு போனவன் எதாவது ஒரு கல்லின் மீது தன் கையில் இருக்கும் குச்சியை வைத்துக் கொள்வான். அந்த சமயத்தில் மற்றொருவன் வருவான். சில இடங்களின் அருகாமையில் கல் எதுவும் இருக்காது. அப்போது எவனாவது மாட்டிக் கொள்வான்.

பிறகு அவனை வைத்து காமெடி கீமெடி எல்லாம் பண்ண வேண்டும். எப்படியும் ஒவ்வொரு முறையும் 2 அல்லது 3 கிலோ மீட்டர் வரையிலும் குச்சியை தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள். சில சமயங்களில் 10 கிலோ மீட்டர் தூரம் எல்லாம் போய் இருக்கிறோம். :)

இது சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டுமே விளையாட முடியும். காரணம், இதற்கு அதிக நேரம் தேவைப்படும். சனி ஞாயிறில் ஊர் சாலைகளில் போக்குவரத்து இருக்கோ இல்லையோ எங்கள் சாணாங்கோல் போக்குவரத்து நிச்சயம் இருக்கும். :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..